பொதுவாக ஆண்கள் புது ஆடைகள் வாங்கும் போது சேர்த்து புது ஜட்டி, பனியன் வாங்குவது வழக்கமான ஒன்று. ஆனால் அதற்காக புது ஆடைகள் அணியும் போது, ஆண்கள் உள்ளே புது ஜட்டி, பனியன் அணிய வேண்டும் என்றில்லை.
வயது வந்த ஆண்கள் புது டிரஸ் வாங்கும் போது புது ஜட்டி, பனியன்கள் வாங்குவதற்குக் காரணம் அவற்றை தனியாக கடைக்குச் சென்று வாங்குவதற்கு அவர்களுக்கு இருக்கும் ஒரு வித தயக்கம், கூச்சம் தான்.
மற்ற படி புது டிரஸ் அணியும் போது புது உள்ளாடைகள் அணிய வேண்டும் என்பதற்காக அவர்கள் அவ்வாறு வாங்குவதில்லை.
ஆண்கள் புது ஆடைகள் அணியும் போது அன்றாடம் அணியும், பழுதடையாக ஜட்டி, பனியன்களை தாராளமாக அணியலாம். சில சாஸ்திர சம்பிரதாயங்களுக்காக புத்தாடை மாத்திரமே அணிந்திருக்க வேண்டும் என்று சொன்னால் மாத்திரமே அவர்கள் புது ஆடைகள் அணியும் போது உள்ளே புது ஜட்டி, பனியன் அணிவார்கள்.
குறிப்பு: ஆண்கள் குறைந்தது 3 மாதத்திற்கு ஒரு முறையாவது அவர்கள் அணியும் ஜட்டியை மாற்ற வேண்டும்.
அதாவது பழைய ஜட்டியை எறிந்து விட்டு அல்லது வீட்டில் இருக்கும் போது அணிய, அல்லது குளிக்கும் போது அணிந்து குளிக்க வைத்து விட்டு, புது ஜட்டிகளை பாவனைக்கு எடுக்க வேண்டும்.
ஆண்கள் அணிந்து குளிக்கும் ஜட்டி சீக்கிரம் வெளிறிப் போய் பழுதடையும். அதற்குக் காரணம், ஆண்கள் உடலுக்குப் பயன்படுத்தும் Soap, அணிந்திருக்கும் ஜட்டியிலும் படிவதனால் ஆகும்.
அதன் காரணமாகவே ஆண்கள் எப்போதும் குளிக்கும் போது பழைய ஜட்டிகளை அல்லது குளிப்பதற்கு என பிரத்தியேகமான ஜட்டிகளை அணிவது நல்லது.
Comments
Post a Comment