மத நம்பிக்கைகளை காரணம் காட்டி, அல்லது குடும்ப வழக்கத்தைக் காரணம் காட்டி முஸ்லிம், யூத இன ஆண்களுக்கும், தமிழர்களில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஆண்களுக்கும் ஆண்குறியின் முன் தோல் நீக்கப்படும் சடங்கு அவர்களின் சிறுவயதில் நடப்பதுண்டு. ஆண்களின் ஆண்குறியின் முன்தோலை நீக்குவதை விருத்தசேதனம் எனவும் அழைப்பர்.
இதற்குக் காரணமாக அவர்கள் சுத்தத்தை முன்னிறுத்தினாலும் உண்மையில் அதன் பின்னால் ஒழிந்திருப்பது ஆண்கள் சுய இன்பம் செய்யும் பழக்கத்தை நீக்கும் அல்லது கட்டுப்படுத்தும் உபாயமாகும். முந்தைய காலங்களில் ஆண்கள் சுய இன்பம் செய்வது பாவமான செயலாக பார்க்கப்பட்டது.
சுன்னத் ஏன் மூட நம்பிக்கையானது? சுன்னத் செய்து ஆண்குறியின் முன்தோலை நீக்குவது மூட நம்பிக்கை அல்ல. ஆனால் அதற்காக மத போதகர்கள் சொல்லும் காரணங்கள் மூட நம்பிக்கை சார்ந்ததாகும். ஆண்கள் சுய இன்பம் செய்யும் பழக்கத்திற்கு அடிமையாவதைத் தவிர்ப்பற்காக முன்னோர்கள், ஆண்களின் ஆண்குறியின் முன் தோலை நீக்கும் செயலை சடங்காக அறிமுகம் செய்தனர்.
நீர் வளம் நிறைந்த நாடுகளில் உள்ள ஆண்கள் ஆண்குறியை நீரில் அலசி சுத்தம் செய்வது ஒன்றும் கடினமான காரியம் இல்லை. ஆனால் பாலைவனப் பகுதிகளில், மத்திய கிழக்கு நாடுகளில் நீரின் பயன்பாட்டை குறைப்பதற்காகவும், தொழுகையில் ஈடுபட உடலை சுத்தம் செய்யும் போது, ஆண்குறியை இலகுவாக சுத்தம் செய்ய வசதியாக இருக்கவும், இஸ்லாமிய ஆண்களுக்கு சுன்னத் செய்யும் பழக்கம் கொண்டு வரப்பட்டது. இதனை ஆடுஜீவிதம்(Aadujeevitham 2024) படம் பார்ப்பதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
பிறமலை கள்ளர் சமூகத்தில் பிறந்த ஒவ்வொரு ஆணுக்கும் இது மிக முக்கியமான சடங்கு. பெண்ணுக்கு எப்படி பூப்புனித நீராட்டுவிழாவோ, அது போல வயதுக்கு வரும் முன்னர் ஆண் பிள்ளைகளுக்கு மார்க்க கல்யாணம் நடைபெறும்.
கிராமங்களில் மார்க்க கல்யாணம் மிக முக்கியமான திருவிழா. ஒத்த வயதான சிறுவர்கள் சடங்கின் முந்திய நாள் மேளதாளத்துடன் குதிரையில் பவனி வருவார்கள். மறுநாள் அதிகாலை திரும்பவும் ஊர்வலமாக கிராமத்தின் நீர்நிலைகளுக்கு அவர்கள் கூட்டிசெல்லப்படுவார்கள்.
அங்கு காத்திருக்கும் கிராமத்தின் நாவிதர்(பொதுவாக அம்பட்டன் என்று அழைக்கப்படுகின்றனர்) கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த சடங்கை செய்வார். உடனே சிறுவர்கள் வலி தெரியாமல் இருக்க குளத்திலோ ஊரணியிலோ தள்ளிவிடப்படுவார்கள்.
சிறுவர்களின் ஆண் உறவினர்கள் அவர்களுடன் இருப்பர். பிறகு காவி உடுத்தி சிறுவர்கள் ஆளுக்கு ஒரு இரும்பு கம்பியுடன் வீடு திரும்புவார்கள். அவர்களை எதிர்பார்த்து கறிவிருந்து வீடுகளில் காத்திருக்கும். அடுத்த ஒரு வாரம் கிராமம் அமர்க்களப்படும். சடங்கு முடிந்த சிறுவர்களுக்கு தாய்மாமன் சீர் செய்வது, பெண் உறவினர்களின் கிண்டலும் கேலியும் என கோலாகலமாக நாட்கள் நகரும்.
மார்க்க கல்யாணம் செய்த காயம் ஆற, மூலிகைப் புகை ஒத்தடம் கொடுப்பதும் உண்டு. ஒரு குழியில் நெருப்பு மூட்டி அதன் மேல் மூலிகைகளை தூவி சிறுவர்களை காலை அகட்டிவைத்து நிற்க சொல்வார்கள். அந்த ஒத்தடம் காயத்துக்கு இதமாக இருக்கும். இந்த சடங்கை Singapore Saloon(2024), Biriyaani(2019), Madha Yaanai Koottam(2013) போன்ற திரைப்படங்களில் அழகாக காட்சிப்படுத்தியிருப்பர்.
முன்தோல்(Foreskin) உள்ள ஆண்கள் சுய இன்பம் செய்யும் போது அதிக சுகத்தை அனுபவிப்பர். அந்த சுகம் சுன்னத் செய்த ஆண்களுக்கு சுய இன்பம் செய்யும் போது கிடைக்காது.
அதனால் அவர்கள் அதிகம் சுய இன்பம் செய்ய விரும்பமாட்டார்கள். அதே நேரம் சுன்னத் செய்த ஆண்களின் ஆண்குறியின் மொட்டு காய்ந்து போயிருக்கும். ரோஜாப் பூ போன்று Fresh ஆக, உணர்ச்சி மிகுந்து இருக்காது. அதன் காரணமாக அவர்களுக்கு சுய இன்பம் செய்வதில் பெரியளவு ஆர்வம் இருக்காது.
ஆண்கள் சுன்னத் செய்தால்(Cut) எயிட்ஸ்(HIV) மாத்திரமில்லை, சிபிலிசு(Syphilis) மற்றும் கொணோறியா(Gonorrhoea) போன்ற பால்வினை நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவடைகிறதாம். அதே போன்று சுன்னத் செய்யாத சில ஆண்களால்(Uncut - HPV Vaccination போடாத/HPV தொற்று ஏற்பட்ட), அவர்களின் பெண் துணைக்கு HPV(HPV Infection/Cervical Cancer) தொற்று ஏற்படும் நிலைமையும் தவிர்க்கப்படுகிறதாம் என பல வைத்தியர்கள், ஆண்கள் சுன்னத்(விருத்தசேதனம்) செய்து கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துகிறார்கள்.
உண்மையில் சுன்னத் செய்த ஆண்களுக்கு எயிட்ஸ் தொற்று ஏற்படாதா? அப்படியில்லை. தொற்று ஏற்படுவதற்காக வாய்ப்பு குறைவு என்கிறார்கள். சுன்னத் செய்த ஆண்களும் சரி, சுன்னத் செய்யாத ஆண்களும் சரி ஆணுறை அணியாமல் கண்டவர்களுடன் கலவியில் ஈடுபட்டால் பால்வினை நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
ஆண்களின் ஆண்குறியின் முன் தோலில்(Foreskin) HIV வைரஸ்களை கவர்ந்திழுக்கக் கூடிய(HIV Receptors) Target Cells அதிகமாக உள்ளதாம். அதன் காரணமாகவே HIV தொற்று உள்ள நபருடன் கலவியில் ஈடுபடும் போது, Circumcised ஆண்களை விட, சீக்கிரமாக சுன்னத் செய்யாத ஆண்களுக்கு HIV தொற்று பரவலடைந்து விடுகிறதாம்.
இருப்பினும் சுன்னத் செய்வதை வழமையாகக் கொண்ட ஆபிரிக்க, அமெரிக்க நாடுகளில் இன்னமும் HPV Infection, HIV, Sexually transmitted infections (STIs) போன்றவை தீவிரமடைந்து கொண்டு தான் உள்ளது. இது பல மருத்துவர்களின் சுன்னத் செய்வதற்கு ஆதரவான கருத்துக்களை நகைப்புக்குள்ளாக்கிறது. அதன் காரணமாக பலர், வைத்தியர்கள் சுன்னத் செய்து கொள்வதை முன்னிலைப்படுத்தாமல், Condom பாவிப்பதையும், PrEP உபயோகப்படுத்துவதையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்கிறார்கள்.
ஆண்கள் சுன்னத் செய்வதால் அவர்களின் ஆண்குறியின் மொட்டில் உள்ள Erogenous Zone பாதிப்படைகிறதாம். அதன் காரணமாக ஆண்குறியின் மொட்டில் உணர்ச்சி குறைவடைந்து காய்ந்து போய்விடுகிறதாம்.
சுன்னத் செய்து கொள்வதால் ஆண்களின் சுய இன்பம் செய்யும் பழக்கம் மாத்திரமே கட்டுப்படுத்தப்படுவதாக Genital Mutilations(பாலுறுப்புகளை சிதைத்தல் அல்லது மாற்றம் செய்தல்) இக்கு எதிரானவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
Read More: ஆண்கள் அவசியம் சுன்னத் செய்ய வேண்டுமா?
ஆண்களுக்கு சிறு வயதில் சுன்னத் செய்வதை விட, வயதுக்கு வந்த பிறகு சுன்னத் செய்வதன் மூலமே பால்வினை நோய்களுக்கு எதிரான பாதுகாப்பை உறுதி செய்யலாம் என சிலர் கருதுகின்றனர். இவை வெறும் வதந்திகள், மற்றும் கட்டுக்கதைகள் மாத்திரமே ஆகும்.
ஆனால் சிறுவயதில் சுன்னத் செய்வதை விட, பசங்க வயதுக்கு வந்த பிறகு சுன்னத் செய்வது அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் சத்திர சிகிச்சையாகும். இந்தக்காலத்தில், அதிக வலி இல்லாமல், லேசர் பாவித்து, கத்தியில்லாமல் கண் இமைக்கும் நேரத்தில் சுன்னத் செய்யும் முறைகள் உள்ளன.
Traditional Circumcision - பாரம்பரிய முறைப்படி ஆண்குறியின் முன் தோலை வெட்டும் சுன்னத் செய்யும் சடங்கு
Read More: செக்ஸ் செய்யும் போது பெண்களை திருப்திப்படுத்த ஆண்குறியின் முன்தோல் எவ்வகையில் உதவும்?
Comments
Post a Comment