ஆண்களின் உள்ளாடைகளை எடுத்துக் கொண்டால் எல்லா பிராண்ட் ஜட்டிகளும் ஒரே மாதிரி இருக்காது. என்னதான் இடுப்பு அளவை வைத்தும் உங்கள் உடல் அமைப்பை வைத்தும் ஜட்டிகளைத் தெரிவு செய்தாலும் கூட சில வேளைகளில் அவற்றை நீண்ட நேரம் அணிந்திருக்க அசெளகரியமாக இருக்கும். அதே போல எல்லா கடைகளிலும் எல்லா பிராண்ட் ஜட்டிகளும் கிடைக்காது. பொதுவாகவே வயது வந்த ஆண்கள் அனைவரிடமும் அவர்களுக்கான Perfect Fitting Underwear க்கான தேடல் எப்போதும் இருக்கும்.
கல்யாணத்திற்கு மாப்பிள்ளைக்கு புது ஆடை, புது ஜட்டி, பனியன் வாங்குவது இயல்பான ஒன்று. ஆனால் அதனை திருமணத்திற்கு முதலே ஒரு முறை Trial போல அணிந்து பார்த்து அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
திருமணத்திற்கு வாங்கிய ஆடைகளை, உள்ளாடைகளை திருமணத்தன்றே முதல் முறை அணியும் போது அதில் பல்வேறு குறைகளை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். திருமண ஆடையே உங்களுக்கு Set ஆகாது கூட போகலாம்.
தாலி கட்டும் வரை அல்லது மோதிரம் அணியும் வரை புது ஜட்டியை அணிந்திருக்க முடியவில்லை, அசெளகரியமாக இருக்கிறது என்பதற்காக மணமேடையில் வைத்தே மாப்பிள்ளை, அணிந்திருக்கும் ஜட்டியைக் கழட்டிப் போட முடியுமா?
என்ன தான் நீங்க Regular ஆக பாவிக்கிற Underwear Brand இல் புது ஜட்டி வாங்கியிருந்தாலும், எல்லா ஜட்டியும் ஒரே மாதிரி இருக்கும்னு சொல்ல முடியாது.
ஓரே ஜட்டி Box ல இருக்கிற எல்லா ஜட்டியும் உங்களுக்கு ஒரே மாதிரி Fit ஆகாது என்பது ஆண்கள் எல்லோரும் அனுபவ ரீதியாக உணர்ந்த உண்மை. ஒரு சிறு வித்தியாசத்தைக் கூட நீங்க உணரலாம். அது உங்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் வித்தியாசமாக இருந்தால்?
திருமண ஆடையைப் பொறுத்தவரை, திருமணத்திற்கு முன்னரே அதனை ஒரு முறையேனும் அணிந்து பார்ப்பதன் மூலம் ஒரு நல்ல டெய்லரின் உதவியுடன் அதில் திருத்தங்களை மேற்கொண்டு உங்களை அந்த திருமண ஆடையில் செதுக்கி வைத்த சிலை போல கவர்ச்சியாக வெளிக்காட்டலாம்.
திருமணத்திற்கு பட்டு வேட்டி அணிவதாக இருந்தால் கூட அதனை அணிந்து பார்த்து அதில் உள்ள மடிப்புக்களை அயன் செய்து நேர்த்தியாக்கலாம்.
ஆண்களுக்கான உள்ளாடைகளைப் பொறுத்தவரையில் திருமணத்தன்று அணிவதற்காக வாங்கிய ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகளை, திருமணத்திற்கு முன்னரே நன்றாக குளித்து உடலை சுத்தம் செய்து துவட்டிய பின்னர் அணிந்து பார்ப்பதன் மூலம் அதில் உள்ள குறைகளைக் கண்டு, தேவை ஏற்பட்டால் வேறு உள்ளடைகளைக் கூட வாங்கலாம்.
என்ன தான் வாங்கிய புதிய ஜட்டி பழக்கப்பட்ட ஜட்டி Brand ஆக இருந்தாலும், நீங்கள் தினமும் அணியும் ஜட்டியைப் போன்றதாக இருந்தாலும் அதில் கூட சில பிரச்சனைகள் எழலாம்.
ஆகவே ஆண்கள் திருமணத்தன்று புது ஜட்டியை அணிவதை விட ஒரு முறையேனும் அணிந்த, பழக்கப்பட்ட ஜட்டி, பனியனை அணிவது உகந்தது.
திருமணத்திற்கான மாப்பிள்ளை அலங்காரம் தொடர்பாக மேலும் அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
முதலிரவில் Light Off செய்ததும் என்ன செய்ய வேண்டும்(18+) - அடிப்படை பாலியல் கல்வி
Keywords: வேட்டி கட்டத் தெரியாத மாப்பிள்ளைக்கு வேட்டி கட்டி விடும் மாமனார். முதலிரவுக்கு தயாராகும் ஆண்களுக்கு டிப்ஸ்
Comments
Post a Comment