முன்னர் ஆண்களுக்கு பட்டு வேட்டிகளும் வெள்ளை வேட்டிகளுமே விற்பனைக்கு இருந்தன. ஆனால் இன்று பல்வேறு நிறங்களில் Cotton வேட்டிகளும், Cotton Blend வேட்டிகளும், பட்டு வேட்டிகளும் விற்பனைக்கு உள்ளன. ஆண்கள் கலர் வேட்டி வாங்குவது, சாதாரண வெள்ளை வேட்டிகள் வாங்கு போன்றதே. ஆனால், அவற்றை வாங்கும் முன்னர், நாம் சில விடையங்கள் தொடர்பில் அவதானிக்க வேண்டும்.
கலர் வேட்டிகள் வாங்குவதற்கு முன்னர், நாம் எவற்றைக் கவனிக்க வேண்டும் என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. உங்களிடம் உள்ள மேலாடைகளின்(Shirts, T-Shirts) நிறத்தை அடிப்படையாகக் கொண்டு Matching - Matching Color இல் கலர் வேட்டிகளைத் தெரிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், வாங்கும் வேட்டியின் நிறத்திற்கு Matching ஆக புது சட்டையும் வாங்க வேண்டும்.
2. வெள்ளை வேட்டிகள் வாங்குவதாக இருந்தாலும், அவற்றின் வேட்டிக் கரையின்(Border) நிறத்தைப் பார்த்து வாங்க வேண்டும். அப்போது தான் உங்களிடம் உள்ள சட்டைகளை அதனுடன் அணிய முடியும்.
3. ஏற்கனவே உங்களிடம் உள்ள கலர் வேட்டிகள் தொடர்பில் அறிந்திருப்பது அவசியம். இதன் மூலம் திரும்பவும் ஒரே மாதிரி நிற வேட்டிகளை வாங்காதிருக்கலாம்.
4. தற்காலத்தில் ஒரு நிறத்திலேயே பல Shades களில் வேட்டிகள் விற்பனைக்கு உள்ளன. உங்கள் உடலின் நிறத்திற்கு எது பொருந்துமோ அதை மாத்திரம் பார்த்து வாங்கவும்.
5. சில நிற வேட்டிகள் கோயில் திருவிழாக்கள், பூஜைகளின் போது மாத்திரமே அணிய முடியும். ஆனால் அவற்றை விரும்பினால் அன்றாட வாழ்விலும் பயன்படுத்தலாம்.
6. வெள்ளை நிற வேட்டிகளும், கலர் வேட்டிகளும், ஏன் பட்டு வேட்டிகளும் கூட அவற்றின் Border களின் அளவின் அடிப்படையில் வேறுபடும். உங்களுக்கு எந்த மாதிரி Border வேண்டும் என்பதை முடிவு செய்து, அதன் பின்னர், வேட்டிகளைத் தெரிவு செய்யலாம்.
எல்லா நிற வேட்டிகளும், எல்லா ஆண்களுக்கு பொருந்தாது. கலர் வேட்டியை கைக்கு அருகில் வைத்துப் பார்த்து, நல்லா இருந்தால் மாத்திரம் வாங்கவும். நமது நாட்டின் கால நிலைக்கு, பட்டு வேட்டிகளும் பருத்தி வேட்டிகளுமே உகந்தன. Polyester Blend வேட்டிகளை வாங்குவதைத் தவிர்க்கவும்.
Recommended: ஆண்களின் வேட்டி தொடர்பில் மேலும் பல விடையங்களைத் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
Comments
Post a Comment