ஆண்களை பாலியல் செயல்பாடுகள் இன்றி முப்பது நாட்கள் சகித்துக்கொள்ள ஊக்குவிக்கும் #NoNutNovember Hashtag யை நீங்களும் கடந்து வந்திருப்பீர்கள். #NoNutNovember இது எதற்காக உருவாக்கப்பட்டது என்று தெரியுமா? No Nut November இன் வரலாறு என்ன? நவம்பர் மாதம் வந்தாலே தீபாவளி துவங்கி நோ ஷேவ் நவம்பர் வரை எக்கச்சக்கமான நாட்கள் இருக்கின்றன. அப்படி சத்தமே இல்லாமல் No Nut November என்ற தினமும் நவம்பர் மாதம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நோ நட் நவம்பர்(NNN) என்று கேட்டவுடன் அட நான்லாம் கடலை கூட சாப்பிடமாட்டேன். இதுல காசு கொடுத்து நட்(Nuts) வாங்கியா சாப்பிட போறேன் என்று நினைக்கலாம். அல்லது என்னங்க நான்லாம் தினமும் ரெண்டு முந்திரி பருப்பு, நாலு பாதாம் பருப்பு சாப்பிடாம தூக்கமே வராதே என்று நினைக்கிறீர்களா? கவலை படாதீர்கள். இது நட்(விதைகள்/பருப்புகள்) சாப்பிடுவதோ அல்லது நட் சாப்பிடுவதை நிறுத்துவதோ பற்றியது இல்லை.
ஆண்கள் தமது விதைகளை(Testicles) பொது வெளியில் பேசும் போது Nuts என அழைப்பர். Nuts என்னும் ஆங்கில வார்த்தையை தமிழில் மொழிபெயர்த்தால் விதைகள் என்று சொல்லலாம் இல்லையா? ஆங்கிலத்தில் Testicles எனும் வார்த்தை ஆண்களின் விதைகளைக் குறிக்கப் பயன்படுத்தினாலும் அன்றாட வாழ்க்கையில் ஆண்கள் தமது கொட்டைகளை Balls, Nuts என்றே அழைப்பர்.
No Nut November Challenge இன் உண்மையான நோக்கம் Prostate Cancer, Testicular Cancer, Poor Mental Health - Depression, Physical inactivity போன்றவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
ஆண்கள் கை அடிக்காமல் இருக்க ஒரு மாதம்! ஆமாங்க, நோ நட் நவம்பர் என்பது இந்த ஒரு மாதம் முழுவதும் ஆண்கள் சுயஇன்பம்(Masturbation) வழியாகவோ, அல்லது உடலுறவு கொள்வதன் மூலமோ தங்களது விந்தணுக்களை வெளியேற்றாமல் கட்டுப்பாடோடு இருக்க வைப்பதற்கான Challenge ஆகும். இதற்கென்று தனிப்பட்ட விதிகள், வரலாறு உட்பட உண்டு. பலரும் இதை தங்களது சுயகட்டுப்பாட்டை மேம்படுத்துவதற்காக கடைபிடிக்கிறார்கள்.
2011 ஆம் ஆண்டு Reddit மற்றும் 4chan போன்ற சமூக வலைத்தளங்களில் இந்த நோ நட் நவம்பர் ட்ரெண்டிங் வைரலாகி வந்தது. குறிப்பிட்ட குழுவுக்குள் கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த ட்ரெண்டிங் தற்போது பல்வேறு தரப்பினராலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
No Shave November எனும் Challenge இல் இருந்த குறைபாட்டை சரி செய்யும் பொருட்டே No Nut November உருவானதாகவும் சிலர் கருதுகின்றனர்.
ஆரம்பத்தில் இருந்த No Shave November Challenge யை கடைப்பிடிக்கும் ஆண்கள் நவம்பர் மாதம் முழுவது தமது உடலில் உள்ள முடிகள்(தாடி, மீசை, தலைமுடி, சுன்னி முடி, சூத்து முடி, மற்றும் உடலில் உள்ள எல்லா முடிகளையும்) எதனையும் அவர்கள் மழிக்கவோ(Shave), Trim செய்யவோ கூடாது என்ற விதிமுறை இருந்தது.
ஆனால் தலைமுடி இல்லாத ஆண்களுக்கும், தாடி/மீசை வளரும் பிரச்சனை இருந்த ஆண்களுக்கும் இதனை மேற்கொள்ள முடியாது போனது. அதன் காரணமாகவே அனைத்து ஆண்களாலும் செய்யக் கூடிய ஒன்றை கார்த்திகை மாதம் முழுதும் செய்யாமல் இருக்க முடிவு செய்தார்கள்.
நீங்கள் விரும்பினால், No Nut November Challenge உடன் No Shave November Challenge யையும் மேற்கொள்ளலாம்.
சில மருத்துவர்களின் கருத்துப்படி, பழங்கால கதைகளின் படி விந்தணுக்களை கட்டுப்படுத்துவது சுயகட்டுப்பாட்டின் வடிவமாக பார்க்கப்பட்டதாகவும், சுய இன்பம் காணுதல் காட்டுப்பாடு இல்லாமை என்பதன் அறிகுறியாக பார்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், பல்வேறு நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் சுயஇன்பம் காணுதல் மற்றும் உடலுறவு கொள்ளுதல் ஆரோக்கியமான செயல்முறை. இதன்மூலம் ரத்த ஓட்டம் ஆரோக்கியமாக இயங்குவதாகவும், பாலியல் உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவுவதாகவும் கூறுகின்றனர். எனவே, சுயக்கட்டுபாட்டிற்காக இதை பின்பற்றுவது முட்டாள்தனம் என்றும் கூறி வருகின்றனர்.
நோ நட் நவம்பரின் விதிகள் :
1. எந்த வடிவிலும் ஒரு மாதத்திற்கு உடலுறவோ , சுய இன்பம் காணுதலோ செய்ய கூடாது.
2. தூக்கத்தில் விந்தணு வெளியேறுவது ஒரு முறைக்கு மேல் நடந்தால் நீங்களாகவே சவாலில் இருந்து விலகி விட வேண்டும்.
3. ஒரு மாதத்திற்கு முழுமையாக விந்தணுக்களை வெளியேற்றாமல் இருந்து விட்டால் நீங்கள் வெற்றியாளர்.
No Nut November Challenge இல் பங்குபெற்றுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்
உங்களால ஒரு மாதம் முழுவதும் கையை வைச்சிட்டு சும்மா இருக்க முடியுமா? இந்த Challenge இல் பங்குபெற்றுவதன் மூலம் நீங்கள் சுய இன்பம் செய்யும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளீர்களா என்பதை இனங்காண முடியும்.
Keywords: No Nut November in Tamil, No Nut November Rules in Tamil
Comments
Post a Comment