ஆண்கள் வேட்டி அணிந்திருக்கும் போது அவர்களின் இடுப்புப்(Waist) பகுதியில், Long Sleeve Shirt இன் கைகளை மடிப்பது போல, வேட்டியை கீழ் நோக்கி உருட்டி மடித்திருப்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். அவ்வாறு எதற்காக உருட்டி மடிக்கிறார்கள்?
ஆண்கள் வேட்டி கட்டிய பின்னர், வேட்டியை வேட்டியின் கட்டுடன் சேர்த்து, இடுப்புப் பகுதியில் கீழ் நோக்கி, வெளிப்பக்கமாக இரண்டு அல்லது மூன்று தடைவை உருட்டி மடிப்பதன் மூலம் வேட்டியின் கட்டை இறுக்கமாக்கலாம்.
வேட்டியின் கட்டின் மேல் அவர்கள் அணிந்திருக்கும் அரைஞாண் கயிற்றை(அருணாக்கொடி) விட்டு, வேட்டியை மேலே கூறியவாறு உருட்டி மடிக்கும் போது வேட்டியின் கட்டு பல மடங்கு இறுக்கமாகும்.
வேட்டியில் அந்த மடிப்பை நேர்த்தியாக, ஆண்கள் தமது இடுப்புப் பகுதியில் உருவாக்குவதன் மூலம், அதனைக் கூட வேட்டி கட்டியிருக்கும் போது அவர்களின் இடுப்பை கவர்ச்சியாக வெளிக்காட்ட பயன்படுத்தலாம்.
Recommended: வேட்டியின் இடுப்புப் பக்கக் கரையை எப்படி ஒரு பட்டி(Highlight the Veshti Border in Waist) போல அமையும் வண்ணம் வேட்டி கட்டுவது?
அவ்வளவு லேசாக அது அவிழாது. எந்தவொரு தயக்கமும் இல்லாமல் நாள் முழுதும் கூட வேட்டியுடன் இருக்க முடியும்.
இடுப்புப் பகுதியில் வேட்டியை மடித்து உருட்டி விடுவதன் மூலம், ஆண்கள் வேட்டி அணியும் போது Belt அணியும் தேவையும் இருக்காது. வேட்டி அவிழ்ந்து விடுமோ என்ற பயத்தில், தன்னம்பிக்கையில்லாமல், உள்ளே Shorts, Pants அணிந்து வேட்டி கட்டும் தேவையும் இருக்காது.
வேட்டியின் கட்டு அந்தளவுக்கு இறுக்கமாக இருக்கும். ஆகவே இவ்வாறு வேட்டியை இடுப்புப் பகுதியில் மடித்து உருட்டும் ஆண்கள் நம்பி, ஜட்டி மட்டும் அணிந்து வேட்டி கட்டலாம்.
குறிப்பு: இவ்வாறு வேட்டியை மடித்து விடும் எண்ணம் இருந்தால் வேட்டி கட்டும் போது அதன் உயரம் தொடர்பில் கவனம் செலுத்தவும்.
வயது வந்த ஆண்கள் வேட்டி அணியும் போது அது அவர்களின் கணுக்கால் வரையாவது இருக்க வேண்டும். சில ஆண்கள் நிலத்தில் படும் அளவுக்கும் வேட்டியை இடுப்புல் இறக்கி அணிவர்.
Note: ஆண்கள் தோதி(Dhoti) கட்டும் போது மாத்திரம் வேட்டியை இடுப்பில் உருட்டி விட முடியாது.
ஆண்கள் வேட்டி கட்டிக் கொண்டு எப்படி கெத்தாக நடப்பது?
வேட்டி கட்டிக் கொண்டு கெத்தாக நடப்பதை ஆங்கிலத்தில் Veshti Swag என்று அழைப்பர். ஒவ்வொரு ஆண்களுக்கும் ஒவ்வொரு Style இருக்கும்.
சிலருக்கு இயல்பாக அது வரும். நடக்கும் போது வேட்டியின் கரை வைத்த முனையை தூக்கிக் கொண்டு நடப்பது, வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கொண்டு நடப்பது என பல்வேறு வகைகளில் Veshti Swag செய்யலாம். உங்களுக்கு எது அழகாக உள்ளது என்பதை, அவற்றை செய்யும் போது உங்களை நீங்களே Video எடுத்துப் பார்த்தால் தான் தெரியும்.
Instagram போன்ற சமூக வலைத்தளங்களில் #Veshti #Dhoti #Mundu #Lungi போன்ற Hashtags களைத் தேடுவதன் மூலம் புது வகையான Veshti, Lungi Swags களை தெரிந்து கொள்ளலாம். அவற்றை நாமும் முயற்சித்துப் பார்க்கலாம்.
வேட்டி, லுங்கி அணிந்திருக்கும் போது மோட்டார் சைக்கிளில் ஆண்கள் எப்படி உட்கார்ந்து பயணிக்க வேண்டும்?
Recommended: ஆண்கள் வேட்டி அணிவது தொடர்பாக மேலும் விபரமாக பல தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
Keywords: Art of Flipping Veshti, How Mallu Men Walk with Veshti, How Tamil Men Walk with Veshti
Comments
Post a Comment