தலையில் தலை முடி இல்லாத, மொட்டை ஆண்களுக்கு எப்போதும் ஒரு கவலை தான், ஆனால் தலையில் தலை முடி உள்ள ஆண்களுக்கு தலை முடியை அப்படியே பாதுகாப்பாக நீண்ட காலம் வைத்திருப்பதே தலையிடியான விடையம் தான்.
முதலில் ஒரு கசப்பான உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கும் வழுக்கை விழுந்திருந்தால், உங்களுக்கும் அல்லது உங்கள் பிள்ளைகளுக்கும் வழுக்கை ஏற்படுவதற்காக சந்தர்ப்பம் அதிகமாகும். அதனை நீங்கள் தலைகீழாக நின்றாலும் மாற்ற முடியாது. ஆனால் வழுக்கை ஏற்படும் காலத்தை தள்ளிப் போடலாம். அதற்கு உங்கள் தலை முடியை ஒழுங்காக பராமரித்து வந்தாலோ போதும்.
எல்லா ஆண்களுக்கும் தலை முடி அழகாக இருக்காது. அதே போல எல்லா ஆண்களுக்கும் வழுக்கைத் தலையும் அழகாக இருக்காது. ஆனால் சிலருக்கும் தலை முடி இருப்பதை விட தலையில் முடி இல்லாமல் மொட்டைத் தலையுடன் இருப்பதே மிகவும் அழகாக இருக்கும். கோயில் நேர்த்திக் கடனுக்காகவும், வேறு சம்பிரதாயங்களுக்காகவும் மொட்டை போடும் போது தான் அதனை உங்களால் அவதானிக்க முடியும், உங்களுக்கு தலை முடி இருந்தால் நல்லதா? தலை முடி இல்லாவிட்டால் நல்லதா?
உங்களுக்குத் தெரியுமா? ஆண்களுக்கும் அவர்களின் உடலில் ஆண்களுக்கான ஹோர்மோன் Testosterone அதிகமாக சுரந்தால் அவர்களின் உடல் முழுதும் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும். அதற்காக அளவுக்கதிகமாக இருந்தால் முடி கொட்டவும் ஆரம்பித்து விடும். உங்கள் உடலில் Testosterone அளவை சீராக வைத்திருக்க வேண்டும்.
சில ஆண்கள் சீப்பு வைத்தி தலை சீவ மாட்டார்கள். இது மிகவும் பிழையான செயலாகும். தலையில் சீப்பு வைத்து தலை முடியை சீவாமல் கைகளால் கோதி விடுவது உங்கள் தலை முடியை கண்டமேனிக்கு காடு போல வளரச் செய்து விடும். உங்கள் தலை முடியை நேர்த்தியாக வளர்த்தெடுக்க வேண்டும் என்றால் தினமும் தலைமுடியை சீப்பு வைத்து சீவ வேண்டும்.
அதே நேரம், சீப்பு வைத்து, பக்கமாக உச்சி வகுந்து/Side Part பண்ணி தலை சீவும் போது வழுக்கை விழுவதற்கான அறிகுறி தென்பட்டால் உச்சி வகுந்து தலை சீவுவதை நிறுத்தவும். தலை முடியை வேறு வடிவில் சீப்பை வைத்து சீவவும். அதன் மூலம் வழுக்கை ஏற்படுவதைத் தள்ளிப் போடலாம். அதே நேரம் சீப்பு வைத்து தலைசீவும் போது அதிக அழுத்தம் கொடுத்து தலை சீவ வேண்டாம்.
குறைந்து மாதம் ஒரு முறை ஒரு சலூனிற்குச் சென்று நேர்த்தியாக, உங்கள் முகத்தோற்றத்திற்கு அழகைக் கொடுக்கும் வகையில் தலை முடியை வெட்டவும்.
தலை முடி கொட்டுவது அதிகமாக இருந்தால் தலை முடியை சிறிது காலத்திற்கு Short ஆக வெட்டவும்.
ஆண்களுக்கு தலை முடி கொட்டுவதற்கு தூக்கமின்மை, மன அழுத்தம், Work Pressure கூட காரணமாக இருக்கலாம். தலை முடி கொட்டுவதற்கான அடிப்படைப் பிரச்சனையை சரி செய்யாமல் தலை முடி கொட்டும் பிரச்சனையை கட்டுப்படுத்த முடியாது.
உங்களுக்கு தலையில் பொடுகு இருக்கிறதா? உங்களுக்கு பொடுகுப் பிரச்சனை இருந்தால் முதலில் தலைக்கு எண்ணெய் வைப்பதை நிறுத்துங்கள். தலைக்கு எண்ணெய் வைக்கும் போது தலையில் பொடுகை உருவாக்கும் கிருமிகள்/பங்கசுகள் பல்கிப் பெருகும் வாய்ப்பு அதிகமாகும். அதன் காரணமாக பொடுகுப் பிரச்சனையை உங்களால் கட்டுப்படுத்த முடியாது போகும். சில சாதாரண Dandruff பிரச்சனையை Dandruff shampoo களைப் பாவித்து சரி செய்ய முடியும். ஆனால் பொடுகு அதிகமாக இருந்தால் ஒரு தோல் மருத்துவரின்(Dermatologist) ஆலோசனையைப் பெறுவது நல்லது. அதன் மூலம் பொடுகு ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறியலாம். சிலருக்கு அவர்கள் உட்கொள்ளும் உணவுகளில் உள்ள ஒவ்வாமையின் காரணமாகவும், உடலில் உள்ள வேறு பிரச்சனைகளின் காரணமாகவும் கூட Allergic Reaction ஆக பொடுகு ஏற்படுவது உண்டு. ஆகவே நீங்கள் சாப்பிடும் சாப்பாடுகள் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தவும்.
பொடுகுப் பிரச்சனை இருந்தால், தலையணையில் முகம் வைத்து தூங்க வேண்டாம். தலையில் குளித்த பின்னர், தலையை துடைக்க தலைக்கு தனியாக ஒரு துண்டு வைத்திருக்கவும். தலையில் பொடுகு கடித்தால், உடனே தலையை மாத்திரம் Shampoo போட்டு கழுவவும். தலையை சொறிய வேண்டாம். அப்படியே சொறிந்தாலும் தலையில் இருந்து விழுந்த பொடுகுத் துகள்களை தோள், முதுகுப் பகுதி போன்றவற்றில் இருந்து தட்டி விட மறக்க வேண்டாம்.
பொடுகுத் தொல்லை இருக்கும் ஆண்கள் குறைந்தது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது தலைக்கு Shampoo பாவித்து முழுக(தலையில் குளிக்க) வேண்டும்.
உங்களுக்கு ஏதாவது ஒரு Skin Condition/Problem இனால் பொடுகு ஏற்படுவதாக வைத்தியர் சொன்னால் அதனை உணவின் மூலம் கட்டுப்படுத்தவும். இல்லாவிட்டால், வாழ்க்கை முழுதும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் Medicated Shampoos களை மாத்திரமே பயன்படுத்த வேண்டி வரும். அவற்றை அதிக காலம் பாவித்தால் தலை முடியின் நிறம் தற்காலிகமாக மாறும், தலை முடி தற்காலிகமாக கொட்டும்.
தலை முடியில் பேன்(Lice in Hair) அதிகமாக இருந்தால், அதற்கான Shampoo(Head Lice Shampoo) பாவிக்கலாம். தலைமுடியை மிகவும் Short ஆக வெட்டலாம். அடிக்கடி தலையணையை வெயிலில் காய விடவும்.
நீங்கள் தலைக்குக் குளிக்கும் தண்ணீரை அடிக்கடி மாற்றுவதனால் கூட தலை முடி கொட்டலாம். ஆகவே தலைக்குக் குளிக்கும் போது எப்போதும் ஒரே நீரினைப் பயன்படுத்தவும்.
Swim Cap யை அணிந்து Swimming Pool யை பயன்பத்தவும். Swimming Pool யை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் Chlorine இனால் கூட தலை முடி கொட்டும் பிரச்சனை ஏற்படலாம்.
தினமும் Shampoo பாவிக்கும் ஆண்கள் Conditioner பயன்படுத்தவும் ஆர்வம் காட்ட வேண்டும். Shampoo பாவிக்கும் போது உங்கள் தலை முடியின் நிலைமைக்கு ஏற்ற Shampoo யைத் தெரிவு செய்து பயன்படுத்தவும். உங்களுக்கு பொடுகு இருந்தால் பொடுகைக் கட்டுப்படுத்த Shampoo பாவிக்கலாம். உங்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை இருந்தால் அதற்கான Shampoo யைப் பாவிக்கலாம். ஆகவே தேவை அறிந்து Shampoo யைத் தெரிவு செய்யவும், அல்லது அனைவருக்கும் பொதுவான Shampoo யைப் பாவிக்கவும்.
நீங்கள் வாங்கும் Shampoo விற்கான Conditioner யையே பாவிக்கவும். வேறு Brand Shampoo விற்கு வேறு Brand Conditioner யைப் பாவிக்க வேண்டாம். Conditioner பாவிப்பதே நீங்கள் பாவித்த Shampoo இனால் உங்கள் கூந்தலுக்கு ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யத் தான். Shampoo யைப் பாவிக்கும் போது ஈரமான தலையில் மண்டை(Scalp) வரை செல்லும் வகையில் Shampoo யைப் பாவிக்கவும். நீங்கள் Shampoo பாவிக்கும் போது அவசியம் நுரை வர வேண்டும் என்றில்லை. அதே நேரம் Shampoo யை அலசிய பின்னர் Conditioner யை மேலோட்டமாக தலை முடியில் மாத்திரம் பூசி குறைந்தது 1 - 3 நிமிடங்கள் வரை ஊற வைத்து, அதன் பின்னர் தலை முடியை கழுவ வேண்டும்.
தலை முடிக்கு சவர்க்காரம் போடலாமா? இல்லை. ஆனால், தவிர்க்க முடியாத சூழ் நிலையில், இருந்திட்டு எப்போதாவது Soap போட்டு தலை முடியை கழுவலாம். அதற்காக தினமும் Soap போட்டு தலை முடி கழுவக் கூடாது. அப்படிக் கழுவினால் தலை முடியை வரட்சியடையச் செய்யும். அதிக சிக்குகளை உருவாக்கும். தலை முடியில் உள்ள இயற்கையான எண்ணெய்த் தன்மையை நீக்கி விடும். ஆண்கள் எந்தெந்த தேவைகளுக்கு சவர்க்காரம் போடலாம் என்பதை
இங்கே அழுத்தி தெரிந்து கொள்ளவும்.
தலை முடிக்கு "Hair Dye" பூசும் பழக்கம் இருந்தால் எப்போதும் நல்ல தயாரிப்புக்களை வாங்கிப் பூசவும். அதே நேரம் அடிக்கடி தலை முடிக்கு நிறம் பூச வேண்டாம். ஆகவே நீங்கள் தெரிவு செய்யும் Hair Dye நீண்ட நாட்கள் தலைமுடிக்கு நிறத்தைக் கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும்.
உங்களுக்குத் தெரியுமா? உங்கள் தலை முடியின் இயற்கையான நிறத்தை விட வேறு வர்ணங்களில் உங்கள் தலை முடிக்கும் சாயம் பூச விரும்பினால் முதலில் உங்கள் முடியில் உள்ள இயற்கையான நிறத்தை இழக்க(Hair Bleach) வேண்டி ஏற்படும். அதன் பிறகே வேறு வர்ணங்களில் தலைமுடிக்கு சாயம் பூச முடியும். இந்த செயற்பாடுகளின் காரணமாக உங்கள் தலை முடி அதிகம் பாதிப்படையும்.
இளநரை/Premature Graying of Hair பிரச்சனை உள்ள ஆண்கள் இளவயதில் அதனை ஆயூர்வேத மருத்துவம் மூலம் கட்டுப்படுத்த முயற்சிக்கலாம். ஆனால் உங்கள் தலை முடி அதிகம் நரைக்க ஆரம்பித்த தருணமே Hair Dye பாவிக்க ஆரம்பிப்பது நல்லது. இல்லாவிட்டால், உங்கள் தன்னம்பிக்கையை அது பாதிக்கும் விஷயமாக அமைந்து விடும்.
உங்கள் தலை முடிக்கான Hair Dye யைத் தெரிவு செய்யும் போது அதில் பயன்படுத்தப்பட்டுள்ள Chemicals நல்லதா கெட்டதா என்பதை Google இல் தேடி பார்க்கவும். உதாரணமாக: Harmful chemicals in hair dye.
Hair Dye யைப் பயன்படுத்தும் போது அதில் உள்ள அறிவுறுத்தல்களை அவசியம் பின்பற்றவும். அதில் சொல்லப்பட்டுள்ளவாறு Allergic Test செய்ய மறக்க வேண்டாம்.
Hair Cream/Taming Cream, Hair Gel, Hair Wax, Hair Spray, Hair Mousse/Styling Foam பயன்படுத்தும் ஆண்கள் அவசிய அன்றிரவு தலை முடியை கழுவி விட்டு தான் தூங்க வேண்டும். தலை முடிக்கு மேலே சொன்ன Cosmetic Products களைப் பயன்படுத்துவதன் மூலம் Wet Look யைப் பெற்றுக் கொள்ள முடியும். சிலவற்றின் மூலம் Shining Look யைப் பெற முடியும். சிலவற்றின் மூலம் தலை முடியை அடர்த்தியாக வெளிக்காட்ட முடியும்.
அது என்ன Wet Look? பாத்ரூம் கண்ணாடியில் தலை முடியை ஈரமாக்கி விட்டு கைகளால் தலைமுடியை கோதி, விரும்பிய Style இல் தலை முடியை வாறிப் பாருங்கள். பார்க்க எவ்வளவு அழகாக இருக்கும் என்று. ஆனால் ஈரமான தலைமுடி காய்ந்த பின்னர் அந்த Hair Style நிலைத்து இருக்காது. அதனை நிலைத்திருக்கச் செய்யத்தான் Hair Style Products யைப் பயன்படுத்துகிறோம்.
ஆயூர்வேத முறைகளில் வீட்டில் செய்த கலவைகளையும்(Natural Shampoo, and Hair Care Products) தலை முடி, தாடி/மீசைக்கு பூசலாம்.
எப்போதும் நல்ல Cosmetic Products களை தலை முடிக்கு பயன்படுத்தவும். பொதுவாக Hair Gel யை விட Hair Wax சிறந்தது, Hair Wax யை விட Hair Cream சிறந்தது என்பார்கள். அதற்குக் காரணம் அவற்றுள் பயன்படுத்தப்படும் Ingredients களாகும். இவற்றில் சிலவற்றில் Alcohol பயன்படுத்தப்பட்டிருக்கும். அவற்றைப் பாவித்தால் முடி அதிகம் பழுதடையும். Hair Gel பாவித்து விட்டு A/C Room இல் இருந்தால் பொடுகு போன்று தலையில் இருந்து அவை துகள்களாக கொட்டும் வாய்ப்பு அதிகமாகும். Hair Gel/Hair Wax/Hair Cream யை Short Hair இருப்பவர்கள் பயன்படுத்துவது உகந்தது. Hair Spray யை நீளமான முடி இருப்பவர்கள் பயன்படுத்துவது உகந்தது. Hair Mousse யை சுருட்டை முடி/சுருள் முடி(Curly Hair) உள்ளவர்கள் பயன்படுத்துவது உகந்தது.
தலை முடிக்கு Cosmetic Products பயன்படுத்தும் போது எப்போதும் முதலில் சிறியளவு எடுத்து பயன்படுத்தவும். அளவுக்கு அதிகமாக எடுத்து முதலே தலை முழுதும் பூசிக் கொண்டு நிற்க வேண்டாம். Cosmetic Products பாவித்த பின்னர் அதிகம் வெயிலில் நிற்க வேண்டாம். சில வேளைகளில் வியர்வையில் அவை கரையலாம், அல்லது தலை முடியை மேலும் சேதமாக்கலாம், தலை முடியையும் மண்டையையும் ஈரலிப்பு இல்லாமல் காய்ந்து போகச் செய்யலாம்.
Tips: உங்களுக்கு Hair Style Products பற்றிய போதிய அறிவும், அனுபவமும் இல்லாவிட்டால் அருகில் உள்ள நல்ல ஆண்கள் சலூனுக்குச் சென்று ஒரு Party, Wedding இக்கு தயார் ஆவது போல தயார் ஆகுங்கள். அப்போது அவர்கள் பாவிக்கும் ஒப்பனைப் பொருட்கள், Hair Style Products யைப் பற்றி நீங்கள் அனுபவ ரீதியாக தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். பிறகு நீங்களே அவற்றைத் தேடி, வாங்கி உங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தலாம்.
Recommended:
ஆண்கள் பயன்படுத்தும் Grooming Tools
வயது வந்த ஆண்களுக்கான உடல் சுகாதார வழிகாட்டி
Keywords: Hair Care, How to cut care? How to avoid baldness? Tips to control dandruff. How to choose shampoo, conditioner, hair gel, wax, hair cream, hair dye? How does stress affect your hair growth? Hair Fall, How to stop Hair fall for men?
Comments
Post a Comment