மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு நீர் அருந்துவது இன்றியமையாதது. ஆனால் ஒரு நாளைக்கு நாம் எவ்வளவு நீர் அருந்த வேண்டும்? அதனை எதன் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும்? என்பது தொடர்பான போதிய அறிவு நம்மில் பலருக்கு இல்லை.
நாம் நமது உடலுக்குத் தேவையான அளவு நீரை அருந்தி உடலில் சேரும் அழுக்குகளையும், நச்சு இரசாயணங்களையும் சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதன் மூலம் நீண்ட நாட்கள் அரோக்கியமாக வாழலாம். ஆனால் அதற்கு எல்லோரும் ஒரே அளவான நீரை தினமும் அருந்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் உடல் நிறைக்கு ஏற்றாற் போல ஒருவர் அருந்த வேண்டிய நீரின் அளவு மாறுபடும்.
அதே நேரம் ஒரே தடவையிலேயே அந்த நீரையும் அருந்தவும் கூடாது. அப்படி அருந்தினால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படும். அசெளகரியமாக இருக்கும். சாப்பிட்டதெல்லாம் வெளியில வர்ற மாதிரி இருக்கும். நீங்க சாப்பிட்ட உணவு கூட ஒழுங்காக செரிமானம் அடையாது.
உங்களுக்கு தாகம் அதிகமாக இருந்தால், சாப்பிட முன்னர் நீரை அருந்த வேண்டும். சாப்பிட்ட பிறகு குறைந்தளவு நீரையே அருந்த வேண்டும். அதன் மூலம் சாப்பிட்ட சாப்பாடு இரைப்பையில் இருந்து மீண்டும் உணவுக் குழாயினுள் வருவதைத் தவிர்க்கலாம்.
காலை எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும் என்பது போன்று இரவு தூங்கும் போதும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் ஏன்? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரிந்துகொள்வோம்.
இரவு நேரத்தில் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது நன்மைகளை அளிக்கும். உடல் நீரேற்றத்துக்கு தண்ணீர் அவசியம் என்றாலும் சரியான நேரத்தில் எடுத்துகொள்வது தான் பலனளிக்கும். இரவு நேரத்தில் படுக்கைக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கலாம். மற்ற திரவங்களை தவிர்ப்பதே நல்லது.
உடல் சரியாக இயங்குவதற்கு தினசரி தண்ணீர் அவசியம். உடல் நீரேற்றத்துக்கு ம் இவை மிகவும் நல்லது. நாள் முழுவதும் , தூங்கும் போதும், சுவாசம், வியர்வை மற்றும் சிறுநீர், மலம் கழிப்பதன் வழியாக தண்ணீர் இழக்கிறோம். இதை ஈடு செய்ய தினசரி போதுமான தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும். ஆனால் சரியான நேரத்தில் குடிக்க வேண்டும். படுக்கைக்கு முன் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானதா இல்லையா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலை சுத்திகரிப்பது போன்று, இரவு நேரத்திலும் இது இயற்கை சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. வெதுவெதுப்பான நீர் உடல் நச்சு நீக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
வெதுவெதுப்பான நீர் குடிக்கும் போது அது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. உடல் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. நச்சுக்களை வியர்வை வழியாகவும் வெளியேற்றுகிறது. வியர்வை வருவதால் இரவு நேரத்தில் நீரேற்றம் குறையும் எனினும் உடலில் அதிகப்படியான உப்பு அலல்து நச்சு நீங்கி தோல் சுத்தமாகும்.
படுக்கைக்கு முன் வெதுவெதுவெதுப்பான நீர் குடிப்பதால் இரவு முழுவதும் நீரேற்றம் இருக்கும். உடல் நச்சு வெளியேறும் வயிற்றில் வலி அல்லது பிடிப்பு போகும். தொற்றுநோய் தாக்கம் கொண்டவர்கள் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து அருந்துவது நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்த செய்யும். வைட்டமின் சி அடங்கிய எலுமிச்சை சாறு நீர் உடலில் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
தூங்க செல்வதற்கு முன்பு சிறிது தண்ணீர் குடிப்பது உடலை குளிர்விக்க செய்யும். இது உடல் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது. அதிக வெப்பமான சூழலில் இருந்தால் சூடாக உணர்ந்தால் படுக்கைக்கு செல்லும் முன்பு உடலை குளிர்விப்பது நல்லது. இதனால் உடல் உஷ்ணம் தவிர்க்கப்படும். இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
2014 ஆம் ஆண்டின் நம்பகமான ஆதாரம் ஒன்றின்படி நீர் பற்றாக்குறை உங்கள் மனநிலையை எதிர்மறையாக பாதிக்கலாம். இது ஒட்டுமொத்த தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சியை பாதிக்கவும் செய்யலாம்.
இந்த ஆய்வில் 52 பேர் அதிக திரவம் மற்றும் 22 பேர் நார்மலான அளவு திரவ அளவு உட்கொள்ளும் ஆய்வை மேற்கொண்டது. அதிக தண்ணீர் அருந்தியவர்கள் நேர்மறை உணர்ச்சிகள் எதிர்கொள்ளவில்லை. அவர்கள் அமைதியான உறக்கத்தை கொண்டிருக்கவில்லை. அதே நேரம் இவர்கள் உடன் ஒப்பிடும் போது குறைந்த அளவு அதாவது நார்மலாக தண்ணீர் எடுத்துகொண்டவர்கள் நேர்மறை உணர்ச்சி, திருப்தி மற்றும் அமைதியை கொண்டனர்.
தண்ணீர் குடிப்பது நன்மையே என்றாலும் இரவு நேரத்தில் படுக்கைக்கு முன் தண்ணீர் குடிப்பது இரவில் சிறுநீர் கழிக்க வேண்டிய நேரத்தை அதிகரிக்க செய்யலாம்.
இயல்பாக இரவு நேரத்தில் சிறுநீர் வெளியீடு குறையும். இதனால் ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை இடையூறு இல்லாமல் தூங்கலாம். ஆனால் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு தண்ணீர் குடிப்பது இந்த தூக்க சுழற்சியை மாற்றும். குறீப்பாக நீரிழிவு மற்றும் வயதானவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருக்கலாம்.
தூக்கமின்மையால் இதயம் மோசமாக பாதிப்படையும். தூக்கமின்மை ஒருவரது வளர்ச்சியை பாதிக்க செய்யலாம்.
இது குறித்த 2019 ஆம் ஆண்டு ஆய்வின் படி உயர் இரத்த அழுத்தம் உயர் கொழுப்பு அளவு , எடை அதிகரிப்பு கொண்டுள்ளவர்கள் ஆறு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் போது அவர்கள் வயதானவர்களாக இருக்கும் நிலையில் பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
தூக்க சுழற்சியில் சிறுநீர் சுழற்சியில் வயதும் முக்கியமானது. வயதாகும் போது அதிகமாக சிறுநீர்ப்பை வேலை செய்யும். இது சிறுநீர்ப்பையின் செயல்பாட்டை பாதிக்க கூடிய மருத்துவ நிலைகளுடன் தொடர்பு கொண்டது.
இரவு தூங்க செல்வதற்கு முன்பு தண்ணீர் குடிப்பது பல நன்மைகளை கொண்டுள்ளது. ஆனால் படுக்கைக்கு செல்லும் சில நிமிடங்களுக்கு முன்பு குடிப்பது இதய ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்க செய்யலாம். படுக்கைக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பு குடிக்கலாம். அதிகபட்சமாக ஒரு மணி நேரத்துக்கு முன்பு குடிக்கலாம். அதன் பிறகு வேறு எந்த திரவமும் எடுக்க கூடாது. வயதானவர்கள்,கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்கள் இரண்டு மணி நேரம் முன்பு குடிப்பது தான் நல்லது.
நீரிழப்பை தவிர்க்க இரவில் அதிகப்படியான நீர் குடிப்பதை தடுக்க நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பது நல்லது. நீரிழப்பின் அறிகுறியே அடர்ந்த சிறுநீர். போதுமான அளவு தண்ணீர் குடித்தால் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறமாக இருக்கலாம்.
நாள் ஒன்றுக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிப்பது நன்மை அளிக்கும் என்றாலும் ஒவ்வொருவருக்கும் இது மாறுபடலாம். அதிக உடல் உழைப்பு கொண்டவர்களுக்கு இவை இன்னும் அதிகரிக்கலாம்.
தினசரி பழங்கள், காய்கறிகள் என நீர்ச்சத்து உள்ளதை எடுக்கவும். ஒவ்வொரு உணவுக்கு பிறகும் தண்ணிர் குடிப்பது, உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் பின்பும் தண்ணீர் குடிப்பதும் உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும்.
Keywords: Drinking Water, Water Consumption,
Comments
Post a Comment