இந்தக் காலத்திலும் கோவணம் கட்டும் ஆண்கள் இருக்கிறார்கள் என்றால் உங்களுக்கு சில வேளைகளில் ஆச்சரியமாக இருக்கலாம். ஆமாம் இன்றும் சில ஆண்கள் கோயிலுக்குச் செல்லும் போது கோவணம் அணிந்து வேட்டி கட்டுகிறார்கள்.
சில மதத்தலங்களுக்கு ஊசி நுழைத்து தைக்காத ஆடை அணிந்து செல்ல வேண்டும். அப்படி ஊசி நுழைத்து தைக்காத ஆடைகளாக கதைத்தெறி நெசவு செய்த வேட்டி/லுங்கியையும், தைக்காத உள்ளாடையாக கோவணத்தையும் கருதலாம்.
சில லங்கோடுகளில் இடுப்பைச் சுற்றிக் கட்டும் கயிறு தைக்கப்பட்டிருக்கும். சில லங்கோடுகள் Single Piece துணியாகவும் இருக்கும். ஆனால் கோவணம் எப்போதுமே Single Piece துணிதான்.
மக்காவுக்கு(Makkah) மதக்கடைமைகளை நிறைவேற்றச் செல்லும் முஸ்லிம்/இஸ்லாமிய ஆண்கள் இவ்வாறு தைக்காத கைத்தறி நெசவு செய்யப்பட்ட துணைகளை மாத்திரம் அணிவர். அதனை "இஹ்ராம்"(Men's ihram clothing consists of two white cloths, without seams, hems or buttons) என்பர்.
இது இரண்டு பாகங்களாக இருக்கும். தொப்புளுக்கு கீழ் கணுக்காலுக்கு மேல் உடைலை சுற்றி மறைக்கும் ஆடையை "izar" என்பர். இடதுபக்க தோள் மற்றும் மார்பை மறைக்கும் வகையில் இடுப்புக்கு மேலே உடலை சுற்றி அணியும் ஆடையை "rida" என்பர்.
முஸ்லிம் ஆண்கள் இஹ்ராம் அணியும் போது ஜட்டி அணியக் கூடாது என்பது நியதி. ஆனால் கோவணம் அணியலாமா? உங்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு இல்லாவிட்டால், ஒரு வெள்ளைத் துணியைக் கிழித்து கயிறு போல இடுப்பில் கட்டிக் கொண்டு, அதன் உதவியுடன் கோவணம் அணிந்தால் தவறா? தைக்காத உள்ளாடை தானே? அணிந்தால் என்ன?
பெரிய ஆண்குறியை உடைய ஆண்களால் ஜட்டி அணியாது ஒரு துண்டை மாத்திரம் இடுப்பில் சுற்றிக் கொண்டு திரிவது சில வேளைகளில் அசெளகரியமாக இருக்கலாம். முடிவை உங்களிடமே விடுகிறோம்! யாரும் உங்கள் இடுப்புத் துண்டை அவுத்துப் பார்க்கப் போவதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஆண்களின் ஜட்டியானது ஆண்களின் அந்தரங்கப் பகுதிக்குக் கொடுக்கும் Support யை கூட்டிக் குறைக்க முடியாது. ஆனால் கோவணம், லங்கோட் அணியும் போது அவற்றின் இறுக்கத்தை தமது செளகரியம், தேவைக்கு ஏற்றாற் போல மாற்றியமைக்க முடியும்.
Keywords: Clothes for Hajj, யாத்திரை செல்லும் ஆண்கள் ஜட்டி அணியலாமா? Men Single Piece Underwear, Men Unstitched Underwear, Unsewed Underwear, Men Underwear without Seams, ஆண்களுக்கான தைக்காத உள்ளாடை எது? ஆண்களுக்கான தைக்காத ஆடை
Comments
Post a Comment