Fly-Front ஜட்டிகள் ஆண்களின் ஜட்டியில் ஏற்பட்ட ஒரு பரிணாம வளர்ச்சி என்றால் அது மிகையாகாது. முன்னர் ஜட்டியின் வலது முன் பக்கம் மேலிரிந்து கீழாக நிலைக்குத்தாக(Vertical) இருந்த ரகசியப் பாதை, இப்போது வலமிருந்து இடமாக Waistband இக்கு கீழே கிடையாக(Horizontal) இருக்கும் வகையிலும் கிடைக்கிறது.
ஜட்டியில் உள்ள சுரங்கப்பாதையினுள் கை விரல்களை விட்டு ஆண்குறியை வெளியே எடுப்பதே ஒரு தனி சுகம். ஆனால், ஆத்திர அவசரத்திற்கு கையை உள்ளே விடும் போது அசெளகரியமாகவும் இருக்கும்.
ஜட்டியின் Waistband யை இறக்கி ஆண்குறியை தேவைக்கு வெளியே எடுக்க விரும்பாத ஆண்கள், ஜட்டியில் உள்ள இந்த Opening ஊடாக வெளியே எடுக்க முடியும்.
Formal Dress/Office Wear/Suit அணியும் ஆண்களுக்கு இந்த வகை ஜட்டிகள் வசதியாக இருக்கும். அதற்குக் காரணம் அவர்கள் இதனை அணிந்தால் அடிக்கடி Pant யைக் கழட்டி மாட்டத் தேவையில்லை.
அவ்வாறு கழட்டி மாட்டும் போது அணிந்திருக்கும் Dress Shirt யை நேர்த்தியாக Tuck In(சட்டையை பேண்டின் உள்ளே விடுவது) செய்வதற்கு அதிக நேரம் எடுக்கும். இந்த வகை ஜட்டி அணிந்திருக்கும் போது, ஆண்கள் அவர்களின் Pant ஜிப்பைத் திறந்தால் மாத்திரம் போதும். அவர்களின் ஆண்குறியை இலகுவாக வெளியே எடுக்கலாம்.
என்ன தான் ஆண்களுக்கு Fly-Front ஜட்டிகள் வசதியான ஜட்டியாக இருந்தாலும், இதிலும் சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. உதாரணமாக, அடிக்கடி ஜட்டியில் உள்ள துவாரத்தினூடாக(Fly) ஆண்குறியை எடுக்கும் போது அந்த Opening தோய்வடையும். நீங்கள் அணிவது Fly-Front வெள்ளை நிற ஜட்டியாக இருந்தால், Opening யைச் சூழ கறை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மழைக்காலங்களில் அல்லது குளிர்காலங்களில் உங்கள் ஆண்குறி நன்றாக சுருங்கி சிறுத்திருந்தால்(இயல்பான இயற்கையான ஒன்று), அதனை ஜட்டியின் துளையினுள் கையை விட்டு தேடுவதே கடினமாக இருக்கும். Fly-Front ஜட்டிகள் இறுக்கமாக இருக்காது. ஆகையால் நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு எல்லா Fly-Front ஜட்டிகளும் Bulge யை உருவாக்காது. அதே நேரம், உங்கள் ஆண்குறி, விதைகளுக்குத் தேவையான Support யைக் கொடுக்காது. எல்லா ஜட்டி கம்பனிகளும் Fly-Front ஜட்டிகளை உற்பத்தி செய்வதில்லை. ஆகவே உங்கள் Perfect Fitting ஜட்டிகான தேடலை குறைந்தளவு ஜட்டி Brand களை வைத்தே செய்ய வேண்டி ஏற்படும்.
Open/Fly வைத்த ஜட்டி(Fly-Front Briefs) அணியும் ஆண்கள் ஜட்டியின் Waistband இன் மேல் லுங்கி, வேட்டியின் கட்டு இருக்கும் வகையிலும் லுங்கி வேட்டி அணியலாம். விரும்பினால், ஜட்டியின் Waistband இனுள் லுங்கி/வேட்டி போன்றவற்றை சொருகி அணியவும் முடியும்.
அதற்குக் காரணம், ஆண்கள் வேட்டி, லுங்கி கட்டும் போது Open/Fly வைத்த ஜட்டி அணிவதன் மூலம், சிறுநீர் கழிக்க ஆண்குறியை ஜட்டியில் உள்ள Opening இனூடாக வெளியே எடுக்க முடியும்.
அநேகமான Fly Front Underwear களில் Pouch வசதி இருக்கும். அது என்ன Pouch Underwear?
ஆண்கள் ஜட்டி வாங்கும் போது எதையெல்லாம் அளக்கனும்? எதையெல்லாம் கவனத்தில் கொள்ளனும் என்று இங்கே அழுத்துவதன் மூலம் தெரிந்து கொள்ளவும்.
ஆண்களின் ஜட்டிகளின் வகைகள் தொடர்பாகவும் ஆண்களின் ஜட்டிகள் தொடர்பாகவும் மேலும் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
Comments
Post a Comment