பூப்படையும் வயதை அடையும் போதே பசங்கள, அவங்க ஆடைகளை அவங்களையே அலசிப் போட பழக்க வேண்டும். அதன் மூலமே அவர்களால் வயதுக்கு வரும் போது அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.
சட்டை, ஜீன்ஸ்/பேண்டை துவைக்கும் முன்னர் அவற்றின் பாக்கெட்டுக்களை சோதனை செய்ய மறக்க வேண்டாம். ஜீன்ஸ், பேண்டில் அணிந்திருக்கும் Belt யை கழட்ட மறக்க வேண்டாம். Belt நீரில் நனைந்தால், சீக்கிரம் பழுதடைந்து விடும்.
ஆண்கள் ஆடைகளைத் துவைக்க Washing Powder, Washing Liquid, Soap போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அவற்றைப் பயன்படுத்தி ஆடைகளை அலசிய பின்னர் Fabric Conditioner(Comfort) பாவிப்பதன் மூலம் நீண்ட காலத்திற்கு உங்கள் ஆடைகளை பழுதடையாமல்(detergents பாவித்து துவைக்கும் போது ஆடைகளில் உள்ள் நூல் இழைகள் பழுதடையும் - repeated washing can tangle cloth fibres, making them rough, dull & lifeless) பாதுகாக்கலாம்.
ஆண்கள் லுங்கி/சாரம், வேட்டி போன்றவற்றை சலவைத் தூள் பாவித்தும் அலசி துவைக்கலாம். ஆனால் பட்டு வேட்டியை Shampoo பாவித்து மாத்திரமே துவைக்க வேண்டும்.
இல்லாவிட்டால் Laundry க்கு கொடுத்தே துவைக்க வேண்டும். பட்டு வேட்டிகளை சாதாரண சலவைத் தூள் பாவித்து துவைத்தால் பழுதடைந்து விடும்.
ஆண்கள் புதிதாக வாங்கிய லுங்கியை அணிய முன்னர் Shampoo பாவித்து துவைப்பதன் மூலம் லுங்கியை அணியும் போது அசெளகரியமாக இருக்காது. அதை அணியும் போது ஏற்கனவே அணிந்து பழக்கப்பட்ட லுங்கி/சாரம் அணிந்திருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
ஆண்களின் வெள்ளை ஆடைகளில் உள்ள கறைகளை ஓரளவுக்கு மேல் நீக்க முடியாது. கடைசி முயற்சியாக ஒருமுறை Laundry க்குக் கொடுத்துப் பார்க்கலாம். அவர்கள் அதனை Bleach செய்வர். அவ்வாறு Laundry க்கு கறைகளை நீக்க கொடுத்த சட்டைகளை, மீண்டும் துவைக்காமல் அணிய வேண்டாம். அவர்கள் கறைகளை நீக்கப் பயன்படுத்திய வெளிற்றிகள்(Bleach) காரணமாக உங்களுக்கு Skin Problems ஏற்படலாம்.
ஆண்கள் வயதுக்கு வந்த பின்னர், அடிக்கடி இரவில் தூக்கத்தில் விந்து வெளியேறும். அவ்வாறு தூக்கத்தில் விந்து வெளியேறும் போது அவர்களின் ஆடைகளில் விந்துக் கறை(Cum Stain/Semen Stain) ஏற்படும். அதனை அவர்கள் காலையில் குளிக்கும் போது அலசி சுத்தம் செய்ய வேண்டும். ஆண்கள் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம், விந்துக்கறை அணிந்திருக்கும் ஆடையில் நேரடியாக படிவதைத் தவிர்க்க முடியும்.
காலையில் எழுந்து, ஜட்டியை மாத்திரம் நன்றாக அலசினால் போதும். இரவு அணிந்திருந்த ஆடைகளை பெரிதாக அலச வேண்டிய தேவை இருக்காது.
ஆண்கள் ஜட்டியைத் துவைக்கும் போது, ஜட்டியின் உள்பக்கத்தை வெளியே எடுத்து துவைக்க வேண்டும். அதே நேரம் மிகவும் குறைவான சலவைத் தூளைப் பயன்படுத்த வேண்டும். அதே நேரம் ஜட்டியை நன்றாக நீரில் அலச வேண்டும். ஜட்டியை துவைக்கப் போட்ட Soap யை, அல்லது சலவைத் தூளை ஒழுங்காக கழுவாமல் அப்படியே காயப் போட்டால், அந்த ஜட்டியை பின்னர் அணியும் போது அங்காங்கே அரிப்பு ஏற்படும்.
ஆண்கள் அன்றன்று அணியும் ஆடைகளை அன்றிரவே துவைத்துக் காயப் போடலாம்.
சலவைத் தூள்(Washing Powder) பயன்படுத்துவதாக இருந்தால் 20 நிமிடங்கள் சலவைத் தூள் கலந்த நீரில் ஆடைகளை ஊற வைத்து, நன்றாக கலக்கி, பிழிந்து, உடைகளைக் கழுவலாம்.
குறிப்பு: உடைகளை சலவைத் தூள் கலந்த நீரில் ஊற வைத்தால் மாத்திரம் போதாது. அவற்றை சில நிமிடங்களுக்கு ஒரு முறை கலக்கி, பிழிந்து, திரும்ப ஊற விட வேண்டும்.
உங்கள் ஆடைகளில் உள்ள அழுக்குகளுக்கு ஏற்றாற் போல சலவைத் தூள், துணி துவைக்கும் சவர்க்காரம் போட்டுக் கழுவவும். சலவைத் தூளைப் பாவிக்கும் போது அதன் பாக்கெட்டில் உள்ள அறிவுறுத்தலைப் பின்பற்றவும்.
Washing Machine பயன்படுத்தி உடைகளைத் துவைப்பதாக இருந்தால், அதற்கான சலவைத் தூளை தேவையான அளவு பாவிக்கவும். உங்கள் ஆடைகளில் பெரியளவில் அழுக்கு இல்லை, வெறும் வியர்வை/வியர்வை வாடை மாத்திரம் தான் என்றால் குறைந்தளவு சலவைத் தூள் பாவிக்கலாம். உங்கள் சட்டைகளில் உள்ள கறைகளை(Collar, Armpit, Wrist) துணி துவைக்கும் Soap வைத்து தேய்த்து அலசுவதன் மூலம் சீக்கிரம் அலசலாம். உடைகளுக்கு சவர்க்காரம் போட்ட பின்னர், துணிகளை ஒன்றுடன் ஒன்று தேய்த்து முரை வரும் அளவுக்கு தோய்க்கவும். விரும்பினால் துணியில் உள்ள அழுக்குகளை Brush(Heavy Duty Plastic Cloth Washing Brush or Cleaning Brush or Washing Brush or Handle Brush) வைத்து தேய்த்து சுத்தம் செய்யலாம்.
அவதானம்: ஆண்கள் தமது ஆடைகளை கைகளால் துவைப்பது சிறந்தது. Washing Machines(Low Quality) களில் ஆடைகளை துவைக்கும் போது அவை சீக்கிரம் பழுதடைய, தையல் பிரிய, கிழிந்து போக வாய்ப்பு உள்ளது.
Tips: நீங்கள் அலச இருக்கும் அணிந்த ஆடைகளில் உள்ள Washing குறிப்புகளினை முதலில் அவதானியுங்கள். அவற்றில் Do Not Bleach என்று குறிப்பிட்டிருந்தால், அந்த ஆடைகளை சலவைத் தூள் பயன்படுத்தி துவைக்க வேண்டாம்.
கறுப்பு Jeans, Pant, மற்றும் சட்டைகளை Washing Powder, Soap பயன்படுத்தி துவைப்பது சற்று பிரச்சனையான விடையமாகும். அவை சீக்கிரம் வெளிறிப் பழுதடைய வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை அவற்றை சாதாரண Shampoo பாவித்து துவைக்கவும். கறுப்பு நிற ஆடைகளை துவைக்கும் போது உள்பக்கத்தை வெளியே எடுத்து துவைக்கவும். கறுப்பு நிற ஆடைகளை நிழலான இடத்தில் காய விடவும்.
Cotton and Spandex Blend Fabrics இனால் செய்யப்பட்ட Pants கள் பார்ப்பதற்கு தடிமனாக இருந்தாலும், அணியும் போது மிகவும் மெல்லியதாக, Soft ஆக இருக்கும். இவ்வாறான கலப்பு துணிகளால் செய்யப்பட்ட Shorts/Pants களை, அதன் உள்பக்கத்தை வெளியே எடுத்து கைகளால், குறைந்தளவு Soap Powder/Washing Powder பயன்படுத்தி துவைக்க வேண்டும். இவ்வாறான துணிகளில் செய்த உடைகளை Washing Machines இல் போட்டு துவைத்தால், அவை சீக்கிரம் பழுதடைந்து, நிறம் மங்கி, கிழிய ஆரம்பித்து விடும்.
Tips: ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகளை கைகளால் துவைப்பதே சிறந்தது. Washing Machine இல் துவைக்கும் போது அவை சீக்கிரம் பழுதடையும். அதே நேரம் ஆடைகளை அலசி, துவைக்கும் போது உள்பக்கத்தை வெளியே எடுத்து துவைக்க வேண்டும். ஏன் என்றால் உங்கள் ஆடைகளின் வெளிப்பக்கத்துடன் உங்கள் உடல் வியர்வை/உங்கள் தோல்/உடல் அழுக்கு தொடர்பினை ஏற்படுத்தாது.
Tips: ஜட்டி, பனியனை துவைக்கும் போது சிறிதளவு சலவைத் தூள் பயன்படுத்தவும். சில ஆண்களுக்கு அவர்கள் பாவிக்கும் சலவைத் தூளினால் கூட அந்தரங்கப் பகுதிகளில் அரிப்பு ஏற்படுவது உண்டு. ஆகவே அவ்வாறான பிரச்சனைகள் உள்ள ஆண்கள் ஜட்டி, பனியன்களைத் துவைக்கும் போது நன்றாக நீரில் அலச மறக்க வேண்டாம்.
Tips: ஒவ்வொரு நாளும் துவைத்து உலர்ந்த ஜட்டிகளை அணிவதை உறுதி செய்யவும். நேற்று அணிந்த ஜட்டியையே இன்றும், துவைக்காமல் அணிய வேண்டாம்.
துணிகளைப் பிழியும் போது அவதானமாக பிழியவும். Quality குறைவான ஆடைகளாக இருந்தால், அவை சீக்கிரம் பழுதடைந்து விடும்.
Tips: உங்கள் உடலை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் அளவுக்கு அதிகமாக சிரத்தை எடுத்து ஆடைகளை அலச வேண்டிய தேவை இருக்காது.
சில ஆண்கள் ஒரு வாரத்திற்கு தேவையான ஆடைகளை வார இறுதியில் துவைத்து, காய வைத்து, அயன் செய்து மடித்து வைத்திருப்பர். வார இறுதியில் அவற்றை மீண்டும் துவைத்து, காய வைத்து, அயன் செய்து மடித்து வைப்பர்.
சில கறைகளை அன்றன்றே அலசி சுத்தம் செய்வதன் மூலமே அவை உங்கள் ஆடைகளில் நிரந்தரக் கறையாக மாறுவதைத் தவிக்க முடியும். உதாரணமாக: விந்துக் கறை, சிறுநீர் கறை.
ஆடைகளை நேரடி சூரிய ஒளியில் காய விடுவதை விட, சற்று நிழலான இடத்தில் காய விடவும். அதிலும் குறிப்பாக ஜட்டியை நிழலான இடத்திலேயே காய விட வேண்டும்.
குறைந்தது 2 வாரங்களுக்கு ஒரு முறையாவது அவரவர்களின் Bed Sheet, Pillow Covers, Blanket போன்றவற்றை துவைக்க வேண்டும். அவற்றை நேரடி வெயிலில் காய விடவும்.
ஆண்களின் காலுறைகளை(Socks) அடிக்கடி துவைக்க வேண்டும். இல்லாவிட்டால் கால் நகங்களில் புண்கள் ஏற்படலாம். மழை வெள்ளத்தில் நனைந்த Socks களை உடனேயே துவைத்துக் காயப் போடவும். அப்படியே விட்டால், துர்நாற்றம் வீச ஆரம்பித்து விடும்.
ஆடைகளை துவைக்க Washing Basket இல் போடும் போது கறை அதிகமான ஆடைகள் தனியாகவும், கறைகள் குறைவான ஆடைகள் தனியாகவும் போடவும். உங்கள் வீட்டில் எலித் தொல்லை, கரப்பான் பூச்சி தொல்லைகள் இருந்தால் அவற்றை ஒழிக்கவும். இல்லாவிட்டால், துவைக்காத ஆடைகளை Washing Basket இனுள் புகுந்து சேதப்படுத்தி விடும்.
ஆடைகளைத் துவைக்கும் போது வெள்ளை நிற ஆடைகளை தனியாக துவைக்க வேண்டும். Light Color ஆடைகளை, சாயம் போகும் ஆடைகளுடன் துவைக்கக் கூடாது.
Tips: ஆடைகளை காய விடும் போது உள்பக்கத்தை வெளியே எடுத்து காய விட வேண்டும். அவரவர்களின் மெல்லிய ஆடைகளை நிழலான இடங்களில் காய விடலாம். தடிமனான ஆடைளை சூரிய ஒளி நேரடியாக படும் இடத்தில் காய விடலாம். ஆடைகளை அதிக நேரம் நேரடி சூரிய ஒளியில்/வெயிலில் காய விடவும் கூடாது. அப்படி காயவிட்டால், உங்கள் ஆடைகளும், உள்ளாடைகள் மொரு மொரு என்று அப்பளம் போல் ஆகி விடவும் வாய்ப்பு உள்ளது. அடிக்கடி அப்படி ஆனால், ஆடைகள் பழுதடைந்து விட்டதாக அர்த்தம். அவற்றை அணிந்திருக்கவும் அசெளகரியமாக இருக்கும்.
Cloth Drying Machine களை பயன்படுத்துவதாக இருந்தால் ஆடைகளை பிரித்து, வகைப்படுத்தி காய விடவும். Cloth Drying Machine யை எப்படி பாவிப்பது என்பது பற்றி அதன் Manual யை வாசித்து அறிந்து கொள்ளவும் அல்லது YouTube Videos களைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
குறைந்தளவு நீரில் ஆடைகளைக் கழுவ உங்களிடம் ஏதாவது குறிப்புகள் இருந்தால் Comment பண்ணுங்க.
Comments
Post a Comment