ஆண்கள் வேட்டி அணியும் போது Shirt/Dress Shirt(Casual/Formal), T-Shirt, Kurta/Kurti/Jippa/Juppa Shirt போன்ற மேலாடைகளை அணியலாம். அவற்றின் நீளமானது(Length) குறைந்தது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டியின் கட்டை மறைக்கும் அளவுக்கு இருக்க வேண்டும். ஆகவே வேட்டி அணியும் போது அணியும் சட்டையின் Minimum Shirt Length உங்கள் இடுப்பு வரையாவது இருக்க வேண்டும்.
நீங்கள் வேட்டி அணியும் போது அணியும் மேலாடையின் Maximum Shirt Length(நீளம்) முழங்கால்கள் வரை இருக்கலாம். அதற்கு மேலே இருந்தால் உங்கள் வேட்டி வெளித்தெரியாது.
வேட்டி(Dhoti) அணிந்திருக்கும் போது மிகவும் நீளமாக மேற்சட்டை அணிந்திருக்கும் ஆண் - இது தவறு
ஆகவே வேட்டி அணியும் போது அணியும் மேலாடையினைத் தெரிவு செய்யும் போது, அதன் நீளம் முழங்கால்களுக்கு மேல் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளவும்.
நீங்கள் வேட்டி அணியும் போது அணியும் மேலாடைகளுக்கு Long Sleeve(நீளமான கைகள்) இருந்தாலும் பரவாயில்லை, Short Sleeve(குறுகிய கைகள்) இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் விரும்பினால் வேட்டி அணிந்து Long Sleeve சட்டை அணியும் போது அவற்றின் கைகளை மடித்துக் கூட விடலாம்.
ஆண்கள் வேட்டி அணியும் போது பனியனை எப்படி அணியலாம்? பொதுவாக வேட்டி அணியும் போது பனியனை உள்ளே விட்டுத் தான் வேட்டியைக் கட்டுவர். அதன் மேல் அணியும் மேற்சட்டையை Tuck In செய்து அணியமாட்டார்கள்.
ஆண்கள் வேட்டி அணியும் போது அணியும் மேற்சட்டையை Tuck In செய்து அணியும் போது அவர்களின் தோற்றத்தை அது அழகாக வெளிக்காட்டாது. ஆகவே உங்கள் உடல் அளவுகளுக்கு ஏற்ற Perfect Fitting சட்டையைத் தெரிவு செய்து, வேட்டி அணியும் போது அணியவும். Ready Made ஆக வாங்குவதாக இருந்தால், ஒரு டெய்லரிடம் கொடுத்து உங்கள் உடல் அளவுகளுக்கு ஏற்றாற் போல சட்டையின் அளவுகளை Alter செய்யவும்.
உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டும் போது சட்டையை உள்ளே வைத்தே மடித்துக் கட்டுவர்.
பட்டு வேட்டி(Silk Veshti) வாங்கும் போது பட்டு சட்டையை அதே துணியில்(Material - Silk or Blend of Puresilk & Polyester) வாங்குவது வழமை. பொதுவாக Combo(Full-sleeve Readymade Pure Silk & Polyester Shirt, Veshti,Angavastram(Salvai), Hankie, Perfume & Belt) வாக எல்லாவற்றை வாங்கக் கூடியதாக இருக்கும்.
Ready Made ஆக உங்களுக்கு பட்டுத் துணியில் சட்டை வாங்க முடியாவிட்டால், டெய்லரிடம் சென்று அளவெடுத்தும் தனிப் பட்டுத் துணியில் சட்டை தைக்கலாம், ஆனால் அதற்கு செலவு அதிகமாகும். எல்லோராலும் பட்டுத் துணியில் சட்டை தைக்க முடியாது. உங்களால் பட்டுத் துண்டியில் சட்டை தைக்க முடியாவிட்டால் Silk & Cotton Blend or Blend of Puresilk & Polyester, or வேட்டியின் நிறத்தை ஒத்த நிறத்தில் உள்ள Cotton Shirt களையும் பட்டு வேட்டி அணியும் போது அணியலாம்.
Recommended: ஆண்கள் வேட்டி கட்டுவது எப்படி? ஆண்கள் வேட்டி அணிவது பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படையான விடையங்களின் தொகுப்பு
Keywords: ஜிப்பா, ஜுப்பா, குர்தா, குர்தி சட்டை
Comments
Post a Comment