ஆண்களுக்கான வேட்டியை பொதுவாக நீளத்தை வைத்து இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று நான்கு முழ வேட்டி, மற்றையது எட்டு முழ வேட்டி. எட்டு முழ வேட்டியை டபுள் வேட்டி என்று அழைப்பர். அதாவது எட்டு முழ வேட்டியை இரண்டாக மடித்து நான்கு முழமாக அணிவதை டபுள் வேட்டி அணிதல் என்பர்.
ஆனால் வயது வந்த ஆண்கள் நான்கு முழ வேட்டி அணிவதை விட, எட்டு முழ வேட்டியை எட்டு முழமாக அணிவதே சிறந்ததாகும். இதன் மூலம் ஆண்கள் நான்கு முழ வேட்டி அணிந்திருக்கும் போது ஏற்படும் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். உதாரணமாக: வேட்டி விலகி தொடைகள் தெரிவது.
Jeans, Pant போல வேட்டி அணியும் போது Belt அணியும் ஆண்களுக்கு வசதியாக இருக்க Belt Loop வைத்த வேட்டிகளும் சந்தையில் விற்பனையாகின்றன.
வட இந்திய ஆண்களைப் போல Dhoti அணியத் தெரியாத ஆண்களுக்கு, Dhoti Pant களும் சந்தையில் விற்பனையாகின்றது.
ஆண்களின் வேட்டியை அதன் துணியின் அடிப்படையிலும் வேறுபடுத்தலாம். காட்டன் வேட்டி, பட்டு வேட்டி, பாலியஸ்டர் வேட்டி, ஒன்றுக்கு மேற்பட்ட துணிகளின் கலப்பில் உருவான வேட்டி(Blend Veshtis - Cotton + Polyester, Cotton + Silk, Silk + Polyester) போன்றவற்றை பிரதானமாகக் குறிப்பிடலாம்.
அதே நேரம் ஜரிகை வேட்டி(Zari - ஜரிகை - தங்கம்/வெள்ளி ஆகியவற்றை பயன்படுத்தி தயாரித்த நூல் இழை - பார்டர் வைத்தை வேட்டி), ஜரிகை இல்லாத Plain Veshti என்றும் ஆண்களின் வேட்டியை வேறுபடுத்தலாம். அதே போன்று கலர் வேட்டி, வெள்ளை வேட்டி, பட்டு வேட்டி என்றும் ஆண்களின் வேட்டிகளை வேறுபடுத்தலாம்.
சில Plain Veshti/காட்டன் வேட்டிகளில் வேட்டியின் கரைகளாக நிறக்கோடுகளும் வைத்திருப்பர்.
கலர் வேட்டிகளைத் தவிர வெள்ளை வேட்டிகளை அவற்றின் கரை வேலைப்பாடுகளை(Veshti Borders) வைத்தும் வேறுபடுத்துவர்.
கலர் வேட்டிகளை எடுத்துக் கொண்டால் முன்பு கறுப்பு வேட்டி, காவி வேட்டி, சிவப்பு வேட்டி போன்றனவே சந்தையில் இருந்தன, ஆனால் தற்சமயம் பல்வேறு நிறங்களில் கலர் வேட்டிகளைத் தெரிவு செய்யக் கூடியதாக உள்ளது. ஒரு நிறத்தை எடுத்துக் கொண்டாலே அதில் பலர் Shades களில் வேட்டிகள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன.
கலர் வேட்டிகளில் Single Color Veshti, Two Colors Veshti என்றும் தெரிவுகளை மேற்கொள்ளலாம். அதில் இரண்டு கலர்களைக் கொண்ட வேட்டிகள் அண்மையிலேயே சந்தையில் அறிமுகம் ஆனது.
அந்த கலர் வேட்டியின் இரண்டு பக்கமும் வெவ்வேறு நிறங்கள் இருக்கும். ஆனால் வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டும் போதும் அல்லது வேட்டியில் கெத்துக் காட்டும் போதும் இரண்டு நிறங்களும் வெளித்தெரியும். மற்றபடி ஏதாவது ஒரு நிறம் மாத்திரமே வெளித்தெரியும்.
Comments
Post a Comment