நம்மில் அநேகமான ஆண்களுக்கு ஜீன்ஸ்(Jeans) அணிவது பிடிக்கும். நாம் நமது உடல் அமைப்புக்கு மிகச்சிறப்பாகப் பொருந்தும் ஜீன்ஸை தெரிவு செய்து அணியும் போது நாம் மேலும் அழகாக வெளித்தெரிவோம். Formal Dress எந்தளவுக்கு ஆண்களைக் கவர்ச்சியாகக் காட்டுமோ அது போல ஜீன்ஸ் ஆண்களின் தோற்றத்தை மேலும் மெருகேற்றி Sexy யாக இளமையாகக் காட்டும்.
ஆண்கள் ஜீன்ஸின் Rise, Cut, Type, Color போன்றவற்றை அவதானித்து வாங்க வேண்டும்.
Distressing Denim Jeans அல்லது Ripped Jeans(Denim Jeans with tears, holes, frays, and other apparent signs of damage can be called distressed), Stretchy Jeans(பார்ப்பதற்கு ஒடுக்கமானது, சிறியது போல இருக்கும், ஆனால் ஈய்ந்து கொடுக்கும்) போன்றன ஜீன்ஸின் வகைகளாகும்.
ஜீன்ஸின் ஜிப்பகுதியை வைத்தும் ஜீன்ஸை வகைப்படுத்தலாம். சில ஜீன்ஸில் ஜிப் இருக்கும். சிலவற்றில் பொத்தான்கள் இருக்கும். உங்களுக்கு எது அழகாக இருக்கோ அதை அணிந்து பார்த்து வாங்கவும்.
நீங்கள் ஜீன்ஸ் வாங்கும் போது உங்கள் இடுப்பு அளவை விட ஒரு Size அதிகமான அளவில் ஜீன்ஸ் வாங்குவதன் மூலம் இடுப்புக்குக் கீழே இறக்கி அணியலாம்.
Low Rise Jeans இடையில் தங்கும். Low Rise Jeans அணியும் போது Low Rise ஜட்டி அணியாவிட்டால், நீங்கள் அணிந்த ஜட்டியின்(Regular Underwear/Mid Rise) பாதி வெளியே எட்டிப் பார்த்த வண்ணம் இருக்கும்.
High Rise Jeans எல்லா ஆண்களுக்கும் அழகாக இருக்காது. தற்கால இளைஞர்களை பொறுத்தவரையில் High Rise Jeans ஆனது Old Fashion யை சேர்ந்ததாகும். தற்காலத்தில் Mid Rise and Low Rise Jeans களே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
Mens Hack: ஜீன்ஸின் அளவு, உங்கள் இடுப்பு அளவை விட பெரிதாக இருந்தால்,
ஜீன்ஸ் அணியும் போது இடுப்புக்குக் கீழே Tight ஆக வெளிக்காட்ட விரும்பும் ஆண்கள், உள்ளே ஜட்டி அணிந்து அதன் மேலே Boxer Shorts/Shorts அணிந்து ஜீன்ஸ் அணியவும்.
ஆனால் அதற்காக ஆண்கள் வெறுமனே Boxer Shorts/Shorts மாத்திரம் அணிந்து ஜீன்ஸ் அணியாமல், உள்ளே Support இக்கு Briefs ஜட்டி அணிந்து அதன் மேல் Boxer Shorts/Shorts அணிந்து ஜீன்ஸ் அணிவர்.
வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாது ஜீன்ஸ் அணியக் கூடாது. ஜீன்ஸின் துணியின் தடிமன் அதிகமாக இருப்பதால், அது நேரடியாக உங்கள் அந்தரங்கப் பகுதியில் உரசும் போது அசெளகரியமாக உணர்வீர்கள்.
ஜட்டி அணியாது ஜீன்ஸ் அணியும் போது ஜீன்ஸின் துணி உராய்ந்து உங்கள் அந்தரங்கப் பகுதிகளில் காயங்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆண்கள் மேலாடை இன்றி ஜீன்ஸ் அணிந்திருக்கும் போதே ஜீன்ஸ் உங்களுக்கு எந்தளவுக்கு பொருத்தமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் இடுப்பு அளவுக்கு ஏற்ற, உங்கள் உடல் அமைக்கு ஏற்ற ஜீன்ஸை நீங்கள் அணிந்து பார்த்து தெரிவு செய்யாவிட்டால், நீங்கள் அதனை அணிந்து அன்றாட வேலைகளை செய்யும் போது ஜீன்ஸின் ஜிப்பு(Zipper) தானாகவே திறபடலாம்.
Dress Show Room களில் உள்ள Trial Room களில் மேலாடை இன்றி(without Undershirt/Shirt/T-Shirt) ஜீன்ஸை அணிந்து பார்ப்பதன் மூலமே அது உங்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
ஜீன்ஸை அணிந்த பின்னர் கீழே குந்தி எழும்ப வேண்டும். அப்போது தான் அதில் உள்ள பிரச்சனைகள் உங்களுக்குத் தெரியும்.
நம்மில் பலர் ஜீன்ஸை அடிக்கடி துவைக்கிறோம். அதன் காரணமாகவே நாம் அணியும் ஜீன்ஸ் சீக்கிரம் பழுதடையும். ஆண்கள் ஜீன்ஸை எப்படி அணிய வேண்டும்? ஆண்களின் ஜீன்ஸை பராமரிக்கும் விதம் போன்றவற்றை இனி விளக்கமாகப் பார்ப்போம்.
ஜீன்ஸ் அணியும் போது Belt கட்டாயம் அணிய வேண்டும் என்ற தேவையில்லை. நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் உங்கள் ஜீன்ஸ் உங்கள் உடலில் தங்கவில்லை என்றால் Belt அணியவும்.
1. அடிக்கடி துவைக்கக் கூடாது: குறைந்தது 10 வாட்டி அணிந்த பின்னர், துர்வாடை வந்தால் மாத்திரம் துவைக்க வேண்டும். ஜீன்ஸை துவைக்கும் போது உள்பக்கத்தை வெளியே எடுத்து சிறிதளது Detergent பாவித்து துவைக்க வேண்டும். இதன் மூலம் ஜீன்ஸில் படிந்துள்ள அழுக்கு மற்றும் வியர்வையை மாத்திரம் நீக்கலாம். ஜீன்ஸின் நிறம்/சாயம் போகாது ஜீன்ஸைப் பாதுகாக்கலாம்.
2. ஒரே ஜீன்ஸை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அணியக் கூடாது: ஒரு நாள் அணிந்த ஜீன்ஸை, அன்றைய தினம் இரவு கழட்டும் போது உள்பக்கத்தை வெளியே எடுத்து லேசாக நிழலில் காய விட வேண்டும். அடுத்த நாள் வேறு ஜீன்ஸ்/Pant அணிய வேண்டும். இவ்வாறு குறைந்தது 10 நாட்கள் காய விட்டு, காய விட்டு அணிந்த பின்னர் துவைப்பது பற்றி யோசிக்கலாம்.
3. ஜீன்ஸில் கறை ஏற்பட்டால் அந்த இடத்தை மாத்திரம் Spot Cleaning செய்வது உகந்தது.
4. ஜீன்ஸ் அணியும் போது மறக்காமல் ஜட்டி அணிய வேண்டும், இதன் மூலம் உடல் அசுத்தங்கள், மற்றும் சிறுநீர்/விந்துக் கறைகள் நேரடியாக ஜீன்ஸில் படுவதைத் தவிர்க்கலாம். அந்தரங்கப் பகுதியில் உள்ள Skin சற்று Sensitive ஆக இருப்பதால், ஜீன்ஸை ஜட்டி அணியாமல் அணிவது நல்லதல்ல.
Pro Tips:
ஜீன்ஸ் அணியும் போது அநேகமான ஆண்கள் தமது Purse/Wallet யை பின்பக்க பாக்கெட்டி வைப்பர். ஆனால் வலது பக்க(முன்பக்க) பாட்கெட்டில் வைப்பதும் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும்.
ஜீன்ஸ் அணியும் போது Socks அணிவதன் மூலம் உங்கள் கவர்ச்சியை மேலும் அதிகரிக்கலாம்.
Comments
Post a Comment