பூப்படைந்த பின்னர் ஆண்களின் அன்றாட கடைமைகளில் சேர்ந்து விடும் ஒரு விடையம் தான் Facial Hair பராமரிப்பு. ஆண்களால் தாடி மீசையை கத்தரிக்கோலால் மாத்திரம் வெட்டி வளர்க்கலாம். விரும்பினால் தேவைக்கு ஏற்ப மழிக்கலாம் அல்லது Trim செய்யலாம். ஆனால் தாடி, மீசையை ஒழுங்காக Shave or Trim செய்யாது கண்டமேனிக்கு வளர்த்தால் உங்கள் தோற்றம் கூட மாறலாம்.
ஆண்கள் தாடி, மீசை, அந்தரங்க முடிகளை மழிக்கும்(Full Shave) போது Shaving Cream, Shaving Gel, Shaving Foam போன்றவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்துவதன் மூலம் இலகுவாக மழிக்கக் கூடியதாக இருக்கும். அவை உராய்வு நீக்கியாக தொழிற்பட்டு, Shaving Blade யை நமது சருமத்தின் மீது இலகுவாக நகர்த்தக் கூடிய நிலைமையை தோற்றுவிக்கும்.
முகத்தையும் தாடி, மீசையையும் நன்கு கழுவி ஈரமாக்கி, பின்னர் Shaving Cream, Shaving Gel, Shaving Foam போன்றவற்றில் ஒன்றை தாடி/மீசை அல்லது மழிக்க வேண்டிய அந்தரங்க முடி மீது பூசி, சிறிதி நேரம் செல்ல மழிப்பதன் மூலம் வெட்டுக் காயங்கள் இன்றி இலகுவாக முடிகளை மழிக்கக் கூடியதாக இருக்கும்.
ஆண்கள் தாடி, மீசையை மழித்து முடிய, முகத்தை நன்கு கழுவி துடைத்து விட்டு, After Shave or Vaseline, Aloe Vera Gel பயன்படுத்தவதன் மூலம் Shave செய்யப்பட்ட இடங்கள் வரண்டு போவதையும், அப்பிரதேசங்களில் ஏற்பட்ட காயங்களில் தொற்றுக்கள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.
அவதானம்: முகப்பருக்கள் அதிகமான ஆண்கள் தாடி, மீசையை Shave செய்வதை விட Trim செய்வது நல்லது. அவசியம் மழித்தே ஆக வேண்டும் என்றால், உங்கள் Sensitive சருமத்திற்கு ஏற்ற Alcohol இல்லாத அல்லது அதிகம் இரசாயணங்கள் இல்லாத Shaving Cream, Shaving Gel, Shaving Foam யைப் பயன்படுத்துவது உகந்தது.
Shaving Cream, மற்றும், Shaving Foam பாவிப்பது கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான். ஆனால் Shaving Cream யை பூசி, அது Leather போன்று ஆகும் வரை பூசிய இடத்தை Brush இனால் தேய்க்க வேண்டும். Shaving Foam யை, தாடி/மீசையை ஈரமாக்கிய பின்னர் அதன் மேல் பூசினால் மாத்திரம் போதும்.
பழைமையை விரும்பும் நபர்கள், நேரம் போவது பரவாயில்லை என்று நினைத்தால் Shaving Cream யைத் தெரிவு செய்து பயன்படுத்தலாம். இந்த இயந்திர வாழ்வில் எல்லாவற்றையும் சீக்கிரம் நேரத்திற்கு செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள் Shaving Foam யைத் தெரிவு செய்து பயன்படுத்தலாம்.
Shaving Gel மிகவும் சிறந்த உராய்வு நீக்கியாகும். அதனை தாடி, மீசையின் மீது அல்லது அந்தரங்க முடி மீது தேய்க்க, மற்றும் மழிக்க நீர் அவசியம் இல்லை. Sensitive Skin உடைய ஆண்கள் விலையுயர்ந்த Shaving Gel களைத் தெரிவு செய்து பயன்படுத்தலாம்.
Shaving Cream, Shaving Gel, Shaving Foam போன்றவற்றைப் பயன்படுத்தும் போது அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.
உங்கள் முகத்தில் வளரும் தாடி, மீசையின் அளவுக்கு ஏற்ப Shaving Cream, Shaving Gel, Shaving Foam போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டி வரும். ஆகவே அவற்றை தெரிவு செய்யும் போது உங்கள் தேவையை அறிந்து அதன் அளவை முடிவு செய்யவும்.
சிலர் சவர்க்காரம், Face Wash கூட பயன்படுத்தி தாடி, மீசையை மழிப்பர். தினமும் அவ்வாறு செய்வது உகந்தது அல்ல. ஆனால் எப்போதாவது இருந்துட்டு, அவசரத்திற்கு அவற்றைப் பாவிப்பதில் தவறில்லை. ஏன் என்றால் Shaving Cream, Shaving Gel, Shaving Foam போன்றவை நமது சருமத்தில் Shaving Blades தடையின்றி இயங்கவே உருவாக்கப்பட்டவை. Shaving Cream, Shaving Gel, Shaving Foam போன்றவற்றின் செய்ற்திறனை உங்களால் Soap, Face Wash இல் எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவற்றையும் பயன்படுத்தலாம்.
Suggestion: சரும அலர்ஜிகள், சரும பிரச்சனைகள் உள்ள ஆண்களுக்கு பிரத்தியேகமாக Shaving Foam கள் சந்தைக்கு வரத் தொடங்கி உள்ளன. அவற்றில் Chamomile Extract பயன்படுத்தப்படுகிறது.
Keywords: Different types of shaving creams include aerosol shaving cream (also known as shaving foam), latherless shaving cream (also called brushless shaving cream and non-aerosol shaving cream), and lather shaving cream or lathering shaving cream
Comments
Post a Comment