வயது வந்த ஆண்கள் தமக்கான Hair Style யை உருவாக்கும் போது சில விடையங்கள் தொடர்பில் கவனிக்க வேண்டும். அவை தொடர்பில் இந்தப் பதிவில் பார்ப்போம்.
நீங்கள் எப்படி தலை சீவுகிறீர்கள்? சீப்பை வைத்து அல்லது கை விரல்களை வைத்து ஆண்கள் தமது தலை முடியை சீவுவது உண்டு. ஆனால் Hair Stylists அல்லது Hairdresser நமது தலை முடிக்கு அடிக்கடி சீப்பு(Comb) பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள். சீப்பு வைத்து தலை முடியை சீவாவிட்டால், தலை முடி ஒரே போக்கில் வளராது. பின்னர், Gel/Wax/Cream பயன்படுத்தி தான் தலை முடியை நேர்த்தியாக சீவ வேண்டி ஏற்படும்.
தலைக்கு குளித்த பின்னர், தலை முடியை துண்டினால் துவட்டிய பிறகு, சற்று ஈரமாக இருக்கும் போதே தலை முடியை சீவினால், தலை முடியை சீவும் போக்கிற்கே தலை முடி வளைய ஆரம்பிக்கும். அது கிட்டத்தட்ட தற்காலிகமாக தலை முடிக்கு Hair Straightener பயன்படுத்தியது போல இருக்கும்.
உங்கள் முகத்திற்காக Hair Style யை தெரிவு செய்த பின்னர், அதனை Blow Dryer/Hair Dryer பயன்படுத்தி உறுதி செய்ய வேண்டும். அது கிட்டத்தட்ட தலை முடியை அந்த Hair Style ற்கு பழக்கப்படுத்துவது போன்றதாகும். அதன் பிறகே Hair Spray பயன்படுத்த வேண்டும்.
Blow Dryer/Hair Dryer பயன்படுத்தாது Wax/Gel/Cream போன்றவற்றை பயன்படுத்தி மாத்திரம் நீங்கள் விரும்பும் Hair Style யை உங்கள் தலைமுடியில் உருவாக்க முடியாது.
Hair Straightener, Dryer/Hair Dryer போன்றவற்றை அடிக்கடி பாவிப்பது தலை முடிக்கு நல்லதல்ல. அதே நேரம் நீங்கள் உங்கள் தலை முடிக்கு Wax/Gel/Cream/Hair Spray பாவித்தால் இரவு தூங்கும் முன்னர் தலைமுடியை Shampoo போட்டு கழுவ மறக்க வேண்டாம்.
சருமப் பிரச்சனைகளால் அல்லது ஒவ்வாமைகளால் Sulfates போன்ற இரசாயணங்கள் அடங்கிய Soap, Shampoo, Face Wash போன்றவற்றை பயன்படுத்த விரும்பாதவர்களுக்கு, இயற்கையான பொருட்களால் உருவான Soap, Shampoo, Face Wash போன்றவையும் சந்தையில் கிடைக்கிறது.
தலை முடிக்கு Hair Dye பாவிக்கும் போது, அதில் குறிப்பிட்டுள்ளது போன்று அலர்ஜி(Allergy) Test செய்ய மறக்க வேண்டாம். சிறு வயதில் இள நரை ஏற்பட்ட ஆண்கள் குறைந்தது 20 - 23 வயதில் இருந்தாவது ஹேர் கலரிங் பண்ண ஆரம்பிக்க வேண்டும்.
இள நரை, ஆண்களின் தன்னம்பிக்கையை பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதே நேரம் ஆயூர்வேத மருத்துவத்தால் கூட இள நரையை ஓரளவுக்குத் தான் கட்டுப்படுத்த முடியும். இள நரைக்கும் ஹேர் கலரிங் செய்வது மாத்திரமே தீர்வு.
Tips: ஆண்களின் உடலில் உள்ள முடிகளை மழிப்பதன் மூலம், Waxing செய்வதன் மூலம் நீக்கிக் கூட நரை ஏற்பட்ட Body Hair, Facial Hair, Pubes கள் வெளித்தெரிவதை தவிர்க்கலாம்.
ஆண்கள் எப்போதும் தமது இயற்கையான Hair Color யை Hair Dye யைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் ஏதும் இல்லை. வித்தியாசமான நிறங்களை நிச்சயம் முயற்சி செய்யலாம். தப்பில்லை.
உங்கள் வீட்டில் உள்ள ஆண்களுக்கு(தந்தை/தாத்தை/மாமா..ஏனைய ஆண்களுக்கு) தலை முடி கொட்டும் பிரச்சனை இருந்தால், மொட்டை/சொட்டை விழுந்திருந்தால் உங்களுக்கும் அதே பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நீங்கள் தலை கீழாக நின்றாலும் அதனை தடுக்க முடியாது.
சில ஆண்களுக்கு தலை முடி இருப்பதை விட, தலை முடி இல்லாமல் மொட்டையாக இருப்பது தான் அழகாக இருக்கும்.
உங்களுக்கு தலை முடியை இடது அல்லது வலது புறம் Side பிரித்து இழுக்கும் பழக்கம் இருந்தால், தலை முடி கொட்டும் பிரச்சனை ஏற்படும் போது(Bald Patterns ஏற்படும் போது, அதை மறைக்கும் வகையில்) மற்ற பக்கமாக Side பிரித்து இழுக்கலாம், அல்லது முன்பக்கம் இருந்து பின்பக்கம் நோக்கி "மேவி" இழுக்கலாம்.
தலை முடி கொட்டும் பிரச்சனை அதிகமாக இருந்தால், தலை முடியை நன்றாக Short செய்து வெட்டவும்.
நீங்கள் பயன்படுத்தும் Shampoo, சில ஒவ்வாமையின் காரணமாகவும் தலைமுடி தற்காலிகமாக கொட்டலாம்.
வித்தியாசமான சிகை அலங்காரத்தைப் பெற்றுக் கொள்ள ஆபிரிக்க ஆண்கள் மற்றும் சில Rapper கள் கயிறு போன்ற Hair Extension(சவுரி முடி) முடியை அணிவார்கள். அதனை Dreadlocks என்பர்.
தலையில் வழுக்கை(Baldness) ஏற்படும் போது அதன் வகையைப் பொறுத்து அதற்கான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளலாம். உங்களுக்கு ஏற்பட்டிருப்பது Pattern Baldness என்றால், அதனை நீங்கள் Hair Transplant செய்து சரி செய்யலாம். Hair Transplant இன் போது உடலின் வேறு பாகத்தில் இருந்து மயிர்கால்களை(Hair Follicles) எடுத்து தலையில் வழுக்கை ஏற்பட்ட பக்கத்தில் மாத்திரம் நடுவர். முழுமையாக முடி கொட்டிய ஆண்களுக்கு இந்த வழி உகந்தது அல்ல. இருப்பினும் கடைசி முயற்சியாக தலையில் தலை முடி வளர்ச்சியை தூண்ட Microneedling Therapy யை எடுத்துக் கொள்ளலாம்.
Pattern Baldness யை சரி செய்ய, அவ்விடங்களில் 5% Minoxidil Hair growth Spray யைப் பயன்படுத்தி மயிர் வளர்ச்சியை தூண்ட முயற்சிக்கலாம்.
சீக்கியர் இனத்தைச் சேர்ந்த(Skihs) ஆண்கள் மத நம்பிக்கையின் காரணமாக தலை முடி வெட்ட மாட்டார்கள். நீண்ட கூந்தல் அவர்களுக்கும் கடவுளுக்கும் இடையிலான நெருக்கத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. தலைமுடியை மறைக்கும் வகையில் சீக்கிய ஆண்கள் அணியும் Turban எனப்படும் தலைப்பாகை, அவர்களின் சமூகத்தினரிடையே மன்னர்களின் கிரீடமாக பார்க்கப்படுகிறது.
Recommended: ஆண்கள் தமது சிகை அலங்காரத்தை முகத்தின் வடிவத்தை வைத்தே தீர்மானிக்க வேண்டும். ஆண்களின் முகத்தின் வடிவத்தை எப்படி கண்டறிவது?
Comments
Post a Comment