"யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே" என்னும் பழமொழி யாருக்கும் பொருந்துகிறதோ, ஆனால் நன்றாக கம கமக்க Perfumes விசிறிக் கொண்டு திரியும் ஆண்களுக்கு மிகவும் பொருந்தும். அவர்கள் வருவதை அவர்களின் Perfumes வாடையை வைத்தே இனங்காணக் கூடியதாக இருக்கும். அந்தளவுக்கு ஆண்களின் வாழ்க்கையிலே Perfumes மிகவும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
ஒருவர் உங்களிடம் நெருங்கிப் பேச நினைப்பதற்கு உங்கள் Dressing Sense ஒரு காரணமாக இருந்தால், உங்கள் மீது வீசும் வாசம் இன்னொரு காரணமாக இருக்கும். பொதுவாகவே ஆண்களின் வியர்வை வாடை எதிர்பாலினரையும்(Ladies), மற்றும் தன்பாலீர்பாலர்களையும்(Gay/Bisexual) ஈர்க்கக் கூடியது. ஆனால் சுத்தமான வியர்வை மாத்திரமே இவ்வாறு மற்றவர்களை உங்கள் மீது கவர்ந்திழுக்கக் கூடியது. ஆண்களின் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையில் சீக்கிரம் bacteria தொற்று ஏற்பட்டு, உடல் வாடை(Body Odor) பாழாகி விடும்.
அவ்வாறு நிகழ்வதைத் தவிர்க்கவே, ஆண்கள் தம்மை சுத்தம் செய்து குளித்த பின்னர், உடலில் உள்ள ஈரத்தை துடைத்து விட்டு, ஆடைகளை அணிய முன்னர் அக்குள் பகுதிக்கு Deodorant பாவிப்பர். Roll-On deodorants அக்குள் பகுதியில் பாவிப்பதற்கும், Deodorants Spray அக்குள் பகுதியிலும், தேவைப்பட்டால் அடிவயிற்றுப் பகுதியிலும் Spray செய்யவும் உகந்தது. இவற்றைப் பாவிப்பதன் மூலம் குறைந்தது 2 நாட்களுக்காவது உங்கள் வியர்வை வாடை கெடாது இருக்கும்.
உங்கள் வியர்வை வாடையை Deodorants பார்த்துக் கொள்ளும் ஆனால் அதை மாத்திரம் வைத்து உங்களால் மற்றவர்களைக் கவர முடியாது. அதற்குத் தான் விஷேட நிகழ்வுகளின் போது உங்களைச் சூழ நறுமணம் கமல, Perfumes பாவிக்க வேண்டும். Perfumes பாவிப்பதாக இருந்தால் அணிந்திருக்கும் ஆடையிலும், மணிக்கட்டிலும், கழுத்துப் பகுதியிலும் பாவிக்கவும். Perfumes பாவிக்கும் போது மிகவும் சிறிதளவே பாவிக்க வேண்டும்.
ஆனால் Perfumes, Deodorants போல நாள் கணக்கில் இருக்காது. குறைந்து சில மணித்தியாலங்களுக்கே இருக்கும். அதன் காரணமாகவே Perfumes வாங்கும் போது விலையுயர்ந்த Perfumesகளை ஆண்களும் பெண்களும் வாங்குவர்.
நண்பர்களாக இருந்தாலும், அவர்கள் ஒரே Perfumes யை வாங்க மாட்டார்கள். தம்மை வித்தியாசமாக வெளிக்காட்டவே அவர்கள் விரும்புவார்கள். தாம் என்ன வகை, என்ன Perfumes பாவிக்கிறோம் என்பதை கிட்டத்தட்ட Company Secret போல கட்டிக் காப்பாற்றுவார்கள். மிகவும் விலையுயர்ந்ததாக இருந்தால் மாத்திரமே அதனை வெளிப்படையாக சொல்லுவர், இல்லாவிட்டால் யார் கேட்டாலும் உண்மையான பெயரை சொல்ல மாட்டார்கள்.
நீங்கள் பயன்படுத்தும் Perfumes குறைந்தது 4 முதல் 6 மணித்தியாலங்கள் வரை உங்களை மணம் கமல வைக்கும்.
Perfumes பாவிக்கும் போது வேறு வாசனைத் திரவியங்கள், அல்லது வாசனை கொடுக்கக் கூடிய Cosmetic Products(Body creams and Body lotions) பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் அவை, உங்கள் Perfumes வாடையை சீர்குழைத்து விடும். ஒன்றில் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது, அல்லது உங்கள் Perfume வாடையை ஒத்த வாசனையைக் கொடுக்கக் கூடிய Cosmetic Products யைப் பயன்படுத்த வேண்டும்.
மிகவும் செறிவான Perfumes(highly concentrated) களைப் பாவிக்கும் போது அவை நீண்ட நேரம் நீடிக்கும். அதே நேரம் அவை விலை அதிகமாக இருக்கும். விலை குறைந்த Perfumes யை ஒரு நாளுக்கு பல தடவைகள் பயன்படுத்துவதை விட. விலையுயர்ந்த Perfumes யை ஒரு தடவை அடித்து விட்டு பல மணி நேரம் கெத்துக் காட்டலாம்.
சில வகை Perfumes களைப் பாவிக்கும் போது சிலருக்கு தலை வலி கூட ஏற்படும். ஆகவே வாங்கும் முன்னர் பாவித்துப் பார்த்து வாங்க வேண்டும்.
உங்கள் உடலில் Scent பூசும் போது, உங்கள் தலை முடிக்கும் சிறிதளவு பூசவும். உங்கள் உடலை விட, தலை முடியில் நீண்ட நேரம் Perfume வாடை நீடித்து இருக்கும்.
Perfume இன் நிறத்தை Tissue Paper யை வைத்து பரிசோதனை செய்யாமல் அவற்றை உங்கள் ஆடைகளில் தெளிப்பதைத் தவிர்க்கவும். Tissue Paper இல் நீங்கள் விசிறிய Perfume இன் நிறம் ஊறியதை அவதானித்தால், உங்கள் தோலில் மாத்திரம் Perfume யை பயன்படுத்தவும்.
Fragrance, Perfume, Toilette, and Cologne போன்றவற்றிற்கு இடையிலான வித்தியாசம் என்ன?
நறுமணம்(Fragrance) என்பது ஆண்களும் பெண்களும் பயன்படுத்தும் வாசனை திரவியத்திற்குப் பயன்படுத்தப்படும் பொதுவான சொல். இது பல வடிவங்களில் வருகிறது, மற்றும் வெவ்வேறு பெயர்களில் விற்பனையாகிறது. ஆனால் பொதுவாக இந்த வகைகளின் கீழ் வருகிறது.
Eau Fraiche: நறுமணத்தின் மிகவும் நீர்த்த பதிப்பு, பொதுவாக ஆல்கஹால் மற்றும் தண்ணீரில் 1-3% வாசனை எண்ணெய் கலந்து செய்யப்படுகிறது. பொதுவாக ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே நீடிக்கும்.
Cologne/கொலோன் (Eau de Cologne): வாசனை திரவியத்திற்கான ஒரு தொன்மையான சொல், வட அமெரிக்காவில் ஆண்களுக்கான வாசனைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. Light, fresh and fruity, பொதுவாக ஆல்கஹால் மற்றும் தண்ணீரில் 2-4% வாசனை எண்ணெய் கலந்து செய்யப்படுகிறது. இளைஞர்களுக்கான வாசனை திரவியங்களில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக சுமார் 2 மணி நேரம் நீடிக்கும்.
Toilet/டாய்லெட் (Eau de Toilette): ஆல்கஹாலில் கரைக்கப்பட்ட 5-15% pure perfume கொண்ட லேசான தெளிப்பு கலவை. பொதுவாக சுமார் 3 மணி நேரம் நீடிக்கும்.
Perfume/பர்பியூம் (Eau de Parfum): வரலாற்று ரீதியாக ஆண்கள் மற்றும் பெண்களின் வாசனைத் திரவியங்களில் தயாரிப்புகளை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது ஒரு நறுமணத்தை விவரிக்க ஒரு சிறந்த சொல். 15-20% pure perfume 5 முதல் 8 மணி நேரம் வரை நீடிக்கும்.
Parfum: A corruption of the Latin phrase per fumum (through smoke). அனைத்து வாசனை திரவியங்களிலும் மிகவும் அடர்த்தியான மற்றும் விலை உயர்ந்தது இதுவாகும். சிறிது எண்ணெய்த்தன்மையான, Perfume(அல்லது Perfume) இதுவாகும். 20-30% pure perfume உள்ளது. ஒரு தடவை பாவித்தால் 24 மணிநேரம் வரை கூட நீடிக்கும்.
வாசனைகளின் வாழ்க்கைச் சக்கரம் - The Life Cycle Of Fragrances
வாசனை திரவியங்கள், மூன்று பகுதி வாழ்க்கை சுழற்சியைக் கொண்டுள்ளன; நீங்கள் அதனை ஒரு ஆவியாகும் பிரமிட் வடிவம் போன்று நினைவில் கொள்ளுங்கள். அதன் அடிவாரத்தை அடையும் வரை மேல் இருந்து கீழ் நோக்கி மெதுவாக அது மறைந்து போகும். மூன்று பிரிவுகளில் ஒவ்வொன்றிலும் தனித்தனி வாசனைகள் அல்லது Note உள்ளன, அவை நீங்கள் முகரும் வாசனையில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான வாசனை திரவியங்களின் வாசனை மூன்று வெவ்வேறு வகையான Note களை உள்ளடக்கியதாகும். அவையாவன Top, Medium, and Base notes.
Top note: Top note என்பது நறுமணத்தின் ஆரம்ப, இலகுவான வாசனையாகும், இது தோலில் பயன்படுத்தப்பட்ட உடனேயே மூக்கைத் தாக்கும். Top note 15 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை நீடிக்கும். Typical top notes are various light floral scents, citrus, fruity scents, powdery scents, marines and aquatics, and spices such as cinnamon.
Medium note: இதனை Middle or Heart notes எனவும் அழைப்பர். Medium note ஆனது வாசனையின் மிக முக்கிய கூறாகும். Top note தெளிந்த பிறகு Medium note உருவாகின்றது, மற்றும் தெளிக்கப்பட்ட பிறகு 3-5 மணி நேரம் நீடிக்கும். இதன் காலம் Top note யை விட கூடுதலாக உள்ளது; அவை ஒன்றையொன்று உருவாக்குகின்றன. Heart notes களில் பெரும்பாலும் மல்லிகை போன்ற கனமான மலர் வாசனைகள் அல்லது green scents(பச்சை வாசனை) such as grass or stone அடங்கும். இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு போன்ற மசாலா வாசனைகளும் பழ வாசனைகளுடன் இங்கே தோன்றும்.
Base note: கடைசியாக உருவாகும், இந்த நறுமணங்கள் பெரும்பாலும் வாசனையின் ஆழமான குறிப்புகளாகும், அவை அதனைப் பாவித்த பிற்பாடு, அந்த நாளின் பிற்பகுதியில் உங்களால் மணக்கக் கூடியதாக இருக்கும். Base note அடித்தளத்தை அமைக்கின்றன, மேலும் உங்கள் தோலில் வாசனை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை தீர்மானிக்கும். அவை 5 முதல் 10 மணி நேரம் வரை நீடிக்கும். Typical base notes are sandalwood, moss, vetiver, vanilla, tar, leather, smoke, tobacco, and musk.
கிடைக்கக்கூடிய பரந்த அளவிலான வாசனைகளின் மாதிரியை கீழே காணலாம். நான்கு முக்கிய குடும்பங்களும் நமக்கு ஒரு பொதுவான வழிகாட்டியாகும் - நீங்கள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து, அவற்றில் உள்ள வாசனைகளைக் கண்டறிந்து உங்களுக்கு ஏற்றதை உங்களால் உருவாக்க முடியும்.
Notes வறண்டு போகும் போது, வாசனை மாறும், இது நறுமணம் புதுமையடைந்து சுவாரஸ்யமாக மாற வழி செய்யும். பொதுவாக, தரம் குறைந்த நறுமணத்தின் அடையாளம், அது வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பதாகும். ஆனால் இது எல்லா சந்தர்ப்பங்களிலும் உண்மையில்லை.
Linear vs Non-Linear Fragrances
சில வாசனை திரவியங்கள் முதல் முறை ஸ்பிரே செய்தது முதல் நீங்கள் உங்கள் உடலை கழுவும் வரை உங்கள் மீது அதே மணம் வீசும்; இவை நேரியல் வாசனைகள்(Linear Fragrances) என்று அழைக்கப்படுகின்றன. மற்றவை - நேரியல் அல்லாதவை்(Non-Linear Fragrances) என்று அழைக்கப்படுகின்றன. அவை நேரமாக ஆக Notes மாறி, வேறு நறுமணம் வீசச் செய்யும்.
பெரும்பாலான தரமான வாசனை திரவியங்கள் மேலே கூறியது போல் நறுமண வாழ்க்கை சுழற்சியைக் கொண்டிருக்கும். பெரும்பாலும், குறைந்த விலை நறுமண உற்பத்தியாளர்கள் இந்த சிக்கலான வாசனைத் தொகுப்பில் முதலீடு செய்ய மாட்டார்கள்; எனவே மலிவான வாசனை திரவியத்தை அடையாளம் காண்பதற்கான எளிதான வழிகளில் ஒன்று, அது அணிந்திருக்கும் நேரம் முழுவதும் ஒரே மாதிரியான வாசனையாக கொடுப்பதாகும்.
இருப்பினும், தரமான நேரியல் வாசனை திரவியங்களும் உள்ளன, ஏனெனில் அவை அவற்றின் பிரத்தியேக நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளன.
எந்த அளவு fragrance bottle வாங்க வேண்டும்? வாசனை திரவியங்கள் பல்வேறு பாட்டில் அளவுகளில் வருகின்றன, ஆனால் அவை வழக்கமாக 1 அவுன்ஸ்(oz) முதல் 3.4 அவுன்ஸ்(oz) வரை, அல்லது இன்னும் பெரிய பாட்டில்கள் கூட இருக்கும். நீங்கள் வாசனை திரவியங்களைப் பயன்படுத்துவதற்கு புதியவராக இருந்தால், சிறிய பாட்டில்களை வாங்கவும், ஏனெனில் அதில் risk குறைவாகும். நீங்கள் அதை எவ்வளவு நாள் பாவிப்பீர்கள் என்று உங்களுக்கும் தெரியாது. வேறு ஒரு வாசனைகளை நீங்கள் மணக்கும் வாய்ப்பைப் பெற்றவுடன், இதன் வாசனையை வெறுக்க ஆரம்பித்து விடுவீர்கள். உங்கள் Taste மாறக்கூடும்.
அவதானம்: நீண்ட நாட்களுக்கு Perfumes களை Bathroom இல் வைத்திருக்க முடியாது. நமது சூழல் வெப்ப நிலை, அவற்றின் மீது சூரிய ஒளிபடுதல் போன்ற காரணங்களினால் அவை சீக்கிரம் பிரிகையடையும். Perfumes களை இருளான, வரண்ட, வெப்பம் குறைவான இடத்தில் சேமிக்கவும்.
உங்களுக்கு ஏற்ற Perfume/Cologne யைத் தெரிவு செய்வது எப்படி?
ஆண்களால் இயற்கையாகவே தமது உடல் வாடைக்கு ஏற்ற வாசனைத் திரவியத்தைத் தெரிவு செய்ய முடியும். உங்களால் மாத்திரமே உங்களுக்கு எது சிறப்பாக இருக்கும் என்பதைக் கூற முடியும். இன்னொருவரை உங்களுக்கான தெரிவினை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டாம். ஆனால், மற்றவர்களின் அபிப்பிராயங்களை பெற மறக்காதீர்கள்.
நீங்களே உங்கள் மீது பயன்படுத்திப் பார்க்காமல், இன்னொருவர் சொல்கிறார் என்பதற்காக அதனை வாங்க வேண்டாம்.
பர்பியூம்களை விற்பனை செய்யும் நிலையங்களில் பயன்படுத்திப் பார்த்து வாங்க வேண்டும். ஆனால் ஒரே தடவையில் கூடியது 4 வாசனைத் திரவியங்களுக்கு மேல் பயன்படுத்தினால் உங்களால் வித்தியாசத்தை அறிய முடியாது. ஆகவே உங்கள் தெரிவினை ஒரே நாளிலேயே மேற்கொள்ள வேண்டாம். அதுவும் இது தான் நீங்கள் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தும் முதல் முறை என்றால் ஒரே தடவையில் இரண்டை மாத்திரம் பயன்படுத்திப் பார்க்கவும்.
எப்போதும் உங்கள் மணிக்கட்டில் வாசனைத் திரவியத்தைப் பயன்படுத்திப் பார்த்து முடிவு செய்யவும். பர்பியூம் கடைகளில் கொடுக்கப்படும் அட்டைகளில் Top Note மாத்திரமே இருக்கும் அதை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது.
ஒவ்வொரு வாசனைத் திரங்கியங்களையும் முகர்ந்து பார்ப்பதற்கும் முன்னரும் ஒரு நீண்ட இடைவெளி எடுத்துக் கொள்ளவும். அவ் இடைவெளிகளில் Coffee or Tea குடிக்கலாம். நீங்கள் உபயோகித்த வாசனைத் திரவியங்களின் பெயர்களை குறிப்பெடுத்துக் கொள்வதன் மூலம் அவற்றை மீண்டும் பரிசோதிக்க வேண்டிய தேவை ஏற்படாது.
ஆண்கள், பெண்களுக்கான நறுமணங்களைத் தெரிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். கடையில் கேட்கும் போதே ஆண்களுக்கானவற்றை, அல்லது Unisex Perfumes களை கேட்டு வாங்கவும்.
முதல் தடவையே உங்களுக்காக சிறந்த வாசனைத் திரவியத்தைத் தெரிவு செய்ய முடியாது. ஆகவே மீண்டும் முயற்சிப்பதில் தவறில்லை.
Fragrance பாவிப்பது எப்படி?
- Spray perfume on dry skin, preferably right after a shower. Hold the spray nozzle 3-6 inches from your skin while applying.
- Start light. If you’re new to wearing fragrances, start with one single spray on your chest. As you become more comfortable and knowledgeable about how to wear cologne properly, you can branch out to a few more sprays in different areas…
- Apply fragrance to heat areas. Your body heat will push the scent throughout the day, creating a nice scent trail commonly called sillage. Start with the warmest parts of your body: chest, neck, lower jaw, wrist, forearm, inner elbow, shoulder. Do not spray on all these points at the same time; start with one and then as you learn the scent, spray 2-3 other spots. I do not recommend spraying your crotch area.
- Re-spray only when required. You can add more sprays to your wrists depending on how long the scent lasts. For most this will be in the second half of the day.
- Don’t kill the note. Rubbing the perfume into the skin seems a sensible thing to do. In reality, it breaks the molecular bond, making the scent weaker.
- Don’t spray and walk. Spraying a fragrance in the air and walking through the mist is worthless. Most of the fragrance drops straight to the floor.
- Don’t spray fragrance on your clothes. In this case the fragrance isn’t allowed to mix with your oils, and hence it can’t naturally go through the stages of notes like it should. Also, the oils in a fragrance will stain many fabrics.
- Don’t splash. If you are applying cologne from a regular bottle, take one finger and press it against the opening of your bottle and then tip it over gently. Dab onto the parts of the body described above.
- Less is more. Fragrance should be discovered, not announced. People who are close by should be able to smell your cologne, but not be overpowered by it.
Keywords: Fragrances
Comments
Post a Comment