ஆண்கள் Ready Made ஆக சட்டை வாங்கும் போது சந்திக்கும் பிரச்சனைகளில் முதன்மையானது அவர்களின் அளவுக்கு ஏற்ற Perfect Fitting சட்டைகளை தெரிவு செய்ய முடியாமல் இருப்பதாகும். சில வேளைகளில் அவர்கள் தெரிவு செய்யும் சட்டைகளின் கைகள் மணிக்கட்டு(Wrist) வரை நீளமாக இருக்காது, அல்லது Tuck In செய்து அணியும் அளவுக்கு இடுக்குக்குக் கீழ் நீளமாக இருக்காது.
தற்காலத்தில் ஆண்கள் தமது உடல் அமைப்புக்கும், அளவுகளுக்கும் ஏற்ற சட்டைகளை தெரிவு செய்யும் போது உடலுடன் ஒட்டியது போன்ற Slim Fit வகை சட்டைகளையே அதிகம் தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. Ready Made Shirt தயாரிப்பவர்களும், Regular Fit Dress Shirt யை விட Slim Fit Dress Shirt களையே அதிகம் சந்தைப்படுத்துகின்றனர்.
இதன் காரணமாக உங்கள் தெரிவுகளும் Slim Fit வகை சட்டைகளுக்குள்ளேயே முடங்கி விடுகிறது. அதனால் உங்கள் Size இக்கு Slim Fit Shirt வாங்கப் போனால் அதில் ஏதாவது ஒரு குறைபாடு இருக்கத்தான் போகிறது.
அவ்வாறு எந்தவொரு குறைபாடும் இல்லாமல் உங்க Size இக்கு ஏற்ற Ready Made Slim Fit Shirt வாங்குவது எப்படி? அது மிகவும் எளிதான விடையம் இல்லை, ஆனால் முயற்சித்துப் பார்க்க மிகவும் இலகுவான ஒரு விஷயம் தான். உங்கள் சட்டையின் அளவு(Your Shirt Size) 17"(Size in Inches) ஆக இருந்தால், நீங்கள் Slim Fit Dress Shirt யை வாங்கும் போது 17 1/2" யை தெரிவு செய்து அணிந்து பார்த்து வாங்கவும்.
அந்த சட்டையின் கைகளின் நீளம், மற்றும் சட்டையின் நீளம் உங்களுக்கு Correct ஆக இருந்தாலும், அநேகமாக சட்டையின் இடுப்பு பகுதி சற்று பெரிதாக இருக்கும், ஆனால் அதனை ஒரு நல்ல டெய்லரின் உதவியுடன் சட்டையின் பின்புறம் Darts வைத்து, உங்கள் உடல் அளவுகளுக்கு ஏற்றாற் போல சட்டையை Alter செய்யலாம்.
உங்களுக்குத் தெரியுமா? ஆண்களின் Long Sleeves Shirt இன் Cuffs இல் ஏன் இரண்டு Buttons உள்ளது? ஆண்கள் எப்போதும் Cuffs யை மிகவும் இறுக்கமாகவும் அணியக் கூடாது. அதே நேரம் மிகவும் தளர்வாகவும் அணியக் கூடாது. ஓரளவுக்கு தளர்வாக இருக்கும் வகையிலேயே ஆண்கள் சட்டையின் Cuffs யை அணிய வேண்டும். அந்த இரண்டு Buttons களில் எதனை அணிவதன் மூலம் தேவையான அளவு தளர்வான இறுக்கத்தை சட்டைகளின் Cuffs களில் பெற முடியும் என்பதை அணிந்து பார்த்து தெரிவு செய்யவே இரண்டு Buttons கள் கொடுக்கப்பட்டுள்ளது.
Read More: ஆண்கள் சட்டை வாங்குவது எவ்வாறு?
Comments
Post a Comment