ஒரு ஆண், ஆண்மையுள்ள ஆண் என்பதற்கு அடையாளமாக அவன் முகத்தில் வளர்ந்திருக்கும் தாடியும் மீசையும் பார்க்கப்படுகிறது. அதற்குக் காரணம் ஆண்களின் Sexual Hormone ஆன Testosterone உடலில் தேவையான அளவு சுரக்கும் போது தான் ஆண்களின் உடலில் முடி வளர்ச்சி இருக்கும். ஆனால் எல்லா ஆண்களுக்கு தாடி, மீசை ஒரே அளவில் வளராது.
வயதுக்கு வந்த பின்னும் தாடி, மீசை வளராத ஆண்களின் பிரச்சனையை சமூகத்திற்கு வெளிக்காட்ட தான் No Shave November Challenge உருவாக்கப்பட்டது.
அதன் உண்மையான நோக்கம் Prostate Cancer, Testicular Cancer, Poor Mental Health – Depression, Physical inactivity போன்றவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருந்தாலும், மறை முகமாக தாடி/மீசை வளரும் பிரச்சனையையும் வெளிக் கொண்டு வருவதற்கும் தான் ஆகும்.
தாம் தனித்துத் தெரிவோம் என்பதை அறிந்த வயதுக்கு வந்த பின்னும் தாடி, மீசை வளராத ஆண்கள், தமக்கு ஏற்படும் அவமானத்தைத் தவிர்ப்பதற்காக No Shave November Challenge யை, பின்னர் No Nut November Challenge ஆக மாற்றினர்.
இந்த Challenge இல் ஆண்கள் தாடி/மீசை வளர்க்க வேண்டிய தேவை இருக்காது, அதற்கு மாற்றாக அவர்கள் ஒரு மாதத்திற்கு சுய இன்பம் செய்யாமல் இருக்க வேண்டும்.
உங்களுக்குத் தெரியுமா? சில ஆசிய நாடுகளில் உள்ள ஆண்களுக்கு முகத்தில் தாடி மீசை வளராது. சில ஆபிரிக்க நாடுகளில் உள்ள ஆண்களுக்கு உடல் முழுதும் எந்த உரோமமும் இருக்காது.
எல்லா ஆண்களுக்கும் தாடி, மீசை அழகாக இருக்காது. சில ஆண்களுக்கு தாடி, மீசையை தினமும் கவனிக்க நேரமும் இருக்காது. சில ஆண்களுக்கு தாடி/மீசையை மழித்து விட்டு பார்க்கும் போது தான் அவர்கள் அழகாக இருப்பர்.
தாடி, மீசையை முழுமையாக மழித்த ஆண்களை குழந்தை முகம் என்று அழைப்பர். ஆனால் சில ஆண்களுக்கு அவர்களின் தாடி, மீசையை மழித்தால், ஆண்மைத் தன்மையே போனது போல இருக்கும். அவர்களுக்கு ஒரு Manly Look இருக்காது.
தாடி மீசையை Full Shave செய்யலாமா? அல்லது Trim செய்யலாமா? என்பதையும் அவரவரே முடிவு செய்ய வேண்டும்.
தமக்கு தாடி, மீசை வைத்தால் அழகாக இருக்குமா? அல்லது தாடி மீசை இல்லாமல் Baby face ஆக இருந்தால் அழகாக இருக்குமா? என்பதை முகம் பார்க்கும் கண்ணாடியில் தங்களை தாமே பார்த்தே முடிவு செய்ய வேண்டும். இன்னொருவர் சொல்கிறார் என்பதற்காக செய்யக் கூடாது.
சில ஆண்கள் தாடி, மீசையை ஒழுங்காக Maintain பண்ணத் தெரியாத காரணத்தாலும் அவற்றை மழிப்பது உண்டு. தாடி, மீசை வைத்திருக்கும் ஆண்கள் தினமும் அவற்றைக் கவனிக்க வேண்டும்.
தாடி, மீசையை காலையும் மாலையும் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முகம் கழுவிய பின்னர், தாடி/மீசையில் உள்ள ஈரத்தை நன்கு துடைத்து அகற்ற வேண்டும்.
வாரம் ஒரு முறை எண்ணெய்க் குளியல் போடும் போது, அல்லது தாடி, மீசைக்கு மாத்திரம் நல்லெண்ணெய் பூசி மசாஜ் செய்யலாம்.
தாடி, மீசையை அடர்த்தியாக வளர வைப்பதற்கும் Treatments(Beard Oils, etc.) எடுத்துக் கொள்லலாம். தாடி, மீசையையும் சீப்பு(Comb) வைத்து சீவ வேண்டும். Trimmer, Scissors, Shaving Blade பாவித்து அவற்றை நேர்த்தியாக்கி, அழகாக வைத்திருக்க வேண்டும்.
முகப்பருக்கள் அதிகமாக இருக்கும் ஆண்கள் தாடி, மீசையை Full Shave செய்வதை விட Trim செய்வதே உகந்தது.
சில ஆண்களுக்கு தாடி, மீசையில் அரிப்பு எற்படும். அதன் காரணமாகவே அவர்கள் தாடி, மீசை வளர்ப்பதைத் தவிர்ப்பர். தாடி, மீசையிலும் பொடுகு(Beard Dandruff) ஏற்படலாம். அவ்வாறான பிரச்சனை உள்ள ஆண்கள், Beard Dandruff இக்கும் Treatments எடுத்துக் கொள்ளலாம்.
தாடி, மீசை கூட நரைக்கும். ஆனால் அந்த நரைக்கு, தலை முடிக்கு பூசும் Hair Dye பயன்படுத்தக் கூடாது. Beard and Mustache, Eyebrows போன்றவற்றின் நிறத்தை மாற்ற அதற்கு என பிரத்தியேகமாக Hair Dye உள்ளது.
உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் தாடி, மீசை வைத்திருப்பதை விட, அவற்றை மழிப்பதன் மூலமே அவர்களின் முகத்தில் சருமப்பிரச்சனைகள் அதிகம் ஏற்படும்.
Keywords: ஆட்டுத் தாடி, குறுந்தாடி, ஆடு போன்ற தாடி வைத்த ஆண்கள், Goatee Beard, Beard Styles for Men
Comments
Post a Comment