ஒரு ஜட்டி போட்டுக் கொண்டு நாள் முழுக்க இருக்க எரிச்சலாக இருக்கு, இதுல இரண்டு ஜட்டி போடனுமா? டேய் எப்றா? ன்னு நீங்க கேட்பது எங்களுக்குப் புரிகிறது. வாஸ்தவம் தான்.
ஆனால் இது சாத்தியமே! பொதுவாகவே Jockstrap ஜட்டி, Thong ஜட்டி அணியும் கூச்ச சுபாவம் உள்ள ஆண்கள் அதன் மேல், தமது பிட்டப்பகுதியை மறைப்பதற்காக, தளர்வான Boxer Briefs ஜட்டியை அணிவர்.
குளிர் பிரதேசங்களில் வசிக்கும் ஆண்கள் ஜட்டி அணிவதன் மூலம் குளிரின் தாக்கத்தை குறைக்க முடியும். குளிர்/பனிப் பிரதேசங்களில் வசிக்கும் ஆண்கள் அன்றாட வாழ்க்கையில் கூட Jockstrap ஜட்டி பயன்படுத்தலாம். அது அவர்களின் விந்து உற்பத்தியை சீராக மேற்கொள்வதற்குத் தேவையான வெப்ப நிலையை உருவாக்கும். ஆனால் அதிக வெப்பமான பிரதேசங்களில் வசிக்கும் ஆண்கள் Jockstrap ஜட்டியை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவது அவ்வளவு உகந்தது அல்ல.
Cricket, Football போன்ற விளையாட்டுக்கள் விளையாடும் சில ஆண்கள் Ball Guard யைப் பயன்படுத்தும் போது, Ball Guard இனால் தமது ஆண்குறி முழுமையாக Protect செய்யப்படுவதை உறுதி செய்ய முதலில் Briefs or Trunk ஜட்டி அணிந்து அதன் மேலே Jockstrap ஜட்டியினுள் Ball Guard யை வைத்து அணிவர். இவ்வாறு அணிவதன் மூலம் ஆண்குறியும் விதைகளும் முதல் அணிந்த ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்டு Ball Guard இனுள் தங்கும். Ball Guard யை Adjust செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் நடு Ground இல் வைத்துக் கூட எந்தவொரு தயக்கமும் இல்லாமல் பேண்டைக் கழட்டலாம்.
கை வசம் Jockstrap ஜட்டி இல்லாவிட்டால், Jockstrap ஜட்டி அணிந்தது போல உங்கள் அந்தரங்கப் பகுதிகளுக்கு Support யைப் பெற்றுக் கொள்ள ஆண்கள் இரண்டு ஜட்டிகள் அணியலாம்.
அதன் காரணமாகவே ஆண்கள் Jockstrap ஜட்டியை Supporter ஜட்டி என்பர்.
சில ஆண்களுக்கு என்ன தான் பார்த்துப் பார்த்து ஜட்டியைத் தெரிவு செய்து அணிந்தாலும் முன் பக்கம் Flat ஆக இருக்கும். அவ்வாறு இருக்கும் ஆண்கள் Low Rise Brief ஜட்டியைத் தெரிவு செய்து அணிய வேண்டும், அல்லது முன் பக்கம் Pouch வைத்த ஜட்டியைத் தெரிவு செய்து அணிய வேண்டும். இல்லாவிட்டால், தற்காலிக தீர்வாக இரண்டு ஜட்டிகள் அணியலாம்.
Grower Type ஆண்குறியை(வளரும் வகை ஆண்குறி) உடைய ஆண்கள் தமது Bulge யை மேலும் உப்பலாகக் காண்பிக்க Low Rise Brief ஜட்டி அணிந்து அதன் மேலே Boxer Briefs ஜட்டியை அணிவர்.
Low Rise Brief ஜட்டியும் ஆண்கள் அதன் மேலே முன் பக்கம் Open/Fly வைத்த Mid Rise or High Rise Brief Underwear களையும் அணியலாம்.
உங்களுக்குத் தெரியுமா? இயல்பு நிலையிலேயே நீளமான Shower Type ஆண்குறியை உடைய ஆண்கள் ஜட்டியினுள் ஆண்குறியை கீழ் நோக்கி, தொடைகளுக்கு நடுவே வைப்பர். இயல்பு நிலையில் சிறிதாக இருக்கு Grower Type ஆண்குறியை உடைய ஆண்கள் ஆண்குறியை மேல் நோக்கி அல்லது வலது/இடது பக்கம் சரித்து ஜட்டியினுள் வைப்பர். ஆனால் அவர்களும் ஆண்குறியை ஜட்டியினுள் கீழ் நோக்கி வைப்பதே உகந்தது.
விளையாட்டுக்களில் ஈடுபடும் ஆண்கள், மற்றும் உடற்பயிற்சி செய்யும் ஆண்கள் Sports Tights or Compression Shorts/Pants அணியும் போது தமது ஆண்குறியின் அமைப்பை/விளிம்பை மறைப்பதற்காக உள்ளே Briefs or Trunk வகை ஜட்டி அணிவர். இதுவும் கிட்டத்தட்ட இரண்டு ஜட்டிகள் அணியும் கதைதான்.
தமது அளவை விட பெரிய ஜீன்ஸ்/பேண்ட் அணியும் ஆண்கள் இடுப்புக்குக் கீழே இறுக்கமாக காண்பிக்க, அணிந்திருக்கும் ஜட்டிக்கு மேலே Boxer Shorts ஜட்டி அணிவர்.
நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டியில் நீங்கள் எதிர்பார்க்கும் Support கிடைக்காவிட்டால், உங்களுக்கு ஏற்ற புது ஜட்டி வாங்கும் வரை இரண்டு ஜட்டிகள் அணியலாம். தப்பில்லை!
ஆகவே ஆண்கள் ஏதாவது ஒரு விசேட தேவையின் நிமித்தம் மாத்திரமே ஒன்றுக்கு மேற்பட்ட ஜட்டியை அணிவது உகந்தது. அதே நேரம் உள்ளே அணிந்திருக்கும் ஜட்டியை விட வெளியே அணிந்திருக்கும் ஜட்டி தளர்வாக இருக்க வேண்டும். இரண்டுமே இறுக்கமான ஜட்டிகளாக இருந்தால் மிகவும் அசெளகரியத்தை உண்டாக்கும். அதே நேரம் தினமும் இரண்டு ஜட்டிகள் அணிந்தால் விந்து உற்பத்தி பாதிப்படையும்.
Recommended: ஆண்கள் ஜட்டி பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
Comments
Post a Comment