ஆண்கள் தோடு அணியும் கலாச்சாரம் நமது சமூகத்தில் காலங்காலமாக உள்ளது. ஆண்கள் இடது காதில் அணியும் தோடினை கடுக்கண் என அழைப்பர். கடுக்கண் தோடு ஆனது ஆண்களின் காதில் ஒரு புள்ளி வைத்தது போன்று அழகாக இருக்கும். அது பெண்களின் தோடு, கம்மல் போன்று தொங்காது.
ஆனால் ஆண்கள் தோடு அணிவதன் பின்னால் ஒரு சூட்சமமும் உள்ளதாம். ஆமாங்க, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தாம் தன்பாலீர்ப்பு(Gay, Bisexual Men) உடையவர்கள் என்பதை வெளிக்காட்ட ஆண்கள் தமது இடது காதில் வளையம் போன்ற தோடு அணிவார்களாம். அதற்குக் காரணம், எந்தவொரு பெண்ணும் தம்முடன் கலவியில் ஈடுபட நெருங்கி ஏமாறும் சந்தர்ப்பத்தைக் குறைப்பதற்காக ஆகும்.
பெண்கள் யாராவது அவர்களை நெருங்கிப் பழக, அல்லது படுக்க அழைத்தால், அவர்கள் கண்ணில் படும் வகையில் Gay, Bisexual Men தமது தோடினை அவர்களுக்குக் காண்பிப்பார்களாம். அதனைப் புரிந்து கொண்ட பெண்களும் அவர்களை நெருங்கிய நண்பராக மாத்திரம் ஏற்றுக் கொள்வார்களாம்.
இதனை Fashion, Trend என தவறாகப் புரிந்து கொண்ட நம்மில் பலர் கூட அவ்வாறான வளையங்களை காதில் காதணியாக அணிகிறோம். அதில் தவறில்லை.
ஆனால், இந்த தோடு விஷயம் தெரிந்தவர்கள் யாராவது உங்களைப் பார்த்தால், உங்களைப் பற்றி தவறாக நினைக்கக் கூடும். சில தர்மசங்கடமான நிலைக்கு உங்களை அவர்கள் தள்ளலாம்.
Read More: வயது வந்த ஆண்கள் தம்மை கவர்ச்சியாக வெளிக்காட்டுவதற்கு சில உதவிக் குறிப்புகள்
Comments
Post a Comment