ஆண்களின் ஜட்டிகளின் வகைகள் தொடர்பில் முந்தைய பதிவுகளில் விரிவாகப் பார்த்தோம். அவற்றின் தோற்றத்தைத் தவிர, ஆண்களின் ஜட்டி வகைகளுக்கிடையிலான முக்கியமான வித்தியாசமே இந்த Inseam Length ஆகும். நீங்கள் தெரிவு செய்து அணியும் ஜட்டி எந்த வகை ஜட்டி என்பதை Inseam Length யை அளப்பதன் மூலமே தெரிந்து கொள்ளலாம்.
அதற்குக் காரணம் ஒவ்வொரு ஜட்டி கம்பெனிகள் ஒவ்வொரு வகையான அளவு முறைகளை வைத்து ஜட்டியை உருவாக்குவதனால் ஆகும்.
உங்களுக்கான Perfect Fitting Underwear யைத் தெரிவு செய்யும் தேடலில் இந்தப் பதிவு உங்களுக்கு ஆண்கள் ஜட்டி தொடர்பில் மேலும் சில அரிய தகவல்களைக் கொடுக்கும்.
Underwear Inseam Length என்றால் என்ன? ஆண்களின் தொடை இடுக்குப் பகுதியில் இருந்து ஜட்டியின் கால் ஓட்டை வரையிலான நீளம். The inseam is simply the length from the crotch to the bottom of the leg opening. இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால், Middle of the Crotch to end of the Leg opening of the Underwear.
ஆண்கள் ஜட்டியின் Inseam Length இன் அடிப்படையில் அவற்றைக் கீழ் உள்ளவாறு வகைப்படுத்தலாம்.
Inseam Length of Underwear in Inches
0" = Briefs
1" = Square-Cut Trunks
2 - 3.5" = Trunks
4 - 6.5" = Boxer Briefs
7 - 9" = Long-Leg Boxer Briefs
இதனை மனதில் வைத்துக் கொள்வதன் மூலம் உங்களால் இலகுவாக Trunk ஜட்டியையும் Boxer Brief ஜட்டியையும் வேறு பிரித்து அறிய முடியும்.
இந்தக் காலத்து ஆண்களின் ஜட்டி தெரிவாக Trunk Underwear இருப்பினும் அதனை எப்படி Boxer Brief Underwear இல் இருந்து பிரித்து அறிவது என்பது பலருக்குத் தெரியாது. சில கம்பெனிகள் பார்ப்பதற்கு இரண்டும் ஒரே மாதிரி இருக்கும் வகையில் Trunk மற்றும் Boxer Brief ஜட்டிகளை உற்பத்தி செய்வது உண்டு.
ஆண்களின் ஜட்டியின் Inseam Length தொடர்பான இந்த அறிவைப் பெற்றுக் கொண்டதன் மூலம் நீங்கள் வாங்குவது எந்த வகை ஜட்டி என்பதை இலகுவாக இனங்காணக் கூடியதாக இருக்கும்.
Note: Jean/Pant Inseam அளவினைத் தெரிந்து கொள்ள ஆண்கள் அவர்களின் கணுக்கால் வரை அளக்க வேண்டும்.
Recommended: ஆண்கள் ஜட்டி தொடர்பில் மேலும் பல விடையங்களைத் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
Comments
Post a Comment