தமது இடுப்பில் வேட்டி தங்காது என்று நினைத்து தன்னம்பிக்கையில்லாமல் வேட்டி கட்டும் போது, அவை கழறாது இருக்க ஆண்கள் அணியும் Belt தான் Mens Dhoti Belt.
சில காலங்கள் வரை ஆண்கள் தாம் அன்றாடம் பயன்படுத்தும் Leather Belt, Casual Belt யை வேட்டி கட்டும் போது அவற்றின் கட்டின் மேல் இறுக்கமாக அணிந்து வந்தனர். ஆனால் பிரச்சனை என்னவென்றால் சட்டையைக் கழட்டி வெறும் மேலுடன் வேட்டி கட்டிக் கொண்டு நிற்கும் போது மற்றவர்களால் நீங்கள் அணிந்திருக்கும் Belt யைப் பார்க்கக் கூடியதாக இருக்கும்.
ஒரு சில ஆண்கள் வேட்டியின் கட்டின் மேல், தமது இடுப்பில் இருக்கும் அரைஞாண் கயிற்றை விட்டு உருட்டி அதன் கட்டை இறுக்கமாக்குவர்.
ஆனால் வேட்டியினை நேர்த்தியாக அணியத் தெரிந்தால், இது எதுவுமே தேவையில்லை. வெறும் ஜட்டி மாத்திரம் அணிந்து, ஆண்கள் கெத்தாக வேட்டி கட்டலாம்.
Belt அணியாது, நான்கு முழ வேட்டியை எப்படி இறுக்கமாக ஆண்கள் அணியலாம்?
ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டியின் அறிமுகத்தோடு தான் இந்த வகை வேட்டிகளுக்கான Belt கள் சந்தையில் அறிமுகமானது.
இவை அநேகமாக வேட்டியின் நிறத்தில் இருப்பதால், அதனை அணிந்திருக்கும் போது Belt வித்தியாசமாக வெளித்தெரியாது.
Mens Dhoti Belt களும் Velcro வகையைச் சேர்ந்தவையாகும். வேட்டியை அணிந்த பின்னர், வேட்டியின் கட்டின் மேல் இந்த இடுப்பு பட்டியை இறுக்கமாக ஒட்டி விட்டால் வேட்டி கழறாது.
Copper Veshti/Copper Color Cotton/Copper Color Silk Veshti அணிந்திருக்கும் ஆண்கள்:
சில ஆண்கள் Mens Dhoti Belt க்குப் பதிலாக Shirt Stay Belt யையும் வேட்டியின் கட்டின் மேல் அணிவர்.
வேட்டி கட்டும் போது Belt அணிவதும், ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி அணிவதும் ஆண்மைக்கு அழகல்ல.
வேட்டியின் கட்டை இடுப்பில் உருட்டி விடத் தெரிந்தவனுக்கு வேட்டி கட்டும் போது Belt அணிய வேண்டிய அவசியம் இல்லை.
Recommended: ஆண்கள் வேட்டி கட்டுவது எப்படி? ஆண்கள் வேட்டி கட்டும் போது கவனிக்க வேண்டிய விடையங்கள். ஆண்கள் தம்மை வேட்டியில் கவர்ச்சியாக வெளிக்காட்ட சில குறிப்புகள்.
Keywords: Copper Dhoti, Men Cotton Veshti, Men Silk Veshti, Men Copper Color Veshti
Comments
Post a Comment