புகைப்பிடிக்கும் ஆண்களின் உதடுகள் கறுப்பாகும் என்னும் கருத்து சமூகத்தில் நிலவி வருகிறது. இது உண்மையா? ஒரு ஆண் புகைப்பிடிக்கிறான் என்று அவனது உதடுகளின் நிறத்தை வைத்து உறுதி செய்யலாமா? நிச்சயமாக இல்லை.
புகைப்பிடிக்கும் ஆண்களின் உதடுகள் கருமையாவது உண்மை தான். ஆனால் எல்லாருக்கும் கருமையாக மாறுமா? இயற்கையாகவே உதடுகள் கருமையாக இருக்கும் ஆண்களும் நமது சமூகத்தில் இருக்கின்றனர்.
எவ்வளவு புகைப்பிடித்தாலும், எப்போதும் செவ்விதழ்கள் போல சிவப்பாக இருக்கும் உதடுகளை உடைய ஆண்களும் இருக்கின்றனர்.
சிகரெட், பீடி தவிர்ந்த Vape, Shisha புகைக்கும் ஆண்களின் உதடுகள் கருப்பாகுமா? இவை அனைத்தும் விவாதத்திற்குரிய விடையங்களாகும். ஆகவே ஒரு ஆண் புகைப்பிடிக்கிறானா இல்லையா என்பதை அவனிடமே கேட்டுத் தெரிந்து கொள்வது உகந்தது.
ஆனால் வருடக்கணக்காக புகைப்பிடிக்கும் ஆண்களின் உதடுகளும், பல் ஈறுகளும்(Gums) Hyperpigmentation காரணமாக இயற்கையான நிறத்தை இழக்கும். கருமையாக மாறும். அதே நேரம் செங்குத்தாக(Vertical) நிறைய சுருக்கங்கள் உதடுகளைச் சூழ ஏற்படும். சில ஆண்களுக்கு சிகரெட்/பீடியை உதடுகளில் வைத்திருந்த பகுதி மாத்திரம் கருமையடைந்திருக்கும். அதனை மறைப்பதற்கும் சில ஆண்கள் லிப்ஸ்டிக் பூசுவர்.
புகைப்பிடிக்கும் ஆண்களின் உதடுகள் எவ்வாறு கருமையடைகின்றன?
ஆண்கள் புகைப்பிடிக்கும் போது சிகரெட்/பீடியில் இருந்து வெளிவரும் வெப்பத்தை உதடுகளில் உள்ள தோல் உணர்கிறது. அதனால் உங்கள் தோலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க அந்த இடத்தில் மாத்திரம் மெலனினை(Melanin) அதிகம் சுரக்கிறது.
அதன் காரணமாக அவ்விடம் மாத்திரம் கருமை நிறமடைகிறது. இது கிட்டத்தட்ட Short Sleeve/Half Sleeve Shirt அணிந்திருக்கும் போது கைகள் மாத்திரமும், Collar இல்லாத T-Shirt அணிந்து வெயிலில் திரியும் போது, பின் கழுத்துப் பகுதியும் கைகளும் மாத்திரமும் கருமை நிறமடைவதைப் போன்ற செயற்பாடாகும்.
Tips: சிகரெட், பீடி, சுருட்டு புகைக்கும் போது அதன் புகையை மாத்திரம் உள்ளே இழுக்கவும். உங்கள் உதடுகளில் சூட்டினை(Hot) உணர்ந்தால், அந்த சூடு குறையும் வரை தற்காலிகமாக சிகரெட், பீடி, சுருட்டை வாயில் இருந்து எடுக்கவும். உதடுகளுக்கு அருகில் நெருப்பு நெருங்கும் வரை புகைக்க வேண்டாம்.
Tips: நேரடியாக உதடுகளில் சிகரெட்/பீடி/சுருட்டை வைப்பதை விட, விரல்களுக்கு இடையே அவற்றை வைத்து புகைப்பதன் மூலம், உதடுகள் சூட்டினை உணர்வதை கட்டுப்படுத்தலாம்.
Tips: Cigarette Holder Filter Washable Mouthpiece, Nicofree Cigarette Safety Filters போன்றவற்றைப் பாவிப்பதன் மூலம் புகைப்பிடிப்பதால் உதடுகள் கருமையாவதைக் கட்டுப்படுத்த முடியும்.
புகைப்பிடிக்கும் ஆண்களின் உதடுகள் கருமையடைந்திருந்தால் அதனை சரி செய்வது எப்படி?
தினமும் உதடுகளுக்கு சீனி/சக்கரையுடன்(Sugar) Almond அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து உதடுகளுக்கு பூசி வர வேண்டும். அதனைத் தொடர்ந்து புகைப்பிடிக்கும் ஆண்கள் Lip Balm பயன்படுத்த வேண்டும். சீக்கிரம் அதனை சரி செய்ய, ஆண்கள் புகைப்பிடிப்பதையும் நிறத்த வேண்டும்.
Recommended:
ஆண்கள் புகைப்பிடிப்பது எவ்வாறு?
புகைப்பிடிக்கும் ஆண்களின் ஆண்குறி விறைப்படையாதா?
Comments
Post a Comment