ஆண்கள் காண்டம் அணிந்து கலவியில் ஈடுபட்டு விந்தினை காண்டத்தினுள் வெளியேற்றிய பின்னர், பாவித்த காண்டத்தினை எப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்பது தொடர்பில் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
வெளியேற்றிய விந்துடன் காண்டத்தை ஆண்குறியில் இருந்து கழட்டிய பின்னர்,
- விரும்பினால், வெளியேற்றிய விந்துடன் காண்டத்தில் ஒரு முடிச்சுப் போடவும்.
- விந்துடன் காண்டத்தை வீச விருப்பம் இல்லாவிட்டால், காண்டத்தினுள் உள்ள விந்தினை Toilet இனுள் கொட்டி விட்டு, காண்டத்தை நீரில் அலசிய பின்னர், பாவித்த காண்டத்தில் ஒரு முடிச்சுப் போடவும்.
விந்து வெளியேற்ற முன்னரே காண்டத்தை கழட்டியிருந்தால், பாவித்த காண்டத்தில் முடிச்சுப் போட வேண்டும்.
விந்து வெளியேற்றிய பின்னர், ஆண்குறியில் இருந்து காண்டத்தை எப்படி கழட்டுவது உகந்தது? ஒரு கையினால் விந்தினை காண்டத்தினுள் சிறை பிடித்துக் கொண்டு, மற்ற கையினால் ஆண்குறியின் அடியில் இருந்து காண்டத்தை மேல் நோக்கி, அதன் இறப்பர் வளையத்தை உருட்டிக் கொண்டு, இழுத்துக் கழட்டவும்.
முடிச்சுப் போட்ட பாவித்த காண்டத்தினை ஒரு ஈரமான Tissue Paper இல் சுற்றி குப்பைத் தொட்டியில் மாத்திரம் போடவும். வீட்டில் உள்ள குப்பைத் தொட்டியில் போட விருப்பம் இல்லாவிட்டால், தெரு முனையில் உள்ள குப்பைத் தொட்டியில் அதனைப் போடவும்.
Recommended: ஆண்கள் காண்டம் வாங்கும் போது தமக்கு பொருத்தமான ஆணுறை அளவைத் தெரிவு செய்வது எப்படி?
Tissue Paper இல்லாவிட்டால், பாவித்த காண்டத்தை வேறு யாரும் பயன்படுத்தாத வகையில் காண்டத்தில் முடிச்சுப்(Knot) போட்டு விட்டு, பழைய News Paper துண்டில் சுற்றியும் குப்பையில் போடலாம்.
எக்காரணம் கொண்டும் பாவித்த ஆணுறைகளை Toilet இனுள் போட்டு Flush செய்ய வேண்டாம். அது Sewage குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும்.
ஒரு காண்டம் பெட்டி/Pack வாங்கும் போது, பொதுவாக அதனுள் மூன்று காண்டம் பாக்கெட்டுக்கள் இருக்கும். நீங்கள் கலவியில் ஈடுபட ஒரு காண்டத்தினை மாத்திரமே பாவித்திருந்தால், பாவிக்காத மற்ற காண்டம் பாக்கெட்டுக்களை பத்திரமாக எடுத்து வைக்கவும். நீங்கள் விரும்பினால் உங்கள் Purse இலும் ஒரு காண்டம் பாக்கெட்டை வைத்திருக்கலாம்.
வயது வந்த ஆண்கள் தமது பர்ஸில் ஒரு பாக்கெட் ஆணுறை வைத்திருப்பது அவசியம் ஆகும். ஆண்களின் Purse இல் பல ரகசிய பகுதிகள் இருக்கும். அவற்றில் ஒன்றில் ஒரு காண்டத்தை வைத்திருக்கலாம். Purse இல் வைக்கக் கூடிய வகையில் சிறிய பாக்கெட்டுக்களிலும் காண்டங்கள் விற்கப்படுகின்றன.
உங்களுக்கு காண்டம் பெட்டியில் இருந்த மற்ற இரண்டு Condom Packet களும் தேவை இல்லை என்றால் அவற்றை தெரிவில் போட வேண்டாம். குப்பையில் எறியவும் வேண்டாம். நீங்கள் செல்லும் வழியில் உள்ள Public Toilets இல் எங்காவது வைத்து விடுங்கள். தேவை இருப்பவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.
பாவிக்காத ஆணுறைகளை பாக்கெட்டுடன் தெரிவில் போடுவதால் அவை சிறுவர்களின் கைகளில் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அவர்களின் வயதுக்கு மீறி தேட அவர்களை தவறாக வழி நடாத்தலாம்.
Recommended: ஆண்கள் காண்டம் பயன்படுத்துவது எப்படி?
ஆண்கள் காண்டம் அணியும் போது காண்டத்தின் நுனியினுள்(Tip of the Condom) காற்று உட்புகாத வகையில் அதனை அழுத்திக் கொண்டு அணிய வேண்டும். காண்டத்தினுள் காற்று உட்புகுந்து இருந்தால், ஓக்கும் போது காண்டம் வெடித்துக் கிழியும்.
காண்டம் அணியும் முன்னர், ஆண்குறி முழுமையாக விறைப்படைய வேண்டும். அதே நேரம் காண்டம் அணியும் முன்னர், ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்க வேண்டும்,
Recommended: ஆண்கள் காண்டம் அணிவது எப்படி?(18+)
Keywords: Condom, Condom Box, Condom Packets, Gay Sex, Anal Sex, Oral Sex
Comments
Post a Comment