ஆண்களின் மானமானது(Modesty) அவர்களின் அடிவயிற்றுக்குக் கீழே, தொடைகளுக்கு நடுவே தொங்கிக் கொண்டுள்ளது. அதனை மறைக்கும் வகையில் ஆடையையோ அல்லது உள்ளாடையையோ ஆண்கள் அணிந்தாலே, அவன் அரை நிர்வாணமாக நிற்பதாகவே கருதப்படுவான்.
ஆண்கள் என்னதான் அவர்களுக்கான ஜட்டிகளையும், கீழாடைகளையும்(Jeans/Pant/Shorts) இடுப்பு அளவை(Waist Size) வைத்து தெரிவு செய்தாலும்,
அவற்றை அணிந்திருக்கும் போது அசெளகரியமாக உணராது இருக்க அவர்களின் ஆண்குறியின் வகை, அளவு, குண்டிகளின் அளவு, தொடைகளின் அளவு போன்றவற்றையும் உடைகள், மற்றும் உள்ளாடைகள் வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இதன் காரணமாகவே சில ஆண்கள் தமது இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டிகளை வாங்கி அணியும் போது, அவை தளர்வாக இருப்பதை உணர்வார்கள்.
High Rise, Mid Rise வகை ஜட்டிகளில் முன் பக்கமும் பின்பக்கமும் சில ஆண்களுக்கு தேவைக்கு அதிகமாகவே இடவசதி இருக்கும்.
காட்டும் வகை(Shower Type Penis) ஆண்குறியை உடைய ஆண்களுக்கு இயல்பு நிலையிலேயே ஆண்குறி பெரிதாக, ஆனால் தளர்வாக இருப்பதால் அவர்களுக்கு ஜட்டியின் முன்பக்கம் அதிக இடவசதி தேவைப்படும்.ஆனால் வளரும் வகை(Grower Type Penis) ஆண்குறியை உடைய ஆண்களுக்கு இயல்பு நிலையில் அவர்களது ஆண்குறி சிறிதாக இருக்கும். புடைத்தெழும் போது தான் அவை பலூன் போல ஊதி நீண்டு காட்டும் வகை ஆண்குறியின் அளவுக்கு தடிமனாகும். ஆகவே இவ்வகையான ஆண்குறி வகையை உடைய ஆண்களுக்கு முன் பக்கம் இடவசதி அவ்வளவு தேவையில்லை. அதே போல பின்பக்கம் தட்டையாக இருக்கும் ஆண்களுக்கு, அவர்களின் ஜட்டியிலும் அதிக இடவசதி தேவையில்லை. இவ்வாறான ஆண்களுக்காகவே Low Rise Men Underwear அறிமுகமானது.
Low Rise Men Underwear களின் முன்பக்கமும், பின்பக்கமும் இடவசதி குறைவாக இருக்கும். இந்த வகை ஜட்டிகளை பெரிய ஆண்குறியை உடைய ஆண்களும், பெரிய குண்டிகளை உடைய ஆண்களும் அணிந்தால், இடவசதி பற்றாக்குறை ஏற்பட்டு முன்னாடியும் பின்னாடியும் பிதுங்கிக் கொண்டு வெளியே இருக்கும்.
இந்த வகை ஜட்டியை அவர்களால் நீண்ட நேரம் அணிந்திருக்கவும் முடியாது. அசெளகரியமாக உணர்வார்கள்.
மானத்தை மாத்திரம் குறைந்தளவு துணியைப் பயன்படுத்தி மறைக்க விரும்பும் ஆண்களுக்காகவே Jockstrap Underwear, Thong Underwear, G-Strings Underwear அறிமுகப்படுத்தப்பட்டது.
இவற்றில் Jockstrap Underwear, G-Strings Underwear இல் ஆண்களின் ஆசனவாய் மறைக்கப்படாது. Thong Underwear இல் ஆண்களின் ஆண்குறி, விதைப்பையுடன் சேர்த்து ஆசனவாயும் மறைக்கப்படும், ஆனால் குண்டித்தசைகள் மறைக்கப்படாது. அதன் காரணமாகவே Fitness, Body Building இல் ஆர்வமுள்ள ஆண்கள் அதனை அதிகம் தெரிவு செய்து அணிவர்.
Read More: ஆண்களின் உள்ளாடைகள் தொடர்பில் மேலும் பல சுவாரஸ்யமான விடையங்களைத் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
Keywords: Modesty
Comments
Post a Comment