ஆண்கள் Formal Dress/Office Wear அணியும் போது அவசியம் Leather Shoes களையே அணிய வேண்டும். அதே போல விளையாட்டுக்களில் ஈடுபடும் போது, Gym இல் உடற்பயிற்சி செய்யும் போது Sports Shoes பயன்படுத்த வேண்டும். மற்ற நேரங்களில் ஆண்கள் Casual Shoes அல்லது செருப்பு, Sandals போன்றவற்றை பாதணிகளாக அணியலாம்.
அன்றாட தேவைகளுக்கு ஏற்றாற் போல ஆண்களுக்கென பிரத்தியேகமான Shoes சந்தையில் விற்பனையாகின்றன. அவற்றை ஆண்கள் அணியும் போது பின்பற்ற வேண்டிய விடையங்கள் தொடர்பாக இந்தப் பதிவில் பார்ப்போம்.
தினமும் ஆண்கள் Shoes அணியும் முன்னர், Shoes யை துணியால் துடைத்தால் போதும். தினமும் Shoe Polish பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.
ஆண்கள் பழைய சப்பாத்து(Shoes), செருப்பு(Slippers) போன்ற பாதணிகளை(Footwear) அணியும் முன்னர், அவற்றின் அடியில் உள்ள உராய்வைக் கட்டுப்படுத்துவதற்கான(Grip/Friction) வெட்டுக்கள் நல்ல நிலையில் உள்ளதா என்பதைப் பார்க்கவும். அவை தேய்ந்திருந்தால், ஈரமான தரைகளில், மாபிள் தரைகளில் வழுக்கி விழுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.
ஆண்கள்
குறைந்தது இரண்டு காலுறைகளை(Socks) அன்றாட பாவனைக்கும் பயன்படுத்த
வேண்டும். ஒரே சாக்ஸை துவைக்காமல் தொடர்ச்சியாக பல நாட்களுக்குப்
பாவித்தால் கால்களில் புண் ஏற்படும். கால் நகங்கள் கழறும். ஆனால் காலுறைகளை
துவைத்துப் பயன்படுத்தத் துவங்கியதும் அவை தாமாகவே சரியாகிவிடும்.
லெதர் சப்பாத்தாக(Leather Shoes) இருந்தால் அவற்றை துடைத்து விட்டு வாரம் ஒருமுறை வெயிலில் சிறிது நேரம் காய விட வேண்டும்.
துணியினால்
செய்யப்பட்ட சப்பாத்தாக(Canvas Shoes) இருந்தால், அல்லது இறப்பரினால்
செய்யப்பட்ட சப்பாத்தாக(Rubber Shoes) இருந்தால் அதாவது நீரில் அலசக்
கூடிய சப்பாத்தாக இருந்தால், அவற்றை அழுக்கு நீங்கும் வரை Shoe Polish Brush or பழைய Toothbrush
இனால் சவர்காரம், அல்லது சலவை தூள் போட்டு தேய்த்து, நீரில் கழுவி நன்றாக
வெயிலில் காய விட வேண்டும்.
வெள்ளை நிற சப்பாத்துக்களை(White Shoes) தூசு தட்டி, கழுவிய பின்னர், நன்றாக காய விட்ட பின்னர், Shoe Whitener பாவிக்கலாம். அது அந்த சப்பாத்துக்களின் வெள்ளை நிறத்தை நீண்ட காலம் பேணிப் பாதுகாக்க உதவும்.
Leather Shoes நீரில் நனைந்தால் அதனை துடைத்து, காய வைக்க மறக்க வேண்டாம். நீரில் நனைந்த சப்பாத்துக்கள் ஒழுங்காக காயாவிட்டால், சப்பாத்தில் துர்வாடை ஏற்படும். அவை சீக்கிரம் பழுதடைந்து விடும்.
Comments
Post a Comment