தற்காலத்தில் கூட பல இளைஞர்களுக்கு தினமும் காலையில் குளிக்கும் போது அல்லது டாய்லெட் போகும் போது தமது ஆண்குறியின் முன்னால் இருக்கும் தோலை(முன்தோல்/Foreskin) சுருட்டி, ஆண்குறியின் மொட்டில்(Glans) படிந்திருக்கும் மாவு போன்ற பசையை(Smegma) கழுவி அகற்ற வேண்டும் என்பது தெரியாது.
இதை அவர்களிடம் சொன்னால், இப்படி ஒரு விஷயத்தை டெய்லி பண்ணனுமா? என்று ஆச்சரியமாக கேட்பார்கள். அந்தளவுக்கு பல ஆண்களுக்கு பூப்படைவது தொடர்பான அடிப்படை அறிவு கூட ஒழுங்காக கொடுக்கப்படவில்லை.
சிறுவர்களாக இருக்கும் போது, அதாவது 6 - 8 வயது ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியின் முன்தோலை பின்னால் நகர்த்த முடியாது. பூப்படையாத ஆண்களுக்கு அவர்களின் முன்தோல், ஆண்குறியின் மொட்டுடன் ஒட்டியே இருக்கும். ஆனால் எட்டு வயதிற்குப் பிறகு ஆண்களால் அவர்களின் ஆண்குறியின் முன்தோலை பின்னால் இழுத்து, சுருட்டக் கூடியதாக இருக்கும். ஆகவே வயதுக்கு வந்த ஆண்களால் மாத்திரமே அவர்களின் ஆண்குறியின் முன்தோலை பின்னால் நகர்த்த முடியும்.
ஆண்குறியைச் சுற்றி முடி வளரும் வரை, அல்லது இரவு தூக்கத்தில் விந்து வெளியேறும் வரை, அல்லது குறைந்தது 13 வயது வரை கஷ்டப்பட்டு அண்குறியின் முன்தோலை பின்னால் நகர்த்துவதைத் தவிர்க்கவும்.
முன்தோல் குறுக்கம்(Phimosis) நிலைமை உள்ள ஆண்களுக்கு வயதுக்கு வந்த பிறகும் கூட சில வருடங்களுக்கு அவர்களால் இயல்பாக அவர்களின் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்த முடியாது. 20 - 23 வயதிற்குப் பிறகும் இந்த நிலைமை தொடர்ந்தால், வைத்திய ஆலோசனை பெறுவது நல்லது.
ஆண்குறியின் முன் தோலுக்கும், ஆண்குறியின் மொட்டுக்கும் இடையில் மாவு போன்ற வெள்ளையான படலம் உருவாகும். இவை தோல் கழிவுகளாகும். இதனை Smegma என்று ஆங்கிலத்தில் அழைப்பர். இந்த 'ஸ்மெக்மா'வை டெய்லி ஆண்குறியின் முன்தோலை உருட்டி சுத்தம் செய்தால் தான் ஆண்களின் ஆண்குறி ஆரோக்கியமாக இருக்கும்.
Smegma யை தினமும் சுத்தம் செய்யாது விடும் போது, ஆண்குறியின் மொட்டில் அழற்சியை ஏற்படுத்தும், அதே நேரம் உடலைச் சுற்றிலும் ஒரு துர்வாடையை தோற்றுவிக்கும். எவ்வளவு தான் குளித்தாலு, இதனை சுத்தம் செய்யாவிட்டால், அந்த துர்வாடை உடலை விட்டு அகலாது.
அதே நேரம் Smegma யை தினமும் சுத்தம் செய்யாது விட்டால், ஆண்களுக்கு 40-50 வயதுகளில் ஆண்குறின் நுனிப் பகுதியில் புற்று நோய் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆகவே வயது வந்த ஆண்கள் டெய்லி குளிக்கும் போது ஆண்குறின் முன் தோலை உருட்டி, ஆண்குறியின் மொட்டை வெளியே எடுத்து, அதனை நீரில் அலசி சுத்தம் செய்ய வேண்டும்.
ஆண்குறின் மொட்டில் உள்ள Smegma யை சோப் போட்டு கழுவலாமா? தினமும் சவர்க்காரம் போட்டு ஆண்குறியின் மொட்டில் உருவாகும் மாவு போன்ற படலத்தை சுத்தம் செய்வது கூடாது. வெறும் நீரினால் அலசினால் மாத்திரம் போது. வழமைக்கு மாறாக, அதிகமாக இருந்தால் மாத்திரம் Mild - Soap போட்டு ஆண்குறியின் மொட்டை கழுவலாம்.
ஆண்குறியின் மொட்டுக்கு தினமும் சோப் போட்டு வந்தால், அதில் Irritation ஏற்படும். அதே நேரம் அதிகாலையில் மாத்திரம் ஆண்குறியின் மொட்டை நீரில அலசி, அதில் படிந்துள்ள Smegma யை அகற்றினால் போதும். ஆண்குறியின் மொட்டை சுத்தம் செய்யும் போது அதிக அழுத்தம் கொடுத்து தேய்க்கக் கூடாது. ஆண்குறியின் மொட்டு மிகவும் உணர்ச்சி மிகுந்த பகுதியாகும். அதில் அதிக அழுத்தம் கொடுத்து தேய்க்கும் போது மிகச்சிறிய கண்ணுக்குத் தெரியாத காயங்கள்(Micro Injuries) கூட ஏற்படலாம்.
மற்ற படி, ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது ஆண்குறியின் முன்தோலை பின்னால் நகர்த்தி, ஆண்குறியின் மொட்டை வெளியே எடுத்து சிறுநீர் கழித்து வந்தால் போதும்.
வயது வந்த ஆண்கள் அடிக்கடி தமது விதைகளில் ஏற்படும் மாற்றத்தை அவதானிக்க வேண்டும். குறைந்தது, குளிக்கும் போது அல்லது ஜட்டி அணியும் போது கொட்டைகளில் கை வைத்தாவது பார்க்க வேண்டும். இதன் மூலம் முன் கூட்டியே Testicular Cancer யை இனங்கண்டு(Early Detection is Better), குணப்படுத்த முடியும்.
ஆண்கள் தினமும் ஜட்டி அணிய முன்னர் அந்தரங்கப் பகுதி உலர்வாக உள்ளதா என்பதை அவதானிக்கவும். சில ஆண்கள் குளித்த பின்னர் ஒழுங்காக உடலை துடைத்து உலர்த்த மாட்டார்கள். ஆண்களின் அடிவயிற்றிலும் ஆண்குறியைச் சூழவும் உள்ள சுன்னி முடியில் அதிகம் ஈரம் தங்கும். அவற்றை நன்கு துடைத்து உலர்த்த வேண்டும்.
அந்தரங்கப் பகுதியில் உள்ள உரோமங்களில் தங்கியிருக்கும் ஈரத்தை அகற்றாமல் ஜட்டியை போடுவது அரோக்கியமானதல்ல. அதன் காரணமாக கூட அந்தரங்கப் பகுதியில் Fungal Infection(பூஞ்சை தொற்றுக்கள்) ஏற்படலாம், அதனால் கூட சில சருமப் பிரச்சனைகள் அந்தரங்கப் பகுதிகளில் ஏற்படலாம். இதனால் கூட சில அண்கள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது தமது சுன்னி முடியை Trim செய்வர்.
Read More: வயது வந்த ஆண்கள் ஏன் அவசியம் ஜட்டி போட வேண்டும்?
தினமும் சுய இன்பம் செய்வது ஆரோக்கியமானது அல்ல. அது உங்களை சுய இன்பம் செய்யும் பழக்கத்திற்கு அடிமையாக்கும். அதனைத் தவிர்க்க வயது வந்த ஆண்கள் சுய இன்ப ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
ஆண்கள் விந்து வெளியேற்றியதும், ஆண்குறியை நீரில் அலசி சுத்தம் செய்யவும் அல்லது தலைக்கு குளிக்கவும். சிறுநீர் கழிக்கவும். இல்லாவிட்டால், சிறுநீர் குழாயினுள் தேங்கியிருக்கும் விந்து ஆண்குறியில் இருந்து வழிந்து கொண்டு இருக்கும். அதன் காரணமாக உங்களைச் சூற்றி விந்து வாடை ஏற்படும்.
Keywords: ஆண்மகனின் உறுப்பு பராமரிப்பு, சுன்னியை கழுவுவது எப்படி? ஆண்கள் ஆண்குறி சுத்தம், சுன்னியில் உள்ள மாவு பசையை அகற்றுவது எப்படி? ஆண்குறிக்கு சோப் போடலாமா?
Comments
Post a Comment