சிறு வயது முதலே ஆண்களுக்கு அரைஞாண் கயிறு/அருணாக்கொடி இடுப்பில் கட்டுவர். இதற்கு பல காரணங்கள் சமூகத்தில் கூறப்படுகிறது.
உதாரணமாக, ஆண்கள் கோவணம் கட்ட அரைஞாண் கயிறு உதவும்: ஏதோ ஒரு சந்தர்பத்தில் முழு நிர்வாணமாக்கப்பட்டாலும் இருக்கிற துணியை அருணாக்கொடியின் உதவியுடன் கோவணமாகக் கட்டி கால்களுக்கு நடுவே தொங்கிக் கொண்டிருக்கும் ஆண்களின் மானத்தை மறைக்க முடியும்.
வேட்டி, லுங்கி போன்ற ஆடைகள் அணியும் போது அவற்றின் கட்டை இறுக்காக வைத்திருக்க அரைஞாண் கயிறு உதவும்.
கருப்பு நிறம் கண் திருஷ்டி, காத்துக் கருப்பை அண்ட விடாது என்னும் நம்பிக்கை கிராமப் புறங்களில் இன்றும் உள்ளது. அதன் காரணமாகவே அநேகமான ஆண்கள் கருப்பு நிற அரைஞாண் கயிற்றை இடுப்பில் கட்டுகின்றனர்.
காடு, மலைகளில் திரியும் ஆண்களுக்கு விஷ ஜந்துக்கள் தீண்டினால் முதலுதவி சிகிச்சைக்காக அரைஞாண் கயிற்றை அறுத்துப் பாவிக்க முடியும்.
சிறுவர்களாக இருக்கும் போது ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் இன்னொருவர் அரைஞாண் கயிற்றைப் பிடித்திருக்க, நீச்சல் பயிற்சிகளில் ஈடுபட முடியும்.
வயதுக்கு வந்த ஆண்களின் உடல் கவர்ச்சியை அதிகரிக்கவும் அரைஞாண் கயிறு பயன்படும்: நம்பிக்கை இல்லை என்றால், இடுப்பில் கருப்பு நிற அரைஞாண் கயிறு கட்டிக் கொண்டு பாத்ரூம் கண்ணாடியில் முழு நிர்வாணமாக உங்களை நீங்களே பாருங்களேன்.
ஆண்களுக்கு குடலிறக்கம் ஏற்படுவதைக் குறைக்க அரைஞாண் கயிறு உதவுவதாக சொல்லப்பட்டாலும் அதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பது தொடர்பாக யாரும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவில்லை.
ஆனால் வயதுக்கு வந்த ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவதன் மூலம், அதிலும் குறிப்பாக "அரைஞாண் கயிறு"(வெள்ளியில் செய்தது அல்லாத, கருப்பு நிற கயிறு) கட்டுவதன் மூலம் அவர்களின் உடல் எடை தொடர்பாக விழிப்புடன் இருக்க முடியும்.
உங்கள் உடல் எடை அதிகரிப்பதை அரைஞாண் கயிறு இறுகுவதன் மூலம் அறிந்து கொள்ளலாம். உங்கள் உடல் எடை குறைவதை, அரைஞாண் கயிறு தளர்வடைவதை வைத்து அறிய முடியும்.
அரைஞாண் கயிற்றை உங்கள் உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கப் பயன்படுத்த விரும்பினால், உங்கள் இடுப்பில் ஓரளவுக்கு இறுக்கமாக அரைஞாண் கயிறு கட்ட வேண்டும்.
வெள்ளி அருணாக்கொடி கட்டியிருக்கும் ஆண்கள் கூட இந்தத் தேவைக்காக கருப்பு அரைஞாண் கயிற்றை இடுப்பில் கட்டுவதுண்டு. ஒரு ஆண் எத்தனை அருணாக்கொடியும் கட்டலாம்.
கணுக்கால், மணிக்கட்டு, பைசெப்ஸில்(bicceps) கட்டும் நிறக் கயிறு/கருப்பு கயிறை திருஷ்டி கயிறு என்பர். இடுப்பில் கட்டும் கயிறை அரைஞாண் கயிறு என்பர்.
Recommended: ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவது தொடர்பாக மேலும் அறிய இங்கே அழுத்தவும்.
Keywords: ஆம்பளைக்கு அருணாக்கயிறு
Comments
Post a Comment