பொதுவாக ஆண்களோ, பெண்களோ மற்றவர்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தாத எந்தவொரு ஆடையையும் அணிந்து விமானத்தில் பயணம் செய்ய முடியும். அந்த வகையில் ஆண்களால் லுங்கி, வேட்டி அணிந்து விமானப் பயணங்களை மேற்கொள்ள முடியும்.
லுங்கி, வேட்டி என்பனை இடுப்புக்குக் கீழ் நம் உடலை முழுமையாக மறைக்கக் கூடிய ஆடையாகும். ஆனால்! அணிந்திருக்கும் லுங்கியையோ, அல்லது வேட்டியையோ முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டிக் கொண்டு விமான நிலையத்தில் நிற்பதையோ, அல்லது விமானத்தில் பயணிப்பதையோ நாகரீகமாக, சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட செயலாக கருத முடியாது.
அதற்குக் காரணம், நமது கலாச்சாரத்திலேயே வேட்டி, லுங்கியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டிக் கொண்டு இருக்கும் போது பெரியவர்கள் யாராவது நம் முன்னால் வந்தால், அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் முகமாக, முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டிய வேட்டியின்/லுங்கியின் கட்டை அவிழ்த்து, கீழே விட்டுக் கொண்டு நிற்பதுண்டு.
விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகமாக இருக்கும். நம்மூர் விமான நிலையங்கள் என்றால், பரவாயில்லை, ஆனால் வெளி நாட்டு விமான நிலையங்கள் என்றால், அவர்கள் சில வேளைகளில் வேட்டிக்குள்/லுங்கிக்குள் கையை விட்டு Body Check செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்,
அல்லது வேட்டிக்குள்/லுங்கிக்குள் Metal Detector யை விட்டு ஆட்ட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படலாம். அப்போது உள்ளே நீங்கள் ஜட்டி அணிந்திருக்காவிட்டால், நிலைமையை யோசித்துப் பார்த்தீர்களா?
நீங்கள் செய்யும் விமானப் பயணம் 3 மணித்தியாலத்திற்கு அதிகமாக இருந்தால், அல்லது Winter Season உள்ள/பனிக் கால நிலை நிலவும் நாட்டுக்காக இருந்தால் உங்களால் வேட்டி, லுங்கி அணிந்து பயணம் செய்ய முடியாது.
அதற்குக் காரணம் வெறும் லுங்கி/வேட்டி மாத்திரம் அணிந்து அந்தக் குளிரை உங்களால் தாங்கிக் கொண்டிருக்க முடியாது. அவசியம் நீங்கள் Thermal Wear அணிந்தே வேட்டி கட்ட வேண்டும்.
வேட்டி, லுங்கி என்பன நமது கலாச்சாரத்துடன் ஒன்றிய ஆடைகள் தான், ஆனால் அவற்றை எல்லை தாண்டி காட்சிப் படுத்த வேண்டுமா? அந்த ஆடை நீங்கள் இருக்கப் போகும் சூழ் நிலைக்கு ஏற்றதா என்பதை யோசித்து லுங்கி, வேட்டி அணிந்து விமானப் பயணங்களை மேற்கொள்ளவும்.
Keywords: லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது, லுங்கியத்தான் எறக்கி கட்டு சூத்து தெரியிது.
Comments
Post a Comment