ஆண்கள் அவசியம் ஜட்டி போடனுமா? என்பது விவாதத்திற்குரிய தலைப்பாக இருந்தாலும், வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி போடலனா என்னென்ன பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும் என்று எல்லா ஆண்களுக்கும் அனுபவரீதியாகத் தெரியும்.
ஒரு ஆணிடம் இரண்டு ஜட்டிகள் இருந்தால் போதுமா? ஆம், சாதாரண நாட்களில் இரண்டு ஜட்டிகளை மாற்றி மாற்றிப் போடலாம். ஆனால் மழை நாட்களில்? தோய்த்துக் காயப் போட்ட ஜட்டி காயலனா? அப்படி பார்த்தால் குறைந்தது மூன்று ஜட்டிகளாவது ஒரு வயதுக்கு வந்த ஆணிடம் அன்றாடப் பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
ஒரு ஆணுக்கு மூன்று ஜட்டிகள் போதுமா? இல்லை. Extra வா இரண்டு ஜட்டி புதுசா, Pack பிரிக்காமல் வைத்திருந்தால் தப்பில்லை. ஆத்திர அவசரத்திற்கு எடுத்து மாட்டிக்கலாம், அல்லது "In Case of Emergency" மாதிரி, ஜட்டி Size ஒன்றாக இருந்தால், நண்பனுக்குத் தேவைப்படும் போதும் எடுத்துக் கொடுக்கலாம்.
இருந்த ஒரு ஓட்டை ஜட்டியும் காயாமல் இருந்ததால், வெளியில் வெளிக்கிடக் கூட முடியாது, அவதியில் இருந்த நண்பனுக்கு புது ஜட்டி வாங்கிக் கொடுத்த உயிர்த் தோழர்கள்(Video).
Vendhu Thanindhathu Kaadu (2022) படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி
சரவணன்: "நீ என்னல ஒரு மாதிரியா நடக்க?"
முத்து(Silambarasan): "இல்ல.. இரண்டு ஜட்டி தான் (அ)ண்ண இருக்கு.. மாத்தி மாத்தி தான் போடுத.. அதான் ஈரமா இருக்கு! அறுக்குது."
சரவணன்: "ஜட்டிக்காடா பஞ்சம்.. வாலே வாங்கிக்கலாம்."
அப்புறம் ஜட்டி வாங்க கூட்டிட்டுப் போற சரவணன், முத்துக்கு நாலு ஜட்டி வாங்க recommend பண்ணுறாரு.
குறிப்பு: மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது ஆண்கள் புது ஜட்டி வாங்க வேண்டும். பழைய ஜட்டிகளை வீட்டில் இருக்கும் போது அல்லது குளிக்கும் போது அணியலாம்.
உங்கக்கிட்ட எத்தனை ஜட்டி அன்றாட பாவனையில் இருக்கு?
Comments
Post a Comment