சில வருடங்களுக்கு முன்பு வரை ஆண்கள் Branded Underwear அணிவது ஒரு Trend ஆக நமது சமூகத்தில் இருந்தது. பிராண்டட் ஜட்டிகளை அணியும் ஆண்கள் அவற்றின் Waistband யை வெளிக்காட்டும் வகையில் ஆடைகளையும் அணிந்தனர்.
இங்கு நாம் Branded Underwear களாக கருதுவது வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆண்களுக்கான ஜட்டிகளையாகும். உதாரணமாக: Jockey International, Calvin Klein
ஆண்கள் Branded ஜட்டிகள் அணிந்திருப்பது கிட்டத்தட்ட தற்காலத்தில் iPhone பாவிப்பது போன்று "வசதியான" குடும்பப் பின்னனியை உடைய ஆண்களாக தம்மை வெளிக்காட்டும் ஒரு அம்சமாக பார்க்கப்பட்டது. சில International Branded Underwear களை ஆண்கள் இதற்காக தேடித் தேடி வாங்கி அணிந்தார்கள்.
வெளி நாடுகளில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் நாடு திரும்பும் போதும் அவர்களிடம் வெளி நாட்டு ஜட்டிகளை தமக்காக வாங்கி வரும் படி சொல்லும் அளவுக்கு Branded ஜட்டி அணியும் மோகம் அந்தக் காலத்தில் ஆண்களிடம் இருந்தது.
ஆனால் கால மாற்றம், அவர்களுக்கு பல உண்மைகளைப் புரிய வைத்தது. சில வெளிநாட்டு ஜட்டிகள் நமது நாட்டின் கால நிலைக்கும் ஏற்றதாக அமையவில்லை.
அதே நேரம் International Branded Underwear களுக்கு இணையாக உள்ளூர் ஜட்டி கம்பனிகளும் "உள்ளூர் ஆட்டக்காரர்களை" அதாவது Local Branded Underwear களை சந்தையில் இறக்கினர். அதன் பிரதிபலனாக வெளிநாட்டு ஜட்டிகள் மீது இருந்த மோகம் நமது சமூகத்தில் இருந்து மறைந்து போனது.
வெளிநாட்டு ஜட்டிகள் மீது இருந்த மோகம் நமது சமூகத்தில் இருந்து மறைந்து போன மாற்றத்திற்கு Sun Tv, Vijay Tv, ஏனைய தொலைக்காட்சி அலைவரிசைகள், பத்திரிகை மற்றும் Radios களில் வெளிவந்த ஆண்களுக்கான உள்ளூர் ஜட்டி தயாரிப்புகளுக்கான ஜட்டி விளம்பரங்களுக்கும் அதிக பங்கு உள்ளது.
என்னதான் வெளி நாட்டு ஜட்டிகள் மீது இருந்த ஆண்களின் மோகம் குறைந்தாலும் இப்போதும் ஜட்டியின் Waistband வெளித்தெரியும் வகையில் Jeans/Pant/Short அணியும் வழக்கம் ஆண்களிடம் உள்ளது.
அதற்குக் காரணம் ஆண்களின் இடுப்புப் பகுதியை Highlight செய்யும் வழிகளில் அதுவும் ஒன்றாகும். தம்மை கவர்ச்சியாக வெளிக்காட்ட விரும்பும் ஆண்கள் அவர்களின் ஜட்டியின் Waistband ஓரளவுக்கு வெளியே எட்டிப் பார்க்கும் வகையில் ஆடைகளை அணிவர்.
Recommended: ஆண்கள் மற்றவர்கள் பார்வையை தம்மீது திருப்பும் வகையில் தம்மை கவர்ச்சியாக வெளிக்காட்டுவது எப்படி?
நீங்கள் அதிகம் விரும்பிப் பயன்படுத்தும் Local Underwear Brand என்ன? International Underwear Brand என்ன?
Comments
Post a Comment