ஆண்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் தொடர்பில் பல விடையங்களை முந்தையை பதிவில் விளக்கமாகப் பார்த்தோம்.
கருப்பு அல்லது வேறு நிறங்களில் அரைஞாண் கயிறு கட்டுவதைக் காட்டிலும் சில குடும்பங்களில் ஆண்களுக்கு அருணாக்கொடியை வெள்ளியில் அல்லது தங்கத்தில் செய்து அணிவதும் உண்டு.
ஆனால் வெள்ளியில்(அல்லது தங்கத்தில்) அரைஞாண் கொடி செய்து இடுப்பில் கட்டியிருக்கும் ஆண்கள், வளரும் போது அடிக்கடி கழட்டி அதன் அளவை மாற்றயமைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அரைஞாண் கயிற்றை தங்கத்தில் செய்தால் கூட அதனை அழித்து கழுத்துக்குச் சங்கிலியாகப் போட்டுக் கொண்டு, இடுப்பில் கருப்புக் கயிற்றை அரைஞாண் கயிறாகக் கட்டிவிடலாம்.
ஆனால் வெள்ளியில் அரைஞாண் கொடி செய்தால் அதனை சங்கிலியாக மாற்ற பொதுவாக விரும்பமாட்டார்கள்.
வெள்ளியில் அரைஞாண் கொடி அணிய விரும்பும் ஆண்கள், ஆரம்பத்திலேயே அரைஞாண் கொடியை நீளமாக செய்ய வேண்டும்.
அதனை கருப்பு அரைஞாண் கயிறுடன் சேர்த்து கட்டுவதன் மூலம் வளர வளர அதன் நீளத்தைத் தேவைக்கேற்ப கூட்டிக் குறைக்கலாம்.
கிராமப்புறங்களில் ஆண் குழந்தைகளுக்கு தகப்பனின், அல்லது தாய் மாமனின் இடுப்பு அளவுக்கு வெள்ளியில் அரைஞாண் கயிறு செய்து அணிவிப்பர்.
ஆகவே வெள்ளியில் அரைஞாண் கயிறு செய்யும் போது கருப்பு அரைஞாண் கயிற்றை அதில் கட்டக் கூடிய வகையில் வளையங்கள் வைத்து செய்யவும்.
Keywords: அரணாக்கொடி, அரைஞாண் கயிறு
Comments
Post a Comment