ஆண்கள் தமது தேவைக்கு ஏற்ப அணியும் வகையில் வெவ்வேறு வகையான ஜட்டிகளை சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றின் பிரதான நோக்கமே சந்தர்ப்பத்திற்கு ஏற்ப ஆணின் ஆண்குறிக்கும் விதைகளுக்கும் தேவையான Support யைக் கொடுப்பதாகும்.
உங்கள் ஜட்டியில் நீங்கள் எதிர்பார்க்கும் Support கிடைக்கிறதா? அல்லது ஜட்டி அணிந்திருந்தும் அணியாதது போல இருக்கிறதா? என்னதான் பார்த்துப் பார்த்து ஜட்டியைத் தெரிவு செய்தாலும் உங்களால் ஒரு Perfect Fitting Underwear யைத் தெரிவு செய்ய முடியவில்லையா? அதற்குக் காரணம் நீங்கள் தெரிவு செய்யும் ஜட்டியின் Waistband ஆகக் கூட இருக்கலாம்!
ஆண்கள் ஜட்டியின் Waistband இன் அகலம்(Width) எவ்வாறு ஆண்கள் அணிந்திருக்கும் ஜட்டியினால் ஆண்களுக்குக் கிடைக்கும் Support இல் செல்வாக்குச் செலுத்துகிறது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
எல்லா ஜட்டி Brands களினதும் Waistband(ஜட்டியின் எலாஸ்டிக் பட்டை) ஒரே மாதிரி இருக்காது. அவற்றின் அகலம் குறைந்தது 1 inch தொடக்கம் 2 inches வரை இருக்கும். அவை பொதுவாக 1 inch, 1.25 inches, 1.5 inches, 1.75 inches, 2 inches எனும் அளவுகளில் அமையும்.
ஆண்கள் ஜட்டியின் இலாஸ்டிக் பட்டியின் அகலம் குறைய குறைய அது கொடுக்கும் Support இன் அளவு குறையும். அதாவது நீங்கள் ஓடி, ஆடித் திரியும் போது, உங்கள் ஆண்குறியையும் விதைகளையும் பொட்டலமாக்கி ஓரிடத்தில் தாங்கி வைத்திருக்கும் தன்மை குறையும்.
ஆகவே மிகவும் அகலம் குறைந்த Waistband உடைய ஜட்டிகளை ஆண்கள் அணிந்து உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
நீங்கள் சாகசம் பண்ணும் போது அணிந்திருக்கும் ஆடை அவிழ்ந்தாலும், நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டி கழறக் கூடாது.
உடற்பயிற்சி செய்யும் ஆண்கள், விளையாடும் ஆண்கள் Active ஆக செயற்படும் போது 1.75 inches இக்கு அதிகமான அகலமுடைய Underwear Waistband யை உடைய ஜட்டிகளை தெரிவு செய்து அணிய வேண்டும். உதாரணமாக: Jockstrap ஜட்டிகளின் Waistband இன் அகலம் 2 inches அளவில் இருக்கும்.
Low Rise Jeans/Pant அணியும் போது ஆண்கள் அகலம் குறைந்த Waistband உடைய ஜட்டிகளைத் தெரிவு செய்து அணிவதன் மூலம் அவற்றின் Waistband, அணிந்திருக்கும் ஜீன்ஸ்/பேண்ட்க்கு வெளியே அதிகளவில் வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம்.
ஜட்டியின் Waistband வெளித்தெரியும் வகையில் உங்களுக்கு Jeans/Pant அணியப் பிடிக்குமாக இருந்தால் குறைந்தது 1.25 inches இக்கு அதிகமான அகலமுடைய Waistband உடைய ஜட்டிகளைத் தெரிவு செய்து அணிய வேண்டும்.
அகலம் கூடிய Waistband உடைய ஜட்டிகள், உங்கள் உடலுடன் நன்றாக ஒட்டிக் கொண்டிருக்கும். பொதுவாக ஜட்டியின் Waistband ஆனது Polyester or Polyamide இனால் உருவாக்கப்பட்டிருக்கும்.
அகலம் கூடிய Waistband உடைய ஜட்டி வாங்கும் போது ஜட்டியின் Waistband இன் உள்பக்கத்தைத் தடவிப் பார்த்து வாங்கவும். சிலருக்கு சிலவகை Waistband களை நீண்ட நேரம் அணிந்திருக்க முடியாது. சில வகை Fabric இனால் ஆன Waistband கள் சிலருக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும்.
High Sweating Activities or Water Activities, Outdoor இல் அதிக நேரம் செலவிடும் ஆண்கள் Synthetic Fabric(Polyester, Nylon, Polyamide) இனால் ஆன ஜட்டிகளைத் தெரிவு செய்து அணிவதன் மூலம் காற்றோட்டமாக உணர முடியும். உங்கள் ஜட்டிகள் வியர்வையில் நனைந்து ஊறாது(Repel Water), அதனால் உங்கள் உடல் எப்போதும் உலர்வாக இருக்கும்.
Work From Home/Office/Indoor களில் அதிக நேரம் செலவிடும் ஆண்கள் Briefs வகை ஜட்டிகளைத் தெரிவு செய்து அணிவது சிறந்தது. Less Material, No Bunching Up, Greater Air Circulation
மற்ற நேரங்களில் ஆண்கள் Cotton(பருத்தி) உள்ளாடைகளை அணிந்திருக்கலாம். தற்காலத்தில் Cotton யை விடவும் சிறந்த, பருத்தித் துணியை விட Soft ஆன, காற்றோட்டமான, சூழலுக்கு உகந்த Bamboo or Model ஜட்டிகளும் சந்தைகளில் கிடைக்கிறது. They are softer than cotton, better for the environment, more breathable than cotton.
குறிப்புகள்:
Mid Rise Underwear இன் ஜட்டியின் Waistband யை உள்பக்கமாக மடித்து விடுவதன் மூலம் அதனை Low Rise Underwear ஆக மாற்றலாம்.
உங்கள் ஜட்டியின் Waistband அணிந்திருக்கும் ஜீன்ஸ்/பேண்டுக்கு வெளியே அளவுக்கு அதிகமாக வெளித்தெரிவதாக இருந்தாலும் இவ்வாறு உள்பக்கமாக ஜட்டியின் Waistband யை மடித்து விடுவதன் மூலம் அது வெளித்தெரிவதைக் கட்டுப்படுத்தலாம்.
Recommended: ஆண்கள் ஜட்டி தொடர்பில் மேலும் பல விடையங்களைத் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
Comments
Post a Comment