முகத்திற்கு சவர்க்காரம் போட்டு முகத்தைக் கழுவி, நேர்த்தியாக சவரம் செய்து, அல்லது தாடி மீசையை Trim செய்து மாத்திரம் ஆண்களால் தமது முகத்தில் உள்ள சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியாது. ஆண்கள் தமது முகத்தை எப்படி பொலிவுடன் வைத்திருப்பது? ஆண்கள் Face Wash, Cleanser, மற்றும் Face Scrub பாவிப்பது எப்படி? ஆண்கள் எப்போது முகத்திற்கு Powder போடலாம்? போன்ற விடையங்கள் தொடர்பாக இந்தப் பதிவில் பார்க்கலாம்.
Face Wash இக்கும் Cleanser இற்கும் இடையிலான வித்தியாசம் என்ன? இவை இரண்டும் கிட்டத்தட்ட ஒரே வேலையைத் தான் செய்கின்றன. இதன் காரணமாகவே சில Brands, Cleanser என்றே தமது கம்பனியின் Face Wash உற்பத்திக்களை சந்தைப்படுத்துவதுண்டு.
ஆனால் பொதுவாக Face Wash ஆனது நமது முகத்தின் சருமத்தில் உள்ள எண்ணெய்த்தன்மையை மேலோட்டமாக நீக்கி, முகத்தின் ஈரப்பதனை(Moisture) தக்க வைக்க உதவுகிறது. அதே நேரம் Cleanser இதே செயலை சற்று Advance ஆக செய்கிறது. இது தான் இவை இரண்டிற்குமான பிரதானமான வித்தியாசம்.
ஆகவே ஆண்கள் அதிகாலையில் எழுந்தவுடன் Face Wash பாவித்து முகத்தைக் கழுவலாம். வெளியில் சென்று மாலையில் வீடு திரும்பியதும் உங்கள் முகத்தை Cleanser பாவித்து சுத்தம் செய்யலாம். அதன் மூலம் சருமத்தில் உள்ள எண்ணெய்த்தன்மையை மாத்திரம் அல்லாது, வெளியில் சென்று வந்ததால் முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகள், தூசு போன்றவற்றையும் நீக்க முடியும். அத்துடன், சுத்தமின்மையால், அலர்ஜிகளால் முகத்தில் பருக்கள் தோன்றுவதையும் கட்டுப்படுத்த முடியும்.
ஆண்கள் முகத்திற்கு சவர்க்காரம் போடலாமா? இல்லை. ஆனால் Dove Beauty Bar soaps களை முகத்திற்குப் பாவிக்கலாம். Ancil Soap யையும் முகத்திற்குப் பாவிக்கலாம். ஆனால் உடலுக்குப் போடும் Bathing Bar Soap(or Bathing Gel) களை முகத்திற்கு பாவிப்பது உகந்தது அல்ல. Soap இல் உள்ள PH அளவு, மற்றும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள், இந்த முடிவினை நீங்கள் எடுப்பதில் செல்வாக்கு செலுத்தும். அதே நேரம் சாதாரண சவர்காரங்களால் முகத்தை ஆழமாக ஊடுருவி சுத்தம் செய்ய முடியாது. ஆண்கள் முகத்திற்கு சவர்க்காரம் போடும் போது முகத்தில் Hydrating, Antioxidation, Pore-Clearing நடைபெறாது. அதன் காரணமாகவே Face Wash or Cleanser பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது.
சாதாரண Face Wash யை விட நன்றாக முகத்தில் உள்ள அழுக்குகள், எண்ணெய்ப் பசையை நீக்க விரும்பினாலும், முகத்தை எப்போதும் Fresh ஆக பொலிவுடன் வைத்திருக்க விரும்பினாலும், ஆண்கள் Cleanser பயன்படுத்துவது உகந்தது.
சிலருக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான், வெளியில் சென்றதும் முகம் கருமை நிறமாகும், அதிகம் எண்ணேய் சுரக்கும். முகம் முழுதும் எண்ணெய் பூசியது போல இருப்பதாகும். இதனையும் Cleanser பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.
சிலருக்கு அவர்களின் முகம் எப்போதும் Dry ஆக இருக்கும். இவ்வாறு Dry Skin உடைய ஆண்கள் Face Wash யைத் தெரிவு செய்து பயன்படுத்தும் போது அவர்களின் முகத்தில் ஈரப்பதன்(Moisture) பாதுகாக்கப்படும். இதன் காரணமாக அவர்களின் தோல் உலர்ந்து போகாது.
அதே நேரம் Cleanser பயன்படுத்தும் போது, நமது தோலில் உள்ள இறந்த செல்களும் அகற்றப்படுகிறது. அதன் காரணமாக உங்கள் முகம் பொலிவடையும். இதன் மூலம் Suntan யையும் நீக்க முடியும். Suntan என்பது வெயிலில் திருந்ததால் தோலில் ஏற்பட்ட கருமை நிறம் ஆகும்.
ஆண்கள் Cleanser யைத் தெரிவு செய்யும் போது, உங்கள் தோலின் தன்மை மற்றும் வகை(Skin Condition and Type - Pimples, Wrinkles, Dark Spots, Pimple Marks, Dry Skin, Oily Skin, etc.) போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தெரிவு செய்ய வேண்டும்.
Cleanser யைத் தெரிவு செய்யும் போது அவதானிக்க வேண்டிய Key Ingredients:
1. Dry Skin எனின் Hyaluronic acid
2. Oily/Pimple Skin எனின் Salicylic acid அல்லது Benzoyl peroxide
3. Pimple Marks, Suntans என்றால் Glycolic acid
4. முகத்தை வெள்ளையாக்க(Skin Fair) Kojic Acid or Vitamin C
நீங்கள் வாங்கும் Cleanser இல் இவை உள்ளனவா என்பதை அவதானித்து வாங்குவதன் மூலம் உங்கள் சருமப் பிரச்சனையை இவற்றை வைத்தே சரி செய்ய முடியும்.
ஆண்கள் எப்படி Cleanser பயன்படுத்த வேண்டும்?
Cleanser யைப் பயன்படுத்தும் போது அப்படியே முகத்தில் பூச வேண்டாம். முகத்தை ஈரமாக்கிய பின்னர், தேவையான அளவு Cleanser யை, ஈரமான கைகளில் எடுத்து எடுத்து உள்ளங்கைகளினால் தேய்த்து நுரை(Foam) வரச் செய்து அதனையே முகத்தில் பூச வேண்டும். முகத்தில் பூசியவிட அதனைக் கழுவ வேண்டாம். குறைந்தது ஒரு நிமிடமாவைது அப்படியே வைத்திருங்கள். அப்போது தான் Cleanser இல் இருக்கும் ingredients, active ஆகும். அதன் மூலமே, அவற்றைப் பயன்படுத்தியதனால் நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்.
ஆண்கள் Face Wash or Cleanser யை தினமும் பயன்படுத்த வேண்டும். ஆனால் Face Scrub யை வாரத்திற்கு இரண்டு நாள் மாத்திரமே பயன்படுத்த வேண்டும். Face Scrub என்பது Face Wash or Cleanser யை விட மிக ஆழமாக சருமத்தை ஊடுருவி முகத்தை சுத்தம் செய்யக் கூடியது. அழுக்குகளை நீக்கக் கூடியது.
Face Scrub இல் உள்ள polished walnut shell fragments, salt crystals போன்ற scrubbing components(தேய்க்கும் உள்ளடக்கங்கள்) முகத்தில் உள்ள அழுக்குகளையும் இறந்த தோல்(Dead Skin Cells) போன்றவற்றை நீக்க உதவும். அத்துடன் முகத்தில் உள்ள தோல்களை புத்துணர்ச்சியடையச் செய்து அவற்றில் உள்ள துவாரங்களைத் திறந்து ஏனைய Skin Care Products களை அகத்துறிஞ்சும் வகையில் தோலை மென்மையாக்கும்.
குறிப்பு: Face Scrub பயன்படுத்த முதல் Cleanser பயன்படுத்த வேண்டும்.
குறிப்பு: முகப்பரு அதிகமுள்ள ஆண்கள் Full Shave செய்வதை விட, Trimmer use செய்து தாடி, மீசையை Trim செய்வது நல்லது. Full Shave செய்ய பயன்படுத்தும் Shaving Cream, மற்றும் Full Shave செய்த பின்னர் பயன்படுத்தும் After Shave போன்றவற்றால் கூட உங்கள் சருமம் வறண்டு போகலாம்.
ஆண்கள் Face Cream பூசலாமா? அல்லது Face Serum பயன்படுத்தலாமா?
Face Serums & Oils என்றால் என்ன? குறிப்பிட்ட தோல் பிரச்சனைகள், உதாரணமாக: Wrinkles(தோல் சுருக்கம்), Acne(முகப்பரு - அக்னீ), Dry Skin(உலர்ந்த சருமம்) and Dullness(சோர்வான தோற்றம்) போன்றவற்றை சரி செய்ய இதனை பயன்படுத்துவர்.
Face Serum ஆனது anti-aging skincare product ஆகும். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதனைப் பயன்படுத்தலாம். அதன் மூலம் தமது முகத்தோற்றத்தை இளமையாக வைத்திருக்கலாம்.
Face Serum ஆனது தோலின் ஆழத்திற்கு Hydrating Active Ingredients, அதாவது Hyaluronic acid யை எடுத்துச் செல்லும். ஆனால் Face Cream தோலின் மேற்பரப்பில் உள்ள ஈரப்பதனை Lock செய்து நீண்ட நேரம் முகத்தை ஈரலிப்பாக வைத்திருக்கும்.
உங்கள் பிரச்சனைக்கு தீர்வாக உள்ள Face Serum யை எடுத்து 3–4 drops or pea-sized amounts யை முகத்திலும் கழுத்துப் பகுதியிலும் அங்காங்கே மேலோட்டமாக தெளித்து, அவை அகத்துறிஞ்சப்படும் அளவுக்கு முகம் முழுதும் Massage செய்து விட வேண்டும். அங்காங்கே சிந்திய Face Serum துளிகளை முகம் முழுதும் பரவும் வகையில் தேய்த்து விட வேண்டுமே தவிர, முகத்தை Face Serum இனால் குளிப்பாட்டக் கூடாது.
ஒன்றுக்கு மேற்பட்ட Face Serum யை பயன்படுத்துவதாக இருந்தால் முதலில் உங்கள் பிரதானமான பிரச்சனைக்குரிய Face Serum யைப் பயன்படுத்த வேண்டும். அது Absorb செய்யப்பட்ட பின்னர் அடுத்த Face Serum யைப் பயன்படுத்த வேண்டும்.
Face Serum யை அளவுக்கதிகமாக பாவிக்க முடியாது. அப்படிப் பாவித்தால் சருமம் வரண்டு போகும். ஆனால் Face Cream அப்படி அல்ல. எல்லா நேரமும் பூசலாம். எவ்வளவும் பூசலாம். தோலின் மேற்பரப்பை பாதுகாப்பது, ஈரலிப்பை தக்க வைத்துக் கொள்வதும் Face Cream இன் பிரதான தொழிலாகும். ஆனால் Face Serum ஆனது குறிப்பிட்ட சருமப் பிரச்சனையை மாத்திரம் சரி செய்யும் தீர்வாகும்.
Face Serum பாவித்து விட்டு, அதன் மேலே Face Cream பாவிக்கலாம். ஆனால் Face Cream பாவித்து விட்டு அதன் மேலே Face Serum பாவிக்க முடியாது.
Facial Toners யை அவசியம் ஆண்கள் பயன்படுத்த வேண்டுமா?
Toners/Facial Toners உங்கள் சருமத்தை, அதில் இயற்கையாக உள்ள ஈரப்பதனை நீக்காது, சீக்கிரமாக தூய்மை செய்து ஈரலிப்பாக்க(Quick hit of Hydration) உதவும். அதே நேரம் உங்கள் முகத்தின் சருமத்தில் உள்ள துவாரங்களை(Pores) இறுகச் செய்யும் அதே வேளை, அவை(Pores) வெளித்தெரிவதையும் குறைக்கும். அத்துடன் Smooth(கரடு முரடு அல்லாத) ஆன சரும தோற்றத்தை உருவாக்கும். Facial Toners யை ஒரு நாளுக்கு ஒரு தடவை மாத்திரமே உபயோகிக்க வேண்டும். அளவுக்கதிகமாக பாவித்தால் முகம் வரண்டு போகும்.
முகம் கழுவிய பின்னர் Serum or Moisturizer பயன்படுத்த முன்னர் Toners பாவிக்க வேண்டும். அவ்வாறு Toners பாவிக்கும் போது முகத்தில் தேங்கியிருக்கும் அழுக்கு, எண்ணெய் பசை, முன்னர் போட்ட Make Up(Leftover) போன்றவற்றை நீக்க உதவும். Toners யை பஞ்சில் தொட்டு முகம் முழுதும், கழுத்து, மேல் பகுதி நெஞ்சு போன்ற இடங்களில் தேய்த்து பூச வேண்டும். அவசியம் Cotton Pad(பஞ்சு) பயன்படுத்த வேண்டும் என்றில்லை. சில சிறு துளிகளை உங்கள் உள்ளங்கைகளில்(Palm) இட்டு, தேய்த்து முகம் முழுதும் பூசலாம்.
Facial Toners வகைகளும், அவற்றை பயன்படுத்துவதற்கான நோக்கங்களும்,
- Rosewater for Hydration
- Chamomile for Soothing
- Tea tree oil to Fight Oil and Bacteria
- Aloe vera to Calm Inflammation and Redness
- Vitamin E for Hydration
- Plant stem cells for Antioxidants and Anti-aging properties
Facial Toners யை அவசியம் ஆண்கள் பயன்படுத்த வேண்டுமா? உங்களுக்கு Make Up போடும் பழக்கம் இருந்தால், அல்லது சினிமா/நடாகத் துறையில் அல்லது Social Media Influencer ஆக இருந்தால், பாவிக்கலாம். ஆனால் ஆண்களைப் பொறுத்தவரையில் Facial Toners யைப் பாவிப்பது அவசியம் இல்லை.
Face Powder யை புகைப்படம் எடுக்கும் போது முகத்தில் இருக்கும் வியர்வை, எண்ணெய்ப் பசையால் உருவாகும் Glare யை சரி செய்ய பயன்படுத்த முடியும்.
Vaseline போன்ற Moisturizer யை ஆண்கள் உடல் முழுதும் பாவிக்கலாம். அதிகம் வெயிலில் வேலை செய்யும் ஆண்கள் Sunscreen (or Sunblock/Sun Cream) பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் Sun Burn, மற்றும் முகம் வெயிலுக்கு கருப்பதை தவிக்க முடியும். Sunscreen யை தெரிவு செய்து வாங்கும் போது அதில் SPF 50+ உள்ளதா என்பதை கவனிக்கவும். ஆண்கள் உதடுகளுக்கு Lip balm பூசலாம், அதே நேரம் உங்கள் உதடுகளை ஒத்த நிறத்தில் லேசாக Lipstick கூட பூசலாம்.
உங்களுடைய Skin Care Routine என்ன? உங்களுடைய Face Skin Care Routine என்ன? நீங்கள் பயன்படுத்தி பயன் அடைந்த Cosmetic பொருட்கள் என்ன? Comment பண்ணுங்க.
Keywords: How to use Face Wash in Tamil? How to use Cleanser in Tamil? How to use Face Scrub in Tamil? How to use Face Serum in Tamil? How to use Face Cream in Tamil? How to use Face Powder in Tamil? Men Facial Care, Oily Skin, Pimples, Dark Spots, Men Skin Care, How to use cosmetic products? How to buy cleanser and face wash? Men Skin Care Essentials. Men Cosmetic Items. ஆண்களுக்கான Make Up Guide, ஆண்கள் Make Up போடுவது எப்படி? மாப்பிள்ளைக்கான முக அலங்காரம், பேஷியல், ஆண்கள், ஆண்கள் முகத்தை அழகாக்கும் குறிப்புகள்
Comments
Post a Comment