ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ள ஆண்கள் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் அவர்களின் ராசிக்கான, அல்லது நட்சத்திரத்திற்கான அதிர்ஸ்ட நிறத்தை எப்படி அன்றாடம் பாவிப்பது என்பதாகும்.
ஒரு சிலருக்கு அவர்களின் ராசிக்கான அதிர்ஸ்ட நிறங்களைப் பற்றிய போதிய அறிவில்லாமையாலும், அவர்களின் நட்சத்திரத்திற்கான அதிர்ஸ்ட நிறங்களைப் பற்றிய போதிய அறிவில்லாமையாலும் தினப்பலன்களைப் பார்த்து அதிர்ஸ்ட நிறங்களைத் தெரிவு செய்வர். ஆனால் உண்மையில் தினப்பலன்கள் என்பது பொதுப் பலன்களாகும். ஆகவே எப்போதும் உங்கள் ராசி, நட்சத்திரத்திற்கான அதிர்ஸ்ட நிறங்களை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவதே சிறந்தது.
ராசி, நட்சத்திரங்களுக்கான அதிர்ஸ்ட நிறங்களை எப்படிப் பயன்படுத்தலாம்? அந்த நிறங்களில் Shirt, Pant போன்ற ஆடைகளை வாங்கி அணியலாம். ஆனால் எல்லா நிறங்களும் எல்லாருக்கும் அழகாக இருக்குமா? என்றால், இல்லை என்பதே உண்மை!
நட்சத்திரத்திற்கான அதிர்ஸ்ட நிறங்களை கட்டாயம் வஸ்திரமாகவே(ஆடை) அணிய வேண்டும். இராசிக்கான அதிர்ஸ்ட நிறங்களை வேண்டும் என்றால் Men Accessories ஆகவும் பயன்படுத்தலாம். ஆனால் பொதுவாக அதிர்ஸ்ட நிறங்களை வஸ்திரமாகவே அணிவர். அந்த வகையில் அந்த வஸ்திரங்கள் கட்டாயம் Shirt, Pant, Veshti, T-Shirt போன்ற மேலாடையாகத் தான் இருக்க வேண்டும் என்றில்லை. அவை உங்களின் உள்ளாடைகளாகவும் இருக்கலாம்.
ஆண்கள், அவர்களின் அதிர்ஸ்ட நிறத்தில் ஜட்டி, கோவணம், பனியன், Socks போன்ற உள்ளாடைகளைத் தெரிவு செய்து அணியலாம். உங்க அனுமதியில்லாமல் யாரும் உங்களை அவுத்துப் பார்க்கப் போவதில்லை. ஆகவே தாராளமாக உங்கள் ராசி, நட்சத்திரத்திற்கான அதிர்ஸ்ட நிறங்களில் உள்ளாடைகளை வாங்கி அணியலாம்.
உங்க அதிர்ஸ்ட நிறத்தில கடைகளுக்குப் போய் தான் ஜட்டி பனியன் வாங்க வேண்டும் என்றில்லை. தற்காலத்தில் Online இலும் Order செய்து வாங்கலாம்.
ஒரே நிறத்தில் ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகளை அணிய விருப்பம் இல்லையா? அப்படியென்றால் உங்கள் ராசி, நட்சத்திரத்திற்கான அதிர்ஸ்ட நிறங்களில் கைக்குட்டை(Kerchiefs) பயன்படுத்தலாம்.
எந்த நட்சத்திரத்திற்கு எந்த நிறம் அதிர்ஸ்டத்தை அள்ளித் தரும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்களுக்கான அதிர்ஸ்ட நிறங்கள்.
எந்த லக்னம் மற்றும் ராசிக்கு, எந்த நிறம் நன்மை அளிக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
மேஷ லக்னம்/ராசி
மேஷ லக்னம் மற்றும் ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். இவர் சிவப்பு நிறத்திற்குச் சொந்தக்காரர். எனவே இந்த ராசிக்காரர்கள் சிவப்பு நிறத்தை பயன்படுத்தலாம். இது முதல் தரமான, அதிர்ஷ்டத்தை உங்களுக்கு அளிக்கும். சிவப்பு நிறத்தைத் தொடர்ந்து, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ரிஷபம் லக்னம்/ராசி
சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ள ராசி ரிஷப ராசி ஆகும். இந்த ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள் வெள்ளை, நீலம் மற்றும் பச்சை நிறத்தைப் பயன்படுத்த அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
மிதுனம் லக்னம்/ராசி
புதனின் ஆதிக்கத்தில் உள்ள மிதுன ராசி மற்றும் லக்னத்தைச் சேர்ந்தவர்கள், பச்சை, வெள்ளை மற்றும் நீல நிறத்தைப் பயன்படுத்தினால், அதிர்ஷ்டம் பெருகும்.
கடகம் லக்னம்/ராசி
சந்திரனின் ஆதிக்கத்தில் உள்ளது இந்த கடகம். கடக ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள், மங்கிய வெண்மை, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்த அதிர்ஷ்டம் பெருகும்.
சிம்மம் லக்னம்/ராசி
சூரியனின் ராசியாக இந்த சிம்ம ராசி உள்ளது. இந்த சிம்ம ராசி மற்றும் லக்னத்தைச் சேர்ந்தவர்கள், மங்கிய வெண்மை, மஞ்சள் மற்றும் வெளிர் ஆரஞ்சு நிறத்தைப் பயன்படுத்த அதிர்ஷ்டம் உண்டாகும்.
கன்னி லக்னம்/ராசி
புதனின் ஆதிக்கத்தில் உள்ள கன்னி ராசி மற்றும் லக்னத்தைச் சேர்ந்தவர்கள், பச்சை, வெள்ளை மற்றும் நீல நிறத்தைப் பயன்படுத்தினால், அதிர்ஷ்டம் பெருகும்.
துலாம் லக்னம்/ராசி
சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ள ராசி துலாம் ராசி ஆகும். இந்த ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள் வெள்ளை, நீலம் மற்றும் பச்சை நிறத்தைப் பயன்படுத்த அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
விருச்சிகம் லக்னம்/ராசி
விருச்சிக லக்னம் மற்றும் ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். இந்த ராசிக்காரர்கள் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தனுசு லக்னம்/ராசி
தனுசு லக்னம் மற்றும் ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். இந்த ராசிக்காரர்கள் தங்க நிறம், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மகரம் லக்னம்/ராசி
மகர லக்னம் மற்றும் ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். இந்த ராசிக்காரர்கள் கரு நீலம், வெண்மை மற்றும் பச்சை நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கும்பம் லக்னம்/ராசி
கும்ப லக்னம் மற்றும் ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். இந்த ராசிக்காரர்கள் கரு நீலம், வெண்மை மற்றும் பச்சை நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மீனம் லக்னம்/ராசி
மீனம் லக்னம் மற்றும் ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். இந்த ராசிக்காரர்கள் தங்க நிறம், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Keywords: லக்கி நிறம், கலர் டிரஸ், Underwear Astrology, Zodiac, Stars, Natchathiram, Nakshatra
Comments
Post a Comment