அண்மையில் பிரித்தானியாவில்(UK) நடாத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் பங்கேற்ற ஆண்களில் 20% ஆன ஆண்கள் வாரம் முழுவதும் ஒரே ஜட்டியையே திரும்ப திரும்ப துவைக்காமல் அணிவதாக தெரிவித்துள்ளனர். அதிலும் 5% ஆன ஆண்கள், சில வேளைகளில் இந்தப் பழக்கத்தை ஒரு வாரத்திற்கு மேலும் தொடர்வதாகவும் கூறியுள்ளனர்.
பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள வாழ்க்கை செலவினத்தின் அதிகரிப்பின் காரணமாகவும், நேரமின்மை வேலைப்பலு காரணமாகவும் பிரித்தானியாவில் வாழும் ஆண்கள் இந்த நடைமுறையைப் பின்பற்றுவதாக கூறுகின்றனர்.
ஆண்கள் ஒரு முறை அணிந்த ஜட்டியை திரும்பவும் துவைக்காமல் அடுத்த நாள் அணிவது ஆரோக்கியமான பழக்கம் இல்லை. அதிலும் குறிப்பாக A/C அறைகளில் வேலை செய்யாத ஆண்கள் பாவித்த ஜட்டிகளை திரும்ப அடுத்த நாளும் அணிவதை முற்று முழுதாக தவிர்க்க வேண்டும்.
Tips: நீங்கள் அணிந்த ஜட்டியை முகர்ந்து(மணந்து) பார்க்கும் போது துர்வாடை வீசாவிட்டால், இன்னொரு முறை அணியலாம்.
ஒரு ஆண் காலையில் குளித்து, உடலை நன்கு உலர்த்திய பின்னர் அணியும், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் தோய்த்து உலர்ந்த ஜட்டியை, இரவு தூங்கச் செல்லும் முன்னர் தான் கழட்ட வேண்டும்.
அவ்வாறு இரவில் ஆண்கள் தூங்கச் செல்வதற்கு முன்னர் கழட்டும் ஜட்டியை, அந்த தருணமே துவைத்து காயப் போடுவதன் மூலம் அதனை இன்னொரு நாள் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் அணியக் கூடியதாக இருக்கும்.
துவைத்த ஜட்டிகளையும், ஆடைகளையும் காய விட்டிருக்கும் ஆண்கள்
ஆண்கள் துவைக்காமல், ஒரே ஜட்டியை திரும்ப திரும்ப பாவிப்பதன் மூலம், உங்களைச் சுற்றி துர்வாடை ஏற்படும். என்ன தான் குளித்து உடலை சுத்தம் செய்திருந்தாலும், நீங்கள் தூய்மையற்ற நபராகவே கருதப்படுவீர்கள்.
அழுக்கு ஜட்டியை தினமும் அணிந்தால், அந்தரங்கப் பகுதிகளில் அரிப்புகள் கூட ஏற்படலாம்.
அவதானம்: Gym இல் உடற்பயிற்சி செய்யும் போது அணிந்திருக்கும் வியர்வையில் ஊறிய ஜட்டியை நாள் முழுவதும் அணிந்திருப்பதும் ஆரோக்கியமானது அல்ல. ஆகவே ஆண்கள் உடற்பயிற்சி செய்யும் போது அன்றாடம் பயன்படுத்தும் ஜட்டிகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
வெள்ளை நிற ஜட்டிகளில் இலகுவில் கறை படியும். அவ்வாறு கறைபடிந்த வெள்ளை நிற ஜட்டிகளை அன்றன்றே துவைப்பதன் மூலம் மாத்திரமே அவற்றில் படிந்த கறைகளை இலகுவில் நீக்க முடியும்.
அவ்வாறு துவைக்காமல், வார இறுதியில் துவைப்பதற்காக Laundry Basket இல் வெள்ளை நிற ஜட்டியை போட்டு வைத்திருந்தால், அவற்றில் படிந்த கறைகளை நீக்குவது கடினமாக இருக்கும். சில வேளைகளில் அந்த கறைகள் ஜட்டியில் நிரந்தரமாகக் கூட அதிக வாய்ப்புகள் உள்ளன.
Suggestion: ஒரு ஆண் குறைந்தது 3 ஜட்டிகளையாவது அன்றாட வாழ்வில் பயன்படுத்த, புழக்கத்தில் வைத்திருக்க வேண்டும்.
குறிப்பு: ஆண்கள் ஜட்டி அணிந்து குளிக்கும் போது உடலுக்குப் போடும் Soap யை ஜட்டிக்கும் போட்டு துவைப்பதைத் தவிர்க்க வேண்டும். அவை ஜட்டியை சீக்கிரம் பழுதடையச் செய்யும். விரும்பினால், அணிந்து குளிப்பதற்கு என்றே தனியாக, பழைய ஜட்டிகளைப் பயன்படுத்தலாம்.
Read More: ஆண்கள் உள்ளாடைகளை சுத்தம் செய்து, அலசுவது, துவைப்பது எப்படி?
Read More: நீங்கள் அணியும் ஜட்டி பழுதடைந்ததற்கான அறிகுறிகள்
Comments
Post a Comment