என்ன தான் அழகான, கம்பீரமான, ஆண்மை நிறைந்த ஆணாக இருந்தாலும் உங்கள் ஆடைகளை நீங்கள் நேர்த்தியாக அணியாவிட்டால் மற்றவர்களுக்கு நீங்கள் கவர்ச்சியாகத் தெரிய மாட்டீர்கள்.
அதிலும் குறிப்பாக Formal Dress/Office Wear(Dress Shirt, Dress Pant) யை ஆண்கள் பொதுவாக Tuck In செய்தே அணிவார்கள். அவ்வாறு Tuck In செய்து Dress Shirt, Dress Pant யை அணியும் போது அவற்றில் சுருக்கங்கள் இருந்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்காது. அதே நேரம் உங்களைப் பார்ப்பவர்கள், உங்கள் Character யையே குறைத்து மதிப்பிட அது வழி வகை செய்யும்.
நீங்கள் வாங்கியிருக்கும் ஆடைகளின் உள்ளே குறிப்பிடப்பட்டுள்ள அயன் செய்யும் விதம் தொடர்பான குறிப்புகளை(Ironing Instructions) நன்கு வாசித்த பின்னர் அவற்றை அந்த முறைப்படியே அயன் செய்யவும்.
ஆனால் அநேகமான Iron Box இல் வெப்ப நிலை புள்ளிகளினாலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். Shirt/Pant இலும் அயன் பாக்ஸின் படம் போட்டு அதில் புள்ளிகள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
எப்போதும் குறைந்த வெப்ப நிலையில் ஆரம்பித்து, வெப்ப நிலையை படிப்படியாக அதிகரிக்கவும். ஆரம்பத்திலேயே அதிக வெப்ப நிலையில் வைத்து அயன் செய்ய ஆரம்பித்தால், ஆடை எரிந்து விட/பொசுங்கி விட அதிக வாய்ப்பு உள்ளது.
பிறகு சட்டையின் உள்பகுதி, Front Face, Shirt Placket(பொத்தான்கள் வைத்த பகுதி) போன்றவற்றை அயன் செய்யவும்.
அதன் மூலமே அணியும் வரை சட்டையை கசங்காது பாதுகாக்க முடியும்.
எவ்வளவு அயன் செய்தும் சில சுருக்கங்களை அகற்ற முடியாவிட்டால், சற்று நீர் தெளித்து(or Steam Ironing) அயன் செய்யலாம். அதன் மூலம் அந்த மடிப்புக்களை சரி செய்யலாம்.
கட்டாயம் Formal Dress அணியும் போது தான் ஆண்கள் சட்டை, பேண்டை அயன் செய்ய வேண்டும் என்று இல்லை. Causal Dress, Veshti, Lungi போன்றவற்றையும் அயன் செய்து அணியலாம்.
சில ஆண்கள் Flat Front Pant களில் Pleat வைத்து அயன் செய்வர். அது அவசியம் அற்றது. ஆனால் அவ்வாறு அயன் செய்வதன் மூலம் உங்கள் தோற்றத்தை மேலும் மெருகேற்றலாம்.
Pleat பிடித்து அயன் பண்ணும் போது பேண்டில் உருவாகும் கோடு போன்ற அமைப்பை Crease என அழைப்பர்.
Tips: பொதுவாகவே சட்டைகளை துவைத்து காயப்போட்ட பின்னர், சற்று ஈரமாக இருக்கும் போதே(80% காய்ந்த பின்னர்) அயன் செய்வது நல்லது. அது கிட்டத்தட்ட Steam Ironing போன்று தொழிப்படும்.
அயன் செய்வதற்கு என தனியாக மேசை வைத்திருக்கவும். கட்டிலில் அல்லது கீழே Bed Sheet விரித்து அயன் செய்வதாக இருந்தால் அவை சுத்தமாக இருப்பதை உறுதி செய்யவும்.
Iron Boards பயன்படுத்துவதன் மூலம் உங்கள் ஆடைகளை இலகுவாக அயன் செய்யக் கூடியதாக இருக்கும். ஆடைகளை அயன் செய்யும் போது, உங்கள் கவனம் முழுவது அதில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆடை எரிந்து விடும்.
Iron Box இல் உள்ள கறைகளை சுரண்டி அகற்றவும். Iron Box இல் ஒட்டிக் கொண்டு இருக்கும் சில கறைகள், Iron Box சூடானதும் மீண்டும் உருக வாய்ப்பு உள்ளது.
ஆண்கள் தமது ஜட்டி, பனியனை அயன் செய்யலாமா? செய்யலாம். ஆனால் அது அவசியமற்றது. சில ஜட்டி, பனியன்களை அயன் செய்யும் போது அவை சீக்கிரம் பழுதடையும்.
சில ஆண்கள் ஈரமான ஜட்டியை அயன் செய்து காய வைப்பர். அது அந்த ஜட்டியை சீக்கிரம் பழுதடையச் செய்யும்.
உங்களுக்கு Iron செய்ய தெரியாவிட்டால், அவை தொடர்பான வீடியோக்களை YouTube இல் பார்க்கவும்.
Comments
Post a Comment