Summer Time இக்கு ஏற்ற Casual லான ஆடைகள் பல இருந்தாலும் சில ஆண்களுக்கு எப்போதும் Trendy யாக, புதுசாக தமது தோற்றத்தை வெளிக்காட்டப் பிடிக்கும். அவ்வாறான எண்ணம் கொண்ட ஆண்களுக்காகவே மேலுடம்பை பட்டும் படாமல் வெளிக்காட்டக் கூடிய Mesh T-Shirts, and Crochet Shirts சந்தைக்கு வர ஆரம்பித்துள்ளன.
இவற்றை ஆண்களுக்கான See Through ஆடைகளாக கருதலாம். அதாவது உள்ளே இருப்பதை அரசல் புரசலாக வெளிக்காட்டக் கூடிய ஆடைகள்.
அதற்காக இவற்றை கண்ணாடி போன்ற துணியில்(Sheer Shirt) செய்யப்பட்ட சட்டைகளாக கருத வேண்டாம். ஆனால் இவையும் ஒரு வகையில் Sheer Shirt கள் தான்.
Mesh T-Shirts யை எடுத்துக் கொண்டால், இவை மீன் பிடிக்கும் வலையால் செய்த T-Shirts போன்று இருக்கும். இதனை Fitness இல் அதிகம் ஆர்வம் கொண்ட, தமது உடலை செதுக்கி கட்டுக் கோப்பாக வைத்திருக்கும் ஆண்கள் அணியலாம். அதன் மூலம் தமது Abs யை, Physique யை அரசல் புரசலாக வெளிக்காட்டி பார்ப்பவர் கவனத்தை ஈர்க்கலாம்.
பொது இடங்களுக்கு இதனை அணிந்து செல்லலாமா? கூடாதா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் இதனை Pubs, Party, Night Out, Gym போன்றவற்றிற்கு தாராளமாக அணியலாம். இதன் உள்ளே பனியன் அணிந்து Mesh T-Shirts அணிவதற்கு அப்படி ஒரு Mesh T-Shirts யை அணியாமலேயே இருக்கலாம்.
Crochet Shirts இவை கிட்டத்தட்ட Knitted Fabric போன்றது, அதாவது பிறந்த குழந்தைகளுக்கு தாய்மார்கள் பின்னிப் போடும் ஆடைகள் போன்றது.
ஆனால், அவற்றை விட அதிக துவாரங்கள் இருக்கும். துணியும் மெல்லியதாக இருக்கும். அந்த துவாரங்கள் வழியாகவும் நீங்கள் காட்ட விரும்புவதை அரசல் புரசலாக வெளிக்காட்டலாம். இதனை அணியும் போது Laced Shirt கள் போல, சட்டை தளர்வாக இருக்கும்.
இது Mesh T-Shirts அளவுக்கு அப்பட்டமாக வெறும் உடம்பை வெளியே காட்டாது, ஆனால் அரசல் புரசலாக காட்டும். பொதுவாக வெளியே செல்லும் போது அணியலாம். சில ஆண்கள் இதனை பனியன் அணிந்து அணிவர். ஆனால் நாம் அதனை பரிந்துரைக்க மாட்டோம்.
சில ஆண்கள் இதனை T-Shirts உடல் சேர்த்து அணிவர். அதாவது, Collar இல்லாத T-Shirts இனை அணிந்து, அதன் மேல் Crochet Shirts யை Button போடாமல் அணிவர்.
Average Body அல்லது உடற்பயிற்சி செய்து தமது உடலை கட்டுடலாக வைத்திருக்கும் ஆண்களுக்கு இந்த சட்டைகள் எடுப்பாக இருக்கும். அதே போல Hairy Men களுக்கு, அதாவது உடல் முழுதும் உரோமம் உள்ள ஆண்களுக்கு இது மேலும் சிறப்பாக இருக்கும்.
Read More: ஆண்கள் சட்டைகள் தொடர்பில் மேலும் பல விடையங்களைத் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
சட்டை மாத்திரம் அல்ல, உள்ளே இருப்பதை அரசல் புரசலாக வெளித்தெரியச் செய்யக் கூடிய Sheer Shorts களும் சந்தையில் விற்பனைக்கு உள்ளன. சிலவை Mesh வலையினால் செய்யப்பட்டிருக்கும். சில See Through Shorts மிகவும் மெல்லிய, கண்ணாடி போன்ற துணிகளில் செய்யப்பட்டிருக்கும். அவற்றை அணிந்து பொது இடங்களில் குளிப்பது கிட்டத்தட்ட நிர்வாணமாகக் குளிப்பதற்குச் சமம்.
Keywords: ஆண்களுக்கான Sheer Shirt, Fishnet Mens Shirts, Fishnet T-Shirt, Perforated Shirts for Men, ஆண்களுக்கான ஓட்டை போட்ட சட்டைகள், டி ஷர்ட், டீசேர்ட்
Comments
Post a Comment