பெண்கள் பூப்படையும் போது அவர்களை வழிக்காட்ட பெற்றோர்களும், உறவினர்களும், சுற்றத்தாரும் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் சிறிதளவைக் கூட பசங்க பூப்படையும் போது அவர்களை வழிக்காட்ட யாரும் எடுத்துக் கொள்வதில்லை. அதற்குக் காரணம் ஆண்கள், அவை தொடர்பாக தேடித் தெரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையா? ஆனால் இந்த நம்பிக்கை எந்தளவுக்கு கண்மூடித்தனமானது என்பதை வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்கள் உள்ள குடும்பங்கள் புரிந்து கொள்வதில்லை.
பசங்க பூப்படையும் போது அவர்களை கண்களைக் கட்டி காட்டிலே விட்டது போல இருக்கும். "பாலியல் கல்வி" என்பது முகஞ்சுழிக்கக் கூடிய விடையம் என கருதி, அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் Sex Education என்ற பெயரில் பாடசாலைகளிலும் கொடுப்பதில்லை.
ஆகவே அவர்கள் சமூகத்தில் இருந்தும், நண்பர்களிடம் இருந்தும், இணையத்தளங்களிலும் இருந்தே பொதுவாக தேடித் தெரிந்து கொள்கிறார்கள்.
ஆனால் அவர்கள் எவ்வாறான விடையங்களைத் தேடித் தெரிந்து கொள்கிறார்கள் என்பதை வைத்தே அவர்களின் பதின்ம வயது(Teenage) எப்படி அவர்களது வாழ்க்கையை மாற்றியமைக்கின்றது என்பதை முடிவு செய்ய முடியும். பசங்க வழிதவறிப் போகும் காலம் இதுவாகும்.
ஆண்கள் பூப்படைவது தொடர்பாகவும், ஆண்கள் பூப்படையும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாகவும் பொதுவான தகவல்கள் இணையத்தளங்களில் இருந்தாலும் ஒரு குடும்ப அங்கத்தவராக எப்படி டீனேஜ் பசங்களோட அது பற்றி எப்படிப் பேசலாம் என்பது தொடர்பாக இங்கே பார்க்கலாம்.
ஒரு தாயால் எல்லா விடையங்கள் தொடர்பாகவும் பசங்க கூட பேச முடியாவிட்டாலும், ஒரு தந்தையால் இது பற்றி தயக்கமில்லாமல் பேச முடியும்.
கட்டாயம் தந்தையால் மாத்திரம் தான் முடியுமா? இல்லை. அண்ணன், மாமா, சிந்தப்பா, பெரியப்பா என குடும்ப அங்கத்தவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
நீங்கள் ஒரு தந்தையாக இருந்தால், வாரம் ஒருமுறையாவது உங்கள் பசங்களை குளிப்பாட்டுங்க. குளிப்பாட்டும் போது "இனி நீ பெரிய மனுஷனாக போற, இங்க அங்க எல்லாம் முடி வளரும்" ன்னு விளையாட்டோடு விளையாட்டாக பேசலாம். அந்தரங்கப் பகுதியைக் கை காட்டி "பத்திரமா பாத்துக்கனும், அடிக்கடி அங்க கை வைக்கக் கூடாது" ன்னு சொல்லலாம்.
பொதுவாக ஆண்கள் அவர்களின் உடலில் வளரும் முடியை(Body Hair) மழிக்க மாட்டார்கள். ஆனால் Trim செய்வர். சில ஆண்கள் விசேட தேவையின்(Fitness/Highlight Abs, Fashion Show, Photo shoot, etc.) நிமித்தமாக தமது உடலில் உள்ள உரோமங்களை Waxing செய்து நீக்குவதும் உண்டு. ஆனால் ஆண்களுக்கு காடு மாதிரி உடல் முழுதும் முடி வளர்ந்திருந்தால் தன் அழகு. விரும்பினால், அவற்றை கத்தரித்து நேர்த்தியாக்கலாம்.
பொது இடத்தில் வைத்து விதைப்பையுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் வியர்வையில் ஊறிய ஜட்டியை இழுத்து, தனியாக எடுத்து விடும் ஆண்:
சில பழக்கங்களை சிறுவயதில் இருந்தே பழக்கலாம். உதாரணமாக: அதிகாலையில் சீக்கிரம் எழும்புதல். காலையில் எழுந்ததும் படுத்த படுக்கையை நேர்த்தியாக வைக்க வேண்டும். கட்டிலில் படுப்பவராக இருந்தால் நேர்த்தியாக Bed Making செய்யவும், பாயில் படுப்பவராக இருந்தால் பாயையும் போர்வையையும் மடித்து வைக்கவும், இரவு அணிந்த ஆடைகளை காலையில் குளிக்கும் போது அலசிப் போடவும் பழக்கலாம்.
14-15 வயதான பிறகு, தனியாக பேசும் போது...
"ஒன்னுக்குப் போறப்ப(Pissing/Urine) முன் தோல(Foreskin) பின்னால தள்ளிப் போகனும். குளிக்கிறப்ப முன் தோல பின்னால் தள்ளி கழுவனும்" போன்ற சுகாதார விடையங்கள் தொடர்பாகவும் பேசலாம். ஏதாவது பிரச்சனையாக இருந்தால் முதல் ஆளாக உங்க கிட்ட வந்து கேட்கச் சொல்லலாம். அந்தளவுக்கு பதின்ம வயதில் உள்ள பசங்க கூட தோழமையுடன் பழக வேண்டும். "தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன்" ன்னு சும்மாவா சொல்றாங்க.
இனிமேல் ஆண்குறி அடிக்கடி விறைப்பாகி தடிப்பாகும், பெரிதாகும். அது இயல்பான ஒன்று தான். அது வெளித்தெரியாமல் இருக்க அவசியம் ஜட்டி போடனும். ஜட்டி போடாமல் வெளியே போகக் கூடாதுன்னு சொல்லனும்.
நீங்க தாடி, மீசை Shave/Trim செய்யும் போது அவனை உதவிக்குக் கூப்பிடலாம். தாடி, மீசையை மழிக்கும் போது பேச்சோட பேச்சாக அதில் உள்ள நுனுக்கங்களை சொல்லிக் கொடுக்கலாம்.
Dress வாங்க கடைக்குக் கூட்டிட்டுப் போகலாம். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கான ஜட்டி Section க்குக் கூட்டிட்டுப் போய் ஆண்களின் ஜட்டி வகைகளை அறிமுகம் செய்யலாம். அவனுக்கு விரும்பியதை வாங்கிக் கொடுக்கலாம்.
உடற்பயிற்சி, விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகமாக இருந்தால் அவனுக்கு Jockstrap ஜட்டி வாங்கிக் கொடுக்கலாம்.
சிறுவயது முதல் ஜட்டி அணியும் பழக்கம் இல்லாவிட்டால், வயதுக்கு வரும் வயதிலாவது அவனை ஜட்டி அணியப் பழக்க வேண்டும். இரவில் தூங்கும் போது ஜட்டியோட தூங்க வகைக்கலாம். குளிக்கும் போது ஜட்டியோட குளிக்க வைக்கலாம்.
டீனேஜ் பசங்கள, அவங்க அணியும் ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகளையும், அவர்கள் இரவில் அணியும் ஆடைகளையும் அவர்களே துவைக்க(Wash) பழக்க வேண்டும். இதன் மூலம் தூக்கத்தில் விந்து வெளியேறுவது தொடர்பாகவும், உடல் சுத்தம் தொடர்பாகவும் தேவையான புரிதல் கிடைக்கும்.
அவன் முன்னாடி நீங்க சாதாரணமாக லுங்கியின் உதவியுடன் Dress மாற்றலாம். நீங்களும் வீட்டில் இருக்கும் போது லுங்கி/வேட்டி போன்றவற்றை அணியலாம். சில விடையங்களை, அவர்கள் நம்மைப் பார்த்துத் தான் கற்றுக் கொள்வார்கள்.
Public Toilets/Rest Room, Men's Locker Room(ஆண்கள் ஆடை மாற்றும் பகுதி) போன்றவற்றிற்கு அவர்களை அழைத்துச் செல்லலாம். Rest Room போகும் போது அருகருகே இருக்கும் Urinals யைப் பயன்படுத்திக் கூட சிறுநீர் கழிக்கலாம்.
பதின்ம வயதில் உள்ள பசங்களை கட்டாயப்படுத்தி லுங்கி/சாரம் கட்ட பழக்க வேண்டும். ஆரம்பத்தில் முரண்டு பிடித்தாலும், அதன் அருமையை உணர்ந்ததும் தயக்கமில்லாமல் அணிவர்.
இடுப்பில் அரைஞாண் கயிறைக் கட்டி, அதனை எப்படி லுங்கி, வேட்டி அணியும் போது பயன்படுத்துவது என சொல்லிக் கொடுக்கலாம்.
வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்களுக்கு அவர்களின் பிறந்த நாள் பரிசாக Razor, Shaving Creams, Trimmers, Lungi, Veshti, Banniyan, Underwear போன்றவற்றையும் கொடுக்கலாம்.
Supermarket, Shopping Mall போன்ற இடங்களுக்குக் கூட்டிக் கொண்டு செல்லும் போது அங்கு காண்டம்(Condom) விற்கும் Section பக்கம் கூட்டிட்டுப் போய் அது தொடர்பாக ஒரு சிறு அறிமுகத்தையும் கொடுக்கலாம்.
Tips: பதின்ம வயதின் ஆரம்பத்திலேயே உங்கள் பிள்ளைகளுக்கு கையெழுத்துப் போட ஊக்கப்படுத்த வேண்டும். பிற்காலத்தில் Signature இன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு விளக்கப்படுத்த வேண்டும். உங்களுக்கான Signature யை நீங்கள் எந்த மொழியிலும் போடலாம். அவசியம் ஆங்கிலத்தில் தான் போட வேண்டும் என்று இல்லை. நீங்கள் உருவாக்கும் உங்களுக்கான கையெழுத்தை உங்களால் மாத்திரமே இலகுவாகப் போடக் கூடியதாக இருக்க வேண்டும். அதே நேரம் எப்போதும் ஒரே மாதிரி Signature போடவும் பயிற்சி எடுக்க வேண்டும்.
பழைய ஊர் கதைகள், வாழ்க்கை அனுபவங்களைப் பகிரும் போது கற்பனையாகவாவது சிகரெட், போதைப் பொருள் பாவிப்பது சம்பந்தமாக சோகமான கதைகளை சொல்லலாம். இதன் மூலம் போதைப் பொருள் பாவனை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.
ஆபாசப் படங்கள் பார்ப்பதாக, சுய இன்பம் செய்யும் பழக்கம் இருப்பதாக உணர்ந்தால் அது தொடர்பான விழிப்புணர்வைக் கொடுக்கத் தவறக் கூடாது.
விழிப்புணர்வுனா என்னனு கேட்குறீங்களா? அளவுக்க அதிகமாக கை அடித்தால் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி வாழ்க்கையே வீணாகிடும். எல்லாத்துக்கும் ஒரு வயசு இருக்குன்னு சொல்லுங்க.
மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை தப்பில்லை என்றும் சொல்லுங்க. அந்த எண்ணம் வரும் போது கவனத்தை உடற்பயிற்சி செய்யும் பக்கம் திருப்ப சொல்லுங்க. ஒரு வயது வரைக்கும் தான் ஆண்களின் சுய இன்பம் செய்யும் பழக்கத்தை கட்டுப்படுத்த முடியும். அதன் பின் அதைக் கட்டுப்படுத்துவது அவன் கையில் தான் உள்ளது. குறைந்தது 20-23 வயது வரையாவது உங்கள் பிள்ளைகளின் சுய இன்பம் செய்யும் பழக்கத்தைக் கட்டுப்படுத்த முயற்சியுங்கள். அப்புறம் அவங்களே கையை அடக்கி வைத்திருப்பார்கள்.
ஆண்கள் போதைப்பொருள் பாவிக்காமல், சிகரெட்/பீசி/சுருட்டு புகைக்காமல், ஆபாசப் படங்கள்(Porn, Sex Videos) பார்க்காமல், அதிகம் கை அடிக்காமல், அதிகம் செக்ஸ் வைத்துக் கொள்ள அலையாமல், மது அருந்தாமல் எவ்வாறு சந்தோஷமாக, நிம்மதியாக இருப்பது?
இவற்றை செய்யும் போது மூளையில் சுரக்கப்படும் Chemicals களை வேறு வழியில் சுரக்கச் செய்வதன் மூலம் மேலே குறிப்பிட்ட எதனையும் செய்யாமல் சந்தோஷமாக இருக்கலாம்.
உங்களுக்குத் தெரியுமா? வாழ்க்கை இருண்டு விட்டதாக நினைப்பவனுக்கும் உடற்பயிற்சி தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.
உடற்பயிற்சி செய்வது தொடர்பான ஆர்வத்தைத் தூண்டலாம். உதாரணமாக: பேசிக் கொண்டிருக்கும் போது Chest Workout பண்ணினா நெஞ்சு அகலமாகும். பிட்டப்பகுதிகளைப் பெரிதாக்கினாத் தான் பொண்ணுங்க பார்ப்பாங்க. அதுக்கு Glute Exercise பண்ணனும்ன்னு பேச்சுக் கொடுத்து அவர்களின் உடற்பயிற்சி பற்றிய தேடலை பெரிதாக்கலாம்.
ஆபாசப்படம் பார்ப்பதைப் பார்த்தால் அதில் காண்பிக்கப்படுவது எல்லாம் உண்மை இல்லை. எப்படி ஒரு திரைப்படம் எடுப்பார்களோ அப்படி தான் பல நாட்கள் எடுத்து ஆபாசப்படம் எடுப்பார்கள். அதில் காண்பிக்கப்படுவது எல்லாம் உண்மை இல்லை. ஆண்களால் நீண்ட நேரம் புணர முடியாது. அதே நேரம் ஒரு பெண்ணை திருப்திப்படுத்த நீளமான தடித்த ஆண்குறி தேவையில்லை. ஒரு 3-inch இருந்தாலே போதும். ஆண்குறியை எல்லாம் பெரிதாக்க முடியாது. ஜாடிக்கு ஏற்ற மூடியைத்தான் கடவுள் வைத்திருப்பார்.அதைப் பாதுகாக்காமல் விட்டால், அல்லது அதை வைத்து திருப்தி அடையாவிட்டால் வாழ்க்கையே வீணாகிவிடும்.
Leak ஆன ஆபாச வீடியோக்களில் இருப்பவர்கள் அவமானத்தால் தற்கொலை கூட செய்திருக்கலாம் என்பதையும் அவர்களுக்குப் புரிய வையுங்கள். இது மனசு அலை பாயுற வயசு. 20-23 வயது வரை எக்காரணம் கொண்டும் நிர்வாணமாக Camera முன் நிற்க வேண்டாம் என்று சொல்லுங்க. அப்படியே ஏதாவது ஏடா கூடமா நடந்தா அதை தைரியமா எதிர்கொள்ள சொல்லுங்க. தற்கொலை பண்ணினா வீடியோ Delete ஆகாதுன்னு சொல்லுங்க. ஆனால் Police இல் Complaint பண்ணினா Delete பண்ணலாம்னு சொல்லுங்க.
சம்பந்தப்பட்ட இணையத்தளங்களை(Porn Sites, Social Media Sites, Video/File Hosting and Sharing Sites, etc) தொடர்பு கொண்டும் Leak ஆன Photos, Videos களை அழிக்கலாம். சமூகவலைத்தளங்களில் கசிந்த உங்கள் ஆபாசப் படங்கள், வீடியோக்களை Report செய்தும் நீக்கலாம். அதற்கு Report செய்யும் போது Privacy/Non-Consensual Nudity என்பதில் கீழ் Report செய்ய வேண்டும்.
Leaked Photos, Videos யை பயத்தில் யாரும் நீண்ட நாட்களுக்கு அவர்களின் Phone ல வைத்து இருக்க மாட்டார்கள், ஆகவே காலப் போக்கில் அதுவே அழிந்து விடும்.
Video Call ல அந்தரங்கமா பேசும் போது அந்தப்பக்க இருக்கிறவர் நிஜமாகவே உண்மையான ஆள் தானா என்பதை உறுதி செய்யுங்கள். ஏற்கனவே Record செய்யப்பட்ட வீடியோவை Video Call இல் Play செய்யக் கூடிய வகையில் Fake Camera App களும் உள்ளன. இணையம் ஆபத்தானது.
Video Call Record பண்ணி உங்களை யாராவது மிரட்டினால் தைரியமாக காவல் துறையின் உதவியை நாடுங்கள். அவர்களின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்தால் அவர்கள் உங்களை விபச்சாரத்தில் கூட தள்ளிவிடுவார்கள்.
வயதுக்கு வரும் வயதில் ஆண்களுக்கு காண்டத்தை(Condom/ஆணுறை) கண்ணில் காட்டாவிட்டாலும் காண்டத்தைப் பற்றி ஒரு சிறு அறிமுகமாவது Teenage வயதில் கொடுக்க வேண்டும்.
சமூகத்தில் உள்ள பால்வினை நோய்களிடம் (பாதுகாப்பற்ற செக்ஸின் மூலம் பரவும் தொற்று நோய்கள், எயிட்ஸ்) இருந்து காண்டம் அணிவதன் மூலம் எப்படி நம்மைப் பாதுகாக்கலாம் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஆண்கள் எத்தனை வயதில் தமது ஆண்குறியின் அளவை முடிவு செய்ய முடியும்?
பசங்க வயசுக்கு வந்ததற்கான அறிகுறிகளில் பிரதானமாக இவற்றைக் கருதலாம்,
ஒரு டீனேஜ் பையனிடம் எதை சொல்லலாம், எதைச் சொல்லக் கூடாது என்பது உங்களை விட வேறு யாருக்கும் தெரியாது. ஏன் என்றால், நீங்களும் அவன் வயதைக் கடந்து தான் வந்திருக்கிறீர்கள் (Read More)
குறிப்பு: 21-23 வயது வரை ஆண்களால் தீர்மானங்களை சிறப்பாக மேற்கொள்ள முடியாது. ஆகவே குறைந்தது 21-23 வயது வரையாவது ஆண்கள் கலவியில் ஈடுபடக் கூடாது. அதே நேரம் கமெராக்களின் முன்னர் முழு நிர்வாணமாக நிற்கக்கூடாது.
ஆண்கள், தமக்கு நிகழும்/தாம் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்களை எப்படி கையாள வேண்டும்?
பொதுப் போக்குவரத்து(Public Transport) வசதிகளைப் பயன்படுத்தும் போது அல்லது வேறு சந்தர்ப்பங்களில் ஆண்கள் பாலியல் சீண்டல்களுக்கு(Sexual Harassment) அடிக்கடி உள்ளானால் அது தொடர்பில் உங்கள் நண்பர்களின் ஆலோசனையாவது பெறுங்கள். பாலியல் சீண்டல்களுக்கு எதிராக குரல் கொடுக்க மறக்காதீர்கள். #NoMeansNo பெண்களுக்கு மாத்திரம் அல்ல!
Good Touch, Bad Touch பற்றிய புரிதலை அவசியம் ஆண் பிள்ளைகளுக்கும் ஏற்படுத்த வேண்டும். குறைந்தது 23 வயது வரையாவது யார் கூடவும் செக்ஸ் பண்ணக் கூடாது, யாராவது செக்ஸ் வைச்சுக்க அல்லது தப்புத் தப்பா தொட, அல்லது தொட வைக்க உங்களைக் கூப்பிட்டா போகக் கூடாது. உங்களுக்கு அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டிருந்தாலும் கூட அவரை தனிமையில் சந்திக்கக் கூடாது.
Keywords: டீன்னேஜ்
Comments
Post a Comment