வேட்டியினூடாக நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டி வெளித்தெரிந்தால் எப்படி இருக்கும்? வேட்டி கட்டி கெத்தாக Photos, Videos எடுக்கும் போது உங்கள் ஜட்டியை மற்றவர்களால் வேட்டியினூடாகப் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? பொதுவாக நான்கு முழம் வேட்டி கட்டும் போது இந்தப் பிரச்சனையை ஆண்கள் அதிகம் சந்திப்பர்.
வயது வந்த ஆண்கள் எட்டு முழம் வேட்டி கட்டுவதன் மூலமும், வெளிச்சமான இடங்களில் நின்று Photos, Videos எடுப்பதைத் தவிர்ப்பதன் மூலமும் இதனை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம்.
வேட்டி அணியும் போது சில ஆண்கள் வேட்டியின் கரையின் நிறத்திலும், சிலர் அணியும் சட்டையின் நிறத்திலும், சிலர் அணியும் வேட்டியின் நிறத்திலும் ஜட்டியைத் தெரிவு செய்து அணிவதுண்டு.
வெள்ளை நிற வேட்டி அணியும் போது, வெள்ளை நிற ஜட்டி அணியக் கூடாது. அது வேட்டியை ஊடுருவி வெளித்தெரியும்.
வெள்ளை நிற வேட்டி கட்டும் போது(குறிப்பாக நான்கு முழம் வேட்டி கட்டும் போது) ஆண்கள் அதிகம் Bright ஆன நிற ஜட்டிகளை(Orange, Red, Pink, Blue, Yellow) தெரிவு செய்து அணியக் கூடாது. அவ்வாறு அணிந்தால், உள்ளே அணிந்திருக்கும் ஜட்டி/ஜட்டியின் நிறம், அணிந்திருக்கும் வெள்ளை நிற வேட்டியை ஊடுருவி வெளித்தெரியும் சந்தர்ப்பம் அதிகமாகும்.
Tips: ஆண்கள் எந்த நிறத்தினதும் Dark ஆன நிற ஜட்டிகளை தெரிவு செய்து அணியலாம். உதாரணமாக: Light Green இக்குப் பதிலாக Dark Green நிற ஜட்டி
வெள்ளை நிற வேட்டி அணியும் போது ஆண்கள் என்ன நிற ஜட்டியைத் தெரிவு செய்து அணியலாம்?
வயது வந்த ஆண்கள் வெள்ளை நிற வேட்டி கட்டும் போது அவர்களின் உடலின் நிறத்தை(Skin Color/தோலின் நிறம்) ஒத்த நிறத்தில் உள்ள ஜட்டியைத் தெரிவு செய்து அணியலாம், அல்லது சாம்பல் நிறம்(Grey Color) ஜட்டி அணியலாம்.
இதன் மூலம் நாம் வெள்ளை நிற வேட்டி அணிந்திருக்கும் போது வேட்டியை ஊடுருவி ஜட்டி/ஜட்டியின் நிறம் வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம். இது வெள்ளை வேட்டிக்கு மாத்திரம் அல்ல, வெள்ளை நிற Pant/Shorts இக்கும் பொருந்தும். வெள்ளை நிற பனியன் அணிந்து வெள்ளை நிற சட்டை அணியும் போதும் இந்தப் பிரச்சனை ஏற்படும். கலர் வேட்டி அணியும் போது நீங்கள் விரும்பிய நிற ஜட்டியைத் தெரிவு செய்து அணியலாம்.
வேட்டி அணியும் போது வேட்டியின் நிறத்திலும் ஆண்கள் தமது ஜட்டியைத் தெரிவு செய்து அணிவர். ஆனால் இது வெள்ளை நிற வேட்டிக்கு மாத்திரம் பொருந்தாது.
Recommended:
ஆண்கள் வேட்டி அணியும் போது ஏன் ஜட்டி அணிய வேண்டும்?
ஆண்கள் என்ன ஜட்டி அணிந்து லுங்கி, வேட்டி கட்டுவது சிறந்தது?
உங்களுக்கு வேட்டி கட்டத் தெரியுமா? ஆண்கள் வேட்டி கட்டுவது எப்படி? வேட்டி கட்டும் ஆண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விடையங்கள்.
Keywords: Men Underwear, Veshti, What color underwear is good to wear them inside Veshti?































Comments
Post a Comment