Skip to main content

Posts

Showing posts with the label Thermal Wear

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் லுங்கி, வேட்டி அணிந்து விமானத்தில் பயணிக்கலாமா?

பொதுவாக ஆண்களோ, பெண்களோ மற்றவர்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தாத எந்தவொரு ஆடையையும் அணிந்து விமானத்தில் பயணம் செய்ய முடியும். அந்த வகையில் ஆண்களால் லுங்கி, வேட்டி அணிந்து விமானப் பயணங்களை மேற்கொள்ள முடியும். லுங்கி, வேட்டி என்பனை இடுப்புக்குக் கீழ் நம் உடலை முழுமையாக மறைக்கக் கூடிய ஆடையாகும். ஆனால்! அணிந்திருக்கும் லுங்கியையோ, அல்லது வேட்டியையோ முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டிக் கொண்டு விமான நிலையத்தில் நிற்பதையோ, அல்லது விமானத்தில் பயணிப்பதையோ நாகரீகமாக, சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட செயலாக கருத முடியாது. அதற்குக் காரணம், நமது கலாச்சாரத்திலேயே வேட்டி, லுங்கியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டிக் கொண்டு இருக்கும் போது பெரியவர்கள் யாராவது நம் முன்னால் வந்தால், அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் முகமாக, முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டிய வேட்டியின்/லுங்கியின் கட்டை அவிழ்த்து, கீழே விட்டுக் கொண்டு நிற்பதுண்டு. பொது இடங்களில் ஆண்கள் லுங்கியை/வேட்டியை முழங்கால்களுக்கு மேல் தூக்கி, மடித்துக் கட்டிக் கொண்டு நிற்பது நாகரீகமான செயல் அல்ல.   நேர்த்தியாக வேட்டி அணிந்திருக்கும் ஆண்கள்...