ஆண்களின் நீளமான கை வைத்த சட்டைகளை(Long Sleeve Shirt) எடுத்துக் கொண்டால், அவற்றின் கைகளில் Cuff இல் ஒரு Button இருக்கும். அதே நேரம் அதில் உள்ள Placket(a slit in a garment) எனப்படும் கையில் உள்ள பிளவிலும் ஒரு Button இருக்கும், அதனை Placket Buttons எனலாம்.
Long Sleeve Shirt இன் கைகளில் இந்தப் பிளவு இல்லாவிட்டால் மணிக்கட்டுக்கு மேல் சட்டையை பின் தள்ளவோ அல்லது மடித்து விடவோ கூட முடியாது.
பொதுவாக சட்டையின் கைகளை உருட்டி மடிக்கும் போது(Sleeve Roll Up செய்யும் போது) Placket Button யையும் அணிய மாட்டார்கள், அதே நேரம் Cuff Buttons யையும் அணிய மாட்டார்கள்.
ஆனால், நீங்கள் விரும்பினால் Placket Buttons மாத்திரம் அணிந்து முழங்கையின் பாதி வரை(Forearm) இரண்டு மடிப்பு மடித்து விடலாம். அது கூட சிலருக்கு அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.
அதிலும் குறிப்பாக Gym இற்கு சென்று உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்கும் ஆண்களுக்கு தமது கைகளை Highlight செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.
Comments
Post a Comment