ஆண்களின் Shirts பிரதானமாக இரண்டு வகைப்படும். ஒன்று Short Sleeve Shirts, மற்றையது Long Sleeve Shirts. இவை இரண்டையும் மேலும் Formals, Casuals எனப் பிரிக்கலாம்.
Formals என்பது Office Wear, Dress Shirt எனலாம். Casuals என்பது அன்றாட வாழ்வில் சாதாரணமாக அணியும் சட்டைகள் எனலாம். எல்லா வகை சட்டைகளையும் Tuck In செய்து Office Wear ஆக அணிய முடியாது.
அதற்குக் காரணம் Casual Dress Shirt இல் உள்ள அலங்கார வேலைப்பாடுகளும், அவற்றின் துணிகளின் வகைகளும் ஆகும். அதே நேரம் Casual Shirts அநேகமாக Tuck In செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டிருக்காது.
ஆகவே அவை இடுப்புக்குக் கீழ் நீளமாக இருக்காது. Tuck In செய்தாலும் குனியும் போது அவை Pant இக்கு வெளியே வந்து விடும்.
Office Wear ஆக அணியக் கூடிய Dress Shirts இடுப்புக்குக் கீழே சற்று அதிகம் நீளமாக இருக்கும். அதன் காரணமாக அவற்றை இலகுவாக Tuck In செய்து Neat ஆக அணியக் கூடியதாக இருக்கும்.
Trend: தற்காலத்தில் T-Shirts போன்ற, மற்றும் இழுபடக் கூடிய துணிகளில்(Lycra) கூட Dress Shirts கள் விற்பனை செய்யப்படுகின்றன.
உங்கள் உடல் அளவுகளுக்கு ஏற்ற சட்டையை நீங்கள் தெரிவு செய்து அணியாவிட்டால் அவை உங்களுக்கு அழகான தோற்றத்தைக் கொடுக்காது. எவ்வளவு தான் பார்த்து பார்த்து ஆண்களுக்கான Tuck In செய்யும் முறைகள் அனைத்தையும் பயன்படுத்தினாலும் சிறிது நேரத்தில் இடுப்புப் பகுதியில் பலூன் போல "Muffin Top" யை உருவாக்கி விடும்.
ஆகவே ஆண்கள் எப்போதும் Ready Made சட்டைகள் வாங்கும் போது உங்கள் உடல் அளவுகளுக்கு கிட்டத்தட்ட பொருந்தும் அளவுக்கு இருக்கும் சட்டைகளை, அணிந்து பார்த்து வாங்க வேண்டும்.
அவ்வாறு Ready Made சட்டைகளை தெரிவு செய்யும் போது, அவற்றை ஒரு நல்ல டெய்லரின் உதவியுடன் உங்கள் உடல் அளவுகளுக்கு ஏற்றாற் போல Alter செய்ய முடியும்.
ஆண்கள் தைத்த சட்டைகளை அணிவதை ஏன் தவிர்க்க வேண்டும்?
நீங்கள் வழமையாக அனுகும் டெய்லர்(Tailor) இந்தக் காலத்திற்கு ஏற்றாற் போல Update ஆகாது இருந்தால் உங்களுக்கு தைக்கும் சட்டை, பேண்ட் கூட பழைய Designs களிலேயே இருக்கும்.
அதே நேரம் நீங்கள் அனுகும் தையல்காரரின் துணி தெரிவுகள், நிறத்தெரிவுகள் ஒரு எல்லைக்குள்(Limit) இருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் நிறங்களில் துணிகளை அவரால் தேடிப் பேற முடியாது போகலாம்.
அவர் தையலில் கைதேர்ந்த ஒருவராக இல்லாவிட்டால், அல்லது உங்கள் உடல் அளவுகளை கச்சிதமாக எடுக்காவிட்டால் தைத்த ஆடைகளில் ஆயிரம் குறைகளை நீங்கள் சொல்லி திருந்த வேண்டிய நிலை ஏற்படும்.
உங்களுக்கு அளவெடுத்து தைக்கும் போது, Shirts தைப்பதற்கு அதிக காலம் எடுக்கும். உங்களால் ஒரு நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு சட்டைகளையே தைத்து வாங்கக் கூடியதாக இருக்கும்.
இதுவே நீங்கள் Ready Made சட்டைகளை வாங்கினால் எத்தனை சட்டைகளை வேண்டுமானாலும் தெரிவு செய்யக் கூடியதாக இருக்கும். Shirts களை விரும்பிய நிறங்களில் தெரிவு செய்யக் கூடியதாகவும் இருக்கும்.
Recommended:
Men Pant Styles - Flat Front vs Pleated Pants
ஜிப்பு வெளித்தெரியும் வகையில் விற்பனையாகும் புது பேண்ட்
Ready Made Shirts, Pants கள் தற்கால Trend இல் இருக்கும். உதாரணமாக: Slim Fit, Trim Fit Pants, Shirts with Pocket, Shirt without Pocket, Shirts with Darts in Back, Shirts without Darts in Back.
அதே நேரம் Ready Made Shirts, Pants களை கடையில் உள்ள Trial Room இல் அணிந்து பார்த்து வாங்க முடியும்.
உங்களால் ஒரு சிறந்த டெய்லரை கண்டு பிடிக்க முடியாவிட்டால் Ready Made Shirts, Pants வாங்குவதே ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
ஆண்கள் தமது Ready Made சட்டையின் அளவைத் தெரிந்து கொள்வது எப்படி?
Ready Made ஆக சட்டை வாங்கும் போது அவற்றின் அளவுகள் தான் உங்களுக்கு பிரச்சனையாக இருக்கும். உங்கள் Shirt Size தெரியாவிட்டால் அதனை வாங்குவது கடினம். Ready Made Shirt வாங்குவதற்கு உங்கள் Shirt Size யை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக Ready Made Shirt கள் அவற்றின் Collar Size(in Inches) இன் அடிப்படையிலேயே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் உங்கள் Collar Size யை மாத்திரம் வைத்தி உங்களுக்கு ஏற்ற Perfect Fitting Dress Shirt யை வாங்க முடியாது.
Note: அளவுகள் அனைத்தும் அளவு நாடாவைப் பயன்படுத்தி Inches இல் அளக்க வேண்டும்.
உங்கள் Collar Size யை அளப்பது எப்படி? அளவு நாடாவை உங்கள் கழுத்தைச் சுற்றி அளக்க வேண்டும். அவ்வாறு உங்கள் கழுத்து அளவை அளக்கும் போது ஒரு விரலை உள்ளே வைத்து அளக்க வேண்டும்.
புதிய Shirt Brand/Company களின் Shirt யை முதல் முறை வாங்கப் போகுறீர்கள் என்றால், உங்கள் Shoulder Size, Sleeve Length யையும் அளந்து வைத்திருப்பது உகந்தது.
இடது தோள் மூட்டில் இருந்து வலது தோள் மூட்டு வரை, அளவு நாடாவைப் பயன்படுத்தி, மேல் நோக்கி சற்று வில் வடிவில் வளைத்து அளப்பதன் மூலம் உங்கள் Shoulder Size யைத் தெரிந்து கொள்ள முடியும்.
உங்கள் முதுகுப்பக்கம், கழுத்துக்கு நேர் கீழ், முள்ளந்தண்டின் ஆரம்பப்புள்ளியில் இருந்து உங்கள் வலது/இடது கையின் மணிக்கட்டு(Wrist) வரையான பகுதியின் அளவை அளவு நாடாவைப் பயன்படுத்தி அளப்பதன் மூலம் Sleeve Length யைத் தெரிந்து கொள்ள முடியும்.
இவற்றைத் தவிர T-Shirts, வாங்குவதாக இருந்தாலும், பனியன்(Undershirt) வாங்குவதாக இருந்தாலும் உங்கள் Chest Size தெரிய வேண்டும். நெஞ்சை நன்றாக நிமர்த்திக் கொண்டு, மூச்சை உள்ளே இழுத்து வைத்துக் கொண்டு நெஞ்சின் சுற்றளவை அளப்பதன் மூலம் Chest Size யை தெரிந்து கொள்ள முடியும்.
உங்கள் சட்டை(Shirt) அல்லது டீ-சேர்ட்(T-Shirt) எந்தளவு நீளத்தில்(Length of Shir or T-Shirt) இருக்க வேண்டும் என்பதை அறிய, உங்கள் வலது/இடது தோள் மூட்டில் இருந்து இடுப்பு வரை அல்லது நீங்கள் hemline(ஹெம்லைன் - சட்டையின் விளிம்பு மடிப்புத் தையல்) இருக்க வேண்டும் என்று நினைக்கும் அளவு வரை அளக்க வேண்டும்.
Extra Slim Fit, Slim Fit, Focus Slim Fit, Regular Fit, Comfort fit என Shirts பொருந்து வகையின்(Fit) அடிப்படையில் அளவுகள் மாறும். ஆகவே அவசியம் சட்டை வாங்கும் போது Size Chart யை கருத்தில் கொள்ளவும். ஒவ்வொரு Brands இக்கும் ஒரு சில அளவுகளில் வித்தியாசம் உள்ள, Collar Size இன் அடிப்படையில் அமைந்த Size Chart இருக்கும்.
Men Shirt Measurements, Pant Measurements தொடர்பாக மேலும் விளக்கமாக அறிய YouTube இல் தேடலை மேற்கொள்ளவும்.
Recommended: ஆண்களின் Dress Pant பற்றி தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
Recommended: Cufflinks என்றால் என்ன? அதனை ஏன் ஆண்கள் பயன்படுத்த வேண்டும்?
Recommended: ஆண்கள் Formal Dress, Office Wear அணியும் போது உள்ளே பனியன் அணிய வேண்டுமா?
Keywords: ஆண்களுக்கு Tailored Shirt சிறந்ததா? Ready Made Shirt சிறந்ததா? How to find your dress shirt size? What is my shirt size? How to take measurements for ready made shirts in Tamil?, டீ-சேர்ட், டி - ஷேர்ட்
Comments
Post a Comment