லுங்கி, அதனை அணியும் வரை தான் ஆண்களைப் பொறுத்தவரையில், அது இழக்கமான ஆடை. ஒரு முறை அணிந்து அதனால் கிடைக்கும் சுகத்தை உணர்ந்தவனுக்கு அது ஒரு பொக்கிஷம். நமது நாட்டின் கால நிலைக்கும் ஆண்களுக்கு உகந்த ஆடை லுங்கியாகும்.
1. நாம் வாங்கும் லுங்கி காட்டனா(Cotton-பருத்தி) இல்லையா என்பதைத் தான் முக்கியமாக பார்க்க வேண்டும். அதற்குக் காரணம் Polyester இலும் லுங்கிகள் செய்யப்படுகின்றன. இவை காட்டன் லுங்கிகளைப் போல காற்றோட்டமாக இருக்காது. பாலியெஸ்டர் லுங்கிகளை அணியும் போது இடுப்புக்குக் கீழே ஒரு அவிச்சலாகவும் எரிச்சலாகவும் இருக்கும். அதே நேரம் வியர்வை அதிகமாக இருப்பதால் அந்தரங்கப் பகுதி ஈரலிப்பாக, பிசுபிசுப்பாக இருக்கும். 100% பருத்தியினால் ஆன லுங்கியை அணிவதன் மூலமே லுங்கியில் Comfortable ஆக நாள் முழுவதும் இருக்க முடியும்.
2. லுங்கியின் நிறம், மற்றும் Design: லுங்கியில் பலவிதமான Shades கிடைக்கிறது. ஆனால் அநேகமானவை Checked(கட்டம் போட்ட) Design லயே கிடைக்கிறது. கோடு போட்டது போன்ற Design லும் கிடைக்கிறது. உங்களுக்கு எடுப்பான தோற்றத்தைக் கொடுக்கும் நிறங்களைத் தெரிவு செய்வது நல்லது. ஜட்டி அணியாது லுங்கி கட்டும் ஆண்கள், சற்று இருட்டான(Dark Colors) நிறத்தில் லுங்கியை வாங்குவது நல்லது.
ஜட்டி அணியாது Light Colors இல் லுங்கி அணிந்து வெளிச்சமான இடங்களில் நிற்கும் போது, வெளிச்சம் லுங்கியை ஊடுருவி, உங்கள் தொடைகளுக்கு நடுவே உங்கள் அந்தரங்கம் ஊஞ்சல் ஆடுவதை அப்பட்டமாக வெளிக்காட்டும். Dark Colors லுங்கியை தெரிவு செய்வதன் மூலம் லுங்கியில் ஏற்படும் அழுக்குகள், கறைகள் Light Colors லுங்கிகள் போல வெளித்தெரியாது.
3. நாம் வாங்கும் லுங்கியின் Length, குறைந்து 2 மீட்டர்களுக்கு அதிகமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் லுங்கியை அணிய கடினமாக இருக்கும். அதே நேரம் 2 மீட்டர்களுக்கு குறைவான Length உடைய லுங்கியை அணிந்து நடப்பதற்கு அசெளகரியமாக இருக்கும்.
4. எத்தனை முறை லுங்கியைத் துவைத்த பின்னர் உங்கள் உடலுடன் உறவாடும் அளவுக்கு லுங்கியின் துணி Soft ஆகும் என்பதையும் விசாரித்து வாங்கவும். சில லுங்கிகளை எத்தனை முறை தோய்த்தாலும் Soft ஆகாது.
5. வாங்கும் போது ஒரு லுங்கி வாங்காமல், Combo Pack(2 லுங்கி, 4 லுங்கி) களில் வாங்குவதன் மூலம் விலை சலுகைகள் கிடைக்கும்.
6. லுங்கியின் கரைகள் மற்றும் அடிகளில் Stitching உள்ளதா என்பதைப் பார்க்கவும். காட்டன் துணிகளில் இவ்வாறு Stitching இல்லாவிட்டால், சில காலங்களில் நூல் நூலாக கழற ஆரம்பிக்கும். ஆகவே ஒரு டெய்லரிடம் கொடுத்து மேலும் கீழும் டைல் அடிப்பது நல்லது.
7. சிறுவர்களுக்கான லுங்கிகள், பெரியவர்களின் லுங்கியை விட அளவுகளில் சிறிதாக இருக்கும்.
8. லுங்கியை டெய்லரிடம் கொடுத்து அவற்றின் இரு முனைகளையும் ஒரு Tube போன்று மூட்டுவதன் மூலம் லுங்கியை சாரமாக(Sarong) மாற்றலாம். லுங்கியை லுங்கியாக அணிவதை விட அதனை சாரமாக மூட்டி அணிவது ஆண்களுக்கு பல்வேறு வகைகளில் உதவியாக இருக்கும்.
9. சில சாரங்கள், Batik துணியில் பல்வேறு அலங்கார வேலைப்பாடுகளுடனும் விற்பனைக்கு உள்ளது.
இந்தியாவில் விற்கும் Top 5 Men's Lungi Brands
1. Nandu Lungis
2. Sangu Lungis
3. Uzhaippal Lungis
4. BLUE Leaf Lungis
5. BlueMen Lungis
6. KITEX Lungis
7. Aristo Lungis
8. Blumfye Lungis
உங்களுக்கு லுங்கி கட்ட தெரியுமா? லுங்கி கட்டுவது எப்படி(Video Guides)? சாரம் கட்டுவது எப்படி? லுங்கி அணியும் போது உள்ளே ஜட்டி அணிய வேண்டுமா? லுங்கி அணிவதன் மூலம் கிடைக்கும் அனுகூலங்கள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
Comments
Post a Comment