எல்லா வயது ஆண்களுக்கு ஜீன்ஸ் மிகவும் அழகான தோற்றத்தையும், வித்தியாசமான தோற்றத்தையும் கொடுக்கும் கீழ் ஆடையாகும். ஆண்களின் ஜீன்ஸ் பற்றி இதற்கு முன்னர் விரிவாகப் பார்த்துள்ளோம். இந்தப் பதிவில் உடலுடன் ஒட்டியது போன்ற Skinny Jeans பற்றிப் பார்ப்போம்.
Skinny Jeans யை சில ஆண்கள் Stretch Jeans எனவும் அழைப்பர். Skinny Jeans யை அணியும் போது அது ஆண்களின் உடலுடன் ஒட்டியது போன்று இறுக்கமாக இருக்கும். ஆண்கள் தமது குண்டியழகை, தொடை அழகை வெளிக்காட்ட விரும்பினால், முன்னாடியும் பின்னாடியும் முட்டிக் கொண்டு இருக்கும் வகையில், நன்றாக Bulge தெரிய ஆடை அணிய விரும்பினால் Skinny Jeans ஒரு சிறந்த தெரிவாக அவர்களுக்கு இருக்கும்.
Read More: ஆண்களுக்கான ஜீன்ஸ் வகைகள்
எல்லா ஆண்களுக்கும் Skinny Jeans பொருத்தமாக இருக்குமா? இல்லை. இடுப்புக்குக் கீழ் ஒல்லியாக இருக்கும் ஆண்களுக்கும், மெலிந்த ஆண்களுக்கும், தட்டையான குண்டிகளை உடைய ஆண்களுக்கும் Skinny Jeans பெரியளவில் கவர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்காது.
ஆண்கள் Skinny Jeans அணியும் போது எந்த வகை ஜட்டியை அணிய வேண்டும்? ஆண்கள் Skinny Jeans அணியும் போது Briefs, Thongs, Jockstraps வகை ஜட்டிகளை அணிவது உகந்தது. விரும்பினால் Trunk ஜட்டி அணியலாம். ஆனால் Boxer Briefs ஜட்டி அணிந்தால், Skinny Jeans அணியும் போது அவற்றின் கால்கள் சுருண்டு அசெளகரியத்தை ஏற்படுத்தும்.
Skinny Jeans உடலுடன் ஒட்டியது போன்ற ஜீன்ஸ் ஆகும். ஆகவே உள்ளே Shorts, Boxer Shorts அணிந்து இந்த வகை ஜீன்ஸ் அணிவது உகந்தது அல்ல. அவ்வாறு அணிந்தால், மிகவும் அசெளகரியமாக உணர்வீர்கள்.
ஆண்கள் Skinny Jeans யைத் தெரிவு செய்யும் போது உங்கள் இடுப்பு அளவுக்கு ஒரு அளவு பெரிய Skinny Jeans யைத் தெரிவு செய்து அணிந்து பார்க்கவும். இதன் மூலம் உடலுடன் ஒட்டியது போன்ற தோற்றத்தை அந்த ஜீன்ஸ் உங்களுக்குக் கொடுத்தாலும், உங்களால் எந்தவொரு அசெளகரியமும் இல்லாமல் கீழே உட்கார்ந்து எழுந்திருக்க கூடியதாக இருக்கும்.
ஆண்கள் Skinny Jeans தெரிவு செய்யும் போது அவற்றின் Rise, Mid - Rise ஆக இருந்தால் நல்லது. எக்காரணம் கொண்டும் Skinny Jeans இல் High Rise or Low Rise Jeans வாங்க வேண்டாம். அவற்றை அணியும் போது பார்ப்பதற்கு அழகாக இருக்காது. இருப்பினும், விரும்பினால் நீங்கள் அவற்றை Trial Room இல் அணிந்து பார்த்து வாங்கவும்.
ஆண்கள் Skinny Jeans களைத் தெரிவு செய்யும் போது பெரிய பாக்கெட்டுகள் குறைவான ஜீன்ஸை தெரிவு செய்வது நல்லது.
உங்களால், நீங்கள் வாங்கிய Skinny Jeans யை ஒரு டெய்லரின் உதவியுடன் Alter செய்து மேலும் இறுக்கமாக அணியவும் முடியும்.
ஆண்களால் Skinny Jeans யை இலகுவாக அணியக் கூடியதாக இருந்தாலும், அதனை அணியும் போது சற்று பொறுமையாக கட்டிலில் இருந்தோ, அல்லது எங்காவது இருந்தோ அணிவதன் மூலம் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் அணியலாம்.
அதே நேரம் ஆண்கள் தாம் அணிந்திருக்கும் Skinny Jeans யைக் கழட்டும் போது அவசரப்படக் கூடாது. நீங்கள் ஜட்டியுடன் இருப்பதை யாராவது பார்த்து விடுவார்களோ என்று அவசரப்பட்டால், கால்களில் மாட்டிக் கொண்டு, அதனைக் கழட்ட போராட வேண்டி இருக்கும்.
சாதாரண ஜீன்ஸ் போன்று Skinny Jeans யை கழட்டாமல், எங்காவது உட்கார்ந்து அதன் கால் பகுதியின் அடியை இழுத்து கழட்டவும்.
ஆண்கள் Skinny Jeans அணியும் போது ஜீன்ஸை நன்றாக உயர்த்தி அணிய வேண்டும். இல்லாவிட்டால், நடக்கும் போதும், கடக்கும் போதும், உட்காரும் போதும் அசெளகரியமாக இருக்கும்.
எல்லா ஆண்களாலும் Skinny Jeans நீண்ட நேரம் அணிந்திருக்க முடியாது. சில ஆண்களுக்கு அவை தோலுடன் உரசிக் கொண்டு இருப்பது அசெளகரியத்தைக் கொடுக்கும். அதன் காரணமாக Chafing(உராய்வினால் நோவு ஏற்படல், தொடைகள் சிவத்தல்) கூட ஏற்படலாம்.
Comments
Post a Comment