"மனம் சூடான இடம் தேடி அலைகின்றது" குளிர்காலத்தில் மனசு மட்டுமல்ல, உங்கள் குஞ்சும் சூடாக இருக்கத்தான் விரும்பும். ஆனால் நீங்கள் அணியும் ஜட்டி ஈரமா இருந்தால் குளிரின் தாக்கம் மழைக்காலங்களில் அதிகமாக இருக்கும்.
உங்களுக்குத் தெரியுமா? குளிர்காலங்களில் பல போர்வைகளைக் கொண்டு உங்கள் உடலைப் போர்த்துவதை விட, ஜட்டி அணிவதன் மூலம், அதுவும் சற்று இறுக்கமான ஜட்டி அணிவதன் மூலம் குளிரின் தாக்கத்தை வெகுவாகக் குறைக்க முடியும். இதன் காரணமாகவே மார்கழி மாதம், பனிக்காலங்களில் வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும் என்பார்கள்.
ஜட்டி அணிந்து பொது இடங்களில் குளிக்கும் ஆண்கள், குளித்த பின்னர், அணிந்திருக்கும் ஈரமான ஜட்டிக்கு மேலேயே ஆடையை அணிந்து வீடு திரும்புவதுண்டு. இது தவறாகும். நீண்ட நேரம் ஈரமான ஜட்டியை அணிந்திருப்பது நல்லதல்ல.
நீங்கள் அணியும் ஜட்டி ஈரமாக இருந்தால்(அல்லது ஈரமானால்), அதை அணிந்த சிறிது நேரத்திலேயே உங்களைச் சுற்றி துர்வாடை உருவாகும். "மழையில் நனைந்த ஆடையின் மணம்" உங்கள் வியர்வையுடன் சேர்ந்து உடல் முழுதும் வீசும்.
ஈரமான ஜட்டி உங்கள் உடலுடன் ஒட்டிக் கொண்டு அரிப்பை ஏற்படுத்தும் அல்லது எரிச்சலை அதிகரிக்கும், அறுக்கும்/வெட்டும். ஈரமான ஜட்டி அணிந்து நடக்க அசெளகரியமாக இருக்கும்.
ஈரமான ஜட்டி அணிந்தால், அல்லது உங்கள் ஜட்டி Size யை விட பெரிய அல்லது சிறிய ஜட்டி அணிந்தால் ஆண்கள் முகங்கொடுக்கும் பிரச்சனைகள்:
சில ஆண்கள் பாதி ஈரமான ஜட்டியை அயன் செய்து அணிவர். அவ்வாறு ஈரமான ஜட்டியை அயன் செய்வதன் மூலம் ஜட்டியின் துணி சீக்கிரம் பழுதடையும்.
ஈரமான ஜட்டி அணிந்தால் மட்டுமல்ல, பருத்துத் துணியில் செய்த ஜட்டி அணிந்து Gym இல் உடற்பயிற்சி செய்ததால் "வியர்வையில் ஜட்டி ஊறியிருந்தாலும்" இந்த மாதிரி பிரச்சனைகளை ஆண்கள் சந்திக்க வேண்டி ஏற்படும். Gym யை விட்டு வெளியேறும் முன்னரே அணிந்திருக்கும் ஜட்டியை Locker Room/Toilet இல் வைத்து மாற்ற வேண்டும்.
குறிப்பு: ஆண்கள் உடற்பயிற்சிகளில் ஈடுபடும் போதும், விளையாட்டுக்களில் ஈடுபடும் போதும் பருத்தித் துணியினால் ஆன ஜட்டியை அணிவதை விட Athletic Performance Fabric இனால் ஆன Underwear அணிவதன் மூலம் வியர்வையில் உங்கள் ஜட்டி ஊறி ஏற்படும் அசெளகரியத்தைக் கட்டுப்படுத்தலாம். Athletic Performance Fabric வியர்வையை உறிந்து வைத்திருக்காது. சீக்கிரம் ஜட்டி உலர்ந்துவிடும்.
ஈரமான ஜட்டி அணிந்ததன் மூலம், அல்லது வியர்வையில் ஊறிய ஜட்டியை நீண்ட நேரம் அணிந்திருப்பதன் மூலம் அந்தரங்கப் பகுதியில் கிருமித் தொற்றுக்கள் ஏற்பட அதிக வாய்பு உள்ளது.
என்னதான் பருத்தித் துணியில் செய்த ஜட்டிகள் ஆண்களுக்கு உகந்ததாக இருந்தாலும், பருத்தியுடன் வேறு துணிகள்(Cotton Blend Fabric) கலந்து செய்த ஜட்டிகளில் இவ்வாறான பிரச்சனைகள் குறைவாக இருக்கும். ஜட்டி சீக்கிரம் காய்ந்து விடும். ஆனால் இந்த மாதிரி ஜட்டிகளை நாள் முழுதும், நீண்ட நேரம் அணிந்திருக்க முடியாது.
Keywords: Jock Itch, Itching
Comments
Post a Comment