வயது வந்த ஆண்களின் ஆண்குறியில் மச்சம் இருக்கலாம், தளும்பு இருக்கலாம், புடைத்த நரம்புகள் வெளித்தெரியலாம், பூப்பு மயிர்கள் வளரும் பிரதேசத்தில் முகத்தில் தோன்றுவது போன்ற சீழ்வைத்த பருக்கள்(Ingrown Hair,Cyst), விஷப்பருக்கள் கூட ஏற்பட்டு மறையலாம்.
ஆனால் அந்தரங்கப் பகுதியில் சீழ் வைத்த பருக்கள்(Pustules, or pus-filled bumps) தோன்றும் போது அவற்றை அவதானமாக கையாள வேண்டும். உடலின் மற்ற இடங்களில் அவற்றை கையாள்வது போல கையாண்டால், அவை வீங்கி மேலும் பெரிதாகி வலியை அதிகமாக்கும்.
சில ஆண்களுக்கு, அவர்களின் ஆண்குறியின் மொட்டில் கூட Pigmentation ஏற்படுவது உண்டு. அதாவது திடீரென ஆண்குறியின் மொட்டின் சில பகுதிகள் அதிக கருமை நிறம் அடைதல், அல்லது ஒரு பகுதி மாத்திரம் வெளிறிப் போதல். விட்டிலிகோ(Vitiligo) என்று அழைக்கப்படும் வெண்புள்ளி சருமப் பிரச்சனை கூட ஆண்களின் ஆண்குறியில் ஏற்படலாம்.
சாதாரணமாக ஒருவரின் உடலில் ஏற்படக் கூடிய அத்தனை சருமப் பிரச்சனைகளும் ஆண்குறியிலும் ஏற்படலாம். உதாரணமாக: தேமல் பிரச்சனை, வெண்புள்ளி(Vitiligo).
ஆண்களின் ஆண்குறி/விதைகளின் நிறம் அவர்களின் தோலின் நிறம் போல இருக்குமா? அநேகமாக இல்லை. பொதுவாக ஆணினதும் பெண்ணினதும் அந்தரங்கப் பகுதிகளின் நிறம், அவர்களின் தோலின் நிறத்தை விட கருமையாக(Dark in Color) இருக்கும். சில வேளைகளில் தோலின் நிறத்தை விட அதிகம் வெள்ளையாகவும் இருக்கலாம் அல்லது தோலின் நிறத்தின் ஒரு Dark அல்லது Light Color Shade இல் இருக்கும்.
உங்களுக்குத் தெரியுமா? சில தோல் நிலைமைகளின் காரணமாக ஆண்களின் சுன்னி முடியிலும் கூட பொடுகுத் தொல்லை ஏற்படும். அடிக்கடி சுன்னி முடியை Full Shave செய்யும் ஆண்களுக்கு தேமல் பிரச்சனைகள் கூட ஏற்படலாம்.
அதே நேரம் ஆண்குறியின் மொட்டின் கழுத்தின் கீழ் பகுதிகளில்(Corona of the Glans Penis) கோர்வையாக முத்துகள் போன்ற வெள்ளை அல்லது சருமத்தின் நிறத்தை ஒத்த மிகச்சிறிய கட்டிகள் ஒரு சங்கிலித் தொடர் போல உருவாகுவது இயல்பான ஒன்று. இதனை Pearly Penile Papules(PPP) என ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இவை ஒரு வகை எண்ணெய்ச் சுரப்பிகளாகும்(Tyson glands - கொழுப்புத்திரவத்தை சுரக்கும் சுரப்பி/Sebaceous Glands). ஆண்குறியின் மொட்டினை காயாமல் வைத்திருக்க இவை உதவுகின்றன. எல்லா ஆண்களுக்கும் இருக்கும். ஆனால் சில ஆண்களுக்கு அவை தனியாக வெளித்தெரியும். இவை ஆண்குறியின் ஒரு பாகமாகும். இதனை நோய் அறிகுறியாகக் கருத வேண்டாம். உங்களுக்கு Pearly Penile Papules(PPP) இருந்தால், கீழே Comment செய்யவும்.
மஞ்சள்-வெள்ளை நிற சிறிய கட்டிகள்/புள்ளிகள் போன்ற தோற்றத்தை உடலின் பல்வேறு இடங்களில்(உதடுகள்,விதைப்பை, ஆண்குறியின் தண்டு, பெண்குறியின் இதழகள், முகம், மேலும் பல.) பார்க்கலாம். இவற்றை Fordyce Spots (White Bumps) என்பர். இவை உரோம வளர்சியுடன்(not associated with hair follicles) தொடர்பு படாத Sebaceous Glands ஆகும். இதனை நோய் அறிகுறியாகக் கருத வேண்டாம்.
பொதுவாக ஆண்களுக்கு தம்முடைய ஆண்குறியை பற்றி என்னவெல்லாம் சந்தேகம் வரும்?
1. ஆண்குறியின் அளவு - ஒரு பெண்ணை திருப்திப்படுத்த போதுமா? 3 Inches இருந்தாலே போதும். கடுகு சிறிதானாலும் காரம் பெரிதாக இருக்க வேண்டும். உடலுறவுக்குத் தேவை ஆண்குறியின் அளவு அல்ல, அதன் விறைப்புத் தன்மையாகும். கடப்பாரை அளவுக்கு நீளமாக வைத்திருந்தாலும், அதனால நட்டுக் கொண்டு நிற்க முடியாவிட்டால் அதனை வைத்து எதுவும் பண்ண முடியாது. எந்த பிரயோசனுமும் இல்லை.
2. விந்து வெளியேற எடுத்துக் கொள்ளும் நேரம் - சில ஆண்களுக்கு மணிக்கணக்கா கூட விந்து வெளியேற்றாமல் உடலுறவு வைத்துக் கொள்ள முடியும். ஆனால் அநேகமான ஆண்களுக்கு சீக்கிரம் விந்து வெளிவந்து விடும். அவர்கள் முன் விளையாட்டுக்களில்(Foreplay) அதிக நேரம் செலவிட்டாலே போதும்.
3. வேறு ஆண்களின் ஆண்குறியை பார்த்து விட்டு, அதனுடன் தம்முடைய ஆண்குறியை ஒப்பிட்டு, ஆண்குறியின் தோற்றத்தை, அமைப்பை வைத்து தமக்கு ஏதாவது குறைபாடு உள்ளதோ என்று எண்ணுவது. இறைவன் ஜாடிக்கு ஏற்ற மூடியையே நமக்கு கொடுத்திருக்கிறான். எல்லோருக்கும் தோற்றம் எப்படி ஒரே மாதிரி இருக்காதோ, அது போல அவர்களின் ஆண்குறியின் அளவு, அமைப்பு என்பனவும் ஒரே மாதிரி இருக்காது.
20 - 23 வயது கடந்தும் உங்களால் உங்கள் ஆண்குறியின் மொட்டை, அதன் முன் தோலை பின்னால் நகர்த்தி வெளியே எடுக்க முடியாவிட்டால்(Phimosis நிலைமை), அவசியம் வைத்திய ஆலோசனை பெற்று, தேவை ஏற்பட்டால் சுன்னத் செய்து கொள்ளவும்.
ஆண்களின் ஆண்குறியில் நரம்புகள்(இரத்தக் குழாய்கள்/Veins) தெரிவது, மச்சம் தோன்றுவது இயல்பான ஒன்று. ஆண்களின் ஆண்குறியின் மொட்டின் கழுத்துப் பகுதியின் விளிம்பில் சிறிய பருக்கள் போன்ற அமைப்பு வரிசையாக தோன்றுவதும் உண்டு. அதனை Pearly Penile Papules என்பர். சிலர் அதனை பால்வினை நோய்(STI) தொற்றின் அறிகுறி என நினைத்து கவலைப்படுவதும் உண்டு.
அடிவயிற்றில் மாத்திரமல்லாது பூப்பு மயிர்கள்(Pubic Hair) ஆண்குறியின் தண்டிலும், விதைப்பையிலும் கூட வளரும். அந்தரங்க முடிகள் வளரும் பகுதியில் கூட Black Heads, White Heads உருவாகலாம். அடிக்கடி அந்தரங்கப் பகுதியில் உள்ள முடிகளை Shave செய்வதனால், இறுக்கமான உள்ளாடைகள் அணிவதால் கூட அவ்விடங்களில் சீழ் வைத்த பருக்கள் உருவாகலாம்.
காலையில் எழுந்து ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்திப் பார்த்தால் உள்ளே வெள்ளை நிற பசை போன்ற தோல் கழிவுகள்(Smegma) இருக்கும். அவற்றை குளிக்கும் போது நீரினால் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
Read More: வயது வந்த ஆண்கள் அவசியம் இந்த சுய பரிசோதனையை மாதம் ஒரு முறையாவது செய்ய வேண்டும்
Read More: பூப்படையும் போது ஆண்களின் ஆண்குறியில் ஏற்படும் மாற்றங்கள்.
Read More: வயது வந்த ஆண்களின் ஆண்குறியில் எவையெல்லாம் இருக்கக் கூடாது?
யாருக்கெல்லாம் குஞ்சுல மச்சம் இருக்கு?
ReplyDeleteஎன்னோடதில இருக்கு. குஞ்சுல மச்சம் இருந்தா.. மேட்டர் செமையா பண்ணுவாங்களாம், உண்மையா?
வதந்திகளை நம்பாதீங்க!
Delete