பொதுவாக முஸ்லிம், மற்றும் யூத மதத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு அவர்களது சிறு வயதிலேயே சுன்னத்/கத்னா என்னும் சடங்கு செய்து ஆண்குறியின் முன் தோலை நீக்குவர். இதன் காரணமாகவே வேறு மதங்களைச் சேர்ந்த முஸ்லிம்களின், ஆண் நண்பர்கள் அவர்களை செல்லமாக "மொட்டை சுன்னி" என்று ஆழைப்பர்.
ஆனால் உண்மையில் முஸ்லிம் ஆண்களுக்கு மாத்திரம் தான் அங்க முன் தோல் இருக்காதா? இல்லை. இது காலங்காலமாக வந்த வதந்தி மாத்திரமே.
நமது சமூகத்தில் முஸ்லிம் ஆண்கள் மாத்திரம் சுன்னத் செய்து கொண்ட காலம் மலையேறிவிட்டது. தற்காலத்தில் சில மருத்துவப் பிரச்சனைகளுக்காகவும் ஆண்களை சுன்னத் செய்து கொள்ள வைத்தியர்கள் பரிந்துரைக்கப்படுகின்றனர்.
மதுரை வட்டாரத்திலுள்ள 'பிறமலைக்கள்ளர்' சமூகத்தில் விருத்த சேதனம் 'கவரடைப்பு' அல்லது 'கவரடப்பு' என்ற பெயரில் கடைபிடிக்கப்படுகிறது. தற்காலத்தில் இது 'மார்க்கல்யாணம்' என வழங்கப்பெறுகிறது. ஆக தமிழர்களிலும் சில சாதியைச் சேர்ந்த ஆண்களுக்கு சிறுவயதில் ஆண்குறியின் முன் தோல் அகற்றப்படுகிறது.
அதே போல சில ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியின் முன்தோல் சிறிதாக இருக்கும் காரணத்தினால் அல்லது ஆண்குறியின் மொட்டை மூடியிருக்க முன்தோலின் நீளம் போதாமையால், பூப்படையும் வயதில் அவர்களின் ஆண்குறியின் மொட்டு நிரந்தரமாகவே முன்தோலை விட்டு வெளியே வந்து விடும்.
சில ஆண்களுக்கு பிறக்கும் போதே அவர்களின் ஆண்குறியில் முன் தோல் இருக்காது. இதனை Aposthia (Natural Circumcision) என அழைப்பர்.
அதே போல Phimosis, மற்றும் Balanitis பிரச்சனை உள்ள ஆண்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி சுன்னத் செய்து கொள்வதும் உண்டு. ஆகவே முஸ்லிம் ஆண்களுக்கு மாத்திரம் தான் மொட்டை சுன்னி இருக்கும் என்ற சிந்தனையை இன்றுடன் மாற்றிக் கொள்ளுங்கள்.
சில சமூகத்தினரிடம்/இனத்தவரிடம் ஆண்குறியின் முன்தோலை அகற்றாத/சுன்னத் செய்யாத ஆண்களை சிறுவர்களாகவே கருதும் பழக்கம் உள்ளது. ஒரு ஆண் சுன்னத் செய்து கொள்ளும் போது தான் முழுமையான இளைஞன் ஆகிறான் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
ஒரு ஆணுக்கு எந்த வயதிலும் சுன்னத் செய்யலாம். சில இனத்தவர்கள், ஆண்களுக்கு 15-16 வயதில் தான் சுன்னத் செய்வர். ஆனால் சிறுவயதில் ஆண்குறியின் முன் தோலை வெட்டி நீக்குவது மிகவும் இலகுவாக இருக்கும்.
Recommended: ஆண்கள் சுன்னத் செய்வது தொடர்பாக மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
Comments
Post a Comment